search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
    X

    தீயணைப்புதுறை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட காட்சி.

    வெள்ளகோவில் தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

    • குடிசை பகுதி மற்றும் தீ எளிதில் பற்றி கொள்ளும் அபாயம் உள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
    • கண்டிப்பாக சப்பல் அணித்து பட்டாசு வெடிக்க வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தீயணைப்பு நிலை அலுவலர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் பட்டாசுகளை வீட்டினுள் வெடிக்க கூடாது.

    குடிசை பகுதி மற்றும் தீ எளிதில் பற்றி கொள்ளும் அபாயம் உள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள், அவர்களை பாதுகாப்பாக உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் கண்டிப்பாக சப்பல் அணித்து பட்டாசு வெடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெள்ளகோவில் நகர் பகுதியில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    Next Story
    ×