search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awareness meeting"

    • அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
    • மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். 

    • போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது
    • மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குவது குறித்து ஆலோசனை

    நெமிலி:

    ராணிப்பேட்டைமாவட்டம்,காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி அலுவலக வேலை நேரங்களான காலை 8 முதல் 11 மணிவரையிலும் மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள நேரங்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குதல் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், போலீசார்,வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமையில் நடைபெற்றது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் கலந்து கொண்ட பெண்களிடம், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகள், பெண்களுக்கான நீதிகள், அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவர் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் ராஜாமணி, பணித்தள பொறுப்பாளர் சோபனா, ஊர் நாட்டாமைகள் செந்தூர் கனி, பரமசிவன், கிருஷ்ணன், பம்ப் ஆப்ரேட்டர் ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்
    • வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரிவித்தார்

    சோளிங்கர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழகம் சார் பில் வருவாய் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியா ளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற் பொறியாளர் உமாசந்திரா முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் வரவேற்றார்.

    வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு வருவாய் மேம்ப டுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல் வேறு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் பணியின் போது தேவையான உபகர ணங்கள் வைத்திருத்தல், விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.

    உதவி பொறியாளர்கள், மதிப்பீட்டு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், வருவாய் மேற்பார்வையாளர்கள், கணக்கீட்டு கண்காணிப்பா ளர்கள், கணக்கீட்டாளர்கள் மற்றும் கோட்ட கண்காணிப் பாளர்கள் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக சோளிங்கர் மின் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு குறைகளை கேட்ட றிந்தார். வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரி வித்தார்.

    • வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது.
    • விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமமும் ரத்து செய்யப்படும்.

    காங்கயம் :

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களைப்பதிவு செய்வது மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கி பேசியதாவது:- மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் மட்–டுமே. உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடங்களில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீரை சேகரித்துக்கொண்டு செல்வது விதிகளுக்கு முரணானது. உரிமை பெற்றவரின் வாகனத்தில் மட்டுமே கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

    மேலும் உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்தக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகளை அனுப்புவதையும் உறுதி செய்யவேண்டும். கழிவுநீர் அகற்றும் நேரம், வழி ஆகியவற்றைப் பின்பற்றி குறிப்பிட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே காங்கயம் பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகளை சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவு நீரைக்கொட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் காங்கயம் பகுதியைச்சேர்ந்த கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

    • திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்தது
    • வாகனங்கள் இயக்கும் முறை, பாதுகாப்பான வேகத்தில் செல்வது குறித்து அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி இருந்தார்.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் அரசு கலைக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    விழிப்புணர்வு கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர். டாக்டர் விஜயராஜ் தலைமை வகித்தார் மற்றும் கல்லூர் பேராசிரியர்கள்.

    மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வாணியம்பாடி போக்கு வரத்து அலுவலர்.ராமகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் மற்றும் விபத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களை திரையிட்டு மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும், சாலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வாகனங்க ள்இயக்கும் முறை சரியான பாதுகாப்பான வேகத்தில் செல்லுதல், சாலையில் செய்யக்கூடாத தவறுகள், குறித்து எடுத்துரை க்கப்பட்டது.

    மாணவர்கள் அவர்கள் எதிர்காலம் கருதி மிகவும் பாதுகாப்பான முறையில் சாலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    உடுமலை :

    கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும் அதிகப்படியான பனிப்பொழிவினாலும் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருக தொடங்குவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால்திருப்பூர் வனக்கோட்டத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம் பட்டி,கோடந்தூர்,பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும்,வன எல்லையில் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி கோடந்தூர்,தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும்,குதிரையாறு அணை தொடக்கப்பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.இதில் உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ்,கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    • மருந்து வணிகர்கள் சமூக சீர்கேட்டிற்கு துணை போய்விடக்கூடாது என மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக உதவி இயக்குநர் பேசினார்
    • மருந்து வணிகர்கள் மருத்துவர் கையொப்பமிட்ட ரசீதுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்க வேண்டும்.

    கரூர்:

    கரூரில் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறையின் திருச்சி மேற்கு மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதைக்கு தவறாக பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகளை மருந்து வணிகர்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் சௌகத்அலி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ரவி, புரவலர் வள்ளியப்பன், மொத்த மருந்து வணிகர் சங்கத்தலைவர் சேகர், துணைத்தலைவர் இளங்கார்த்திகேயன், துணைச் செயலாளர் பாலு, நிர்வாகி சாய்தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறையின் திருச்சி மேற்கு மண்டல உதவி இயக்குநர் அதியமான் பங்கேற்று பேசுகையில்:- மருந்து வணிகர்கள் மருத்துவர் கையொப்பமிட்ட ரசீதுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்க வேண்டும். மருத்துவரின் அனுமதிச் சீட்டுடன் வரும்போது மருந்து பொருட்கள் கொடுத்துவிட்டு அந்த சீட்டில் மருந்து வழங்கப்பட்டுவிட்டது என சீல் வைக்க வேண்டும்.

    சிலர் போலியான மருத்துவ சீட்டை கொண்டு வந்து மருந்து வாங்க வந்தால் உடனே மருந்துவத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் புனிதமான இந்த வணிகத்தை தவறாக பயன்படுத்திடக்கூடாது.சமூக சீர்கேட்டிற்கு துணை போய்விடக்கூடாது. தவறான செயலில் ஈடுபட்டால் மருந்து கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பையெல்லாம் அரசு வெளியிட்டுள்ளது. எனவே மருந்து வணிகர்கள் மருந்து விற்பனையில் கவனமாக இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மருந்து வணிகர்கள் திரளாக பங்கேற்றனர்.

    • சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதல் வகுப்பறை வசதி செய்து கொடுக்கபட்டுள்ளதாக ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.


    சங்கரன்கோவில்:


    சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெல்லை மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், பெங்களூர் குழந்தை உரிமையும் நீங்களும், மக்கள் நல்வாழ்வு இயக்கம் இணைந்து குழந்தைகளுக்கான நல வாழ்வு மேம்பாட்டிற்கு சமூக நலத்துறை, சுகாதார துறை மற்றும் கல்வி துறை ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


    கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரிமுத்து, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை களம் ராதா வரவேற்று பேசினார். மனித உரிமை களம் இயக்குனர் பரதன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.


    கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-


    குழந்தைகள் தான் நம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க கூடியவர்கள். அவர்களுக்கு நல்ல சத்துணவு, மருத்துவம், தரமான கல்வி ஆகிய மூன்றும் கிடைப்பதற்காக இந்த 3 துறையில் உள்ளவர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பை அரசு முழுமையாக நடைமுறை ப்படுத்தி வருகிறது.


    ஒவ்வொரு பள்ளியிலும் சென்று கூடுதல் வகுப்பறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கபட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறை மூலம் இணைந்து செயல் படுகிறது. குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 அனைத்து பாட புத்தகத்தில் அச்சிட்டுவழங்கப்படுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறை பாட்டை போக்க சட்ட மன்றத்தில் குரல் எழுப்பபடும்.


    இவ்வாறு அவர் பேசி னார்.


    தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, மக்கள் நல்வாழ்வு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், , சங்கரன் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சந்திரா, கரிவலம்வந்தநல்லூர் அரசு மருத்துவர் சரவண குமார், குருவிகுளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா, மேலநீலிதநல்லூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி, ஊர் நல விரிவாக்க அலுவலர் பானு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.


    இதில் தலைமை ஆசிரி யர்கள், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவி குளம் ஆகிய ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், சுகாதார மேற் பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெண்கள் பாதுகாப்பு துறை பணியாளர்கள், கிராம வார்டு உறுப்பினர்கள், சங்க பெண்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர்.


    ஏற்பாடுகளை நெல்லை மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், மக்கள் நல்வாழ்வு இயக்கம், பெங்களூர் குழந்தை உரிமையும் நீங்களும் அமைப்பினர் செய்திருந்தனர். மனித உரிமை களம் பணியாளர் வேலம்மாள் நன்றி கூறினார்.


    • புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது மாணவிகள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், செய்திகளை உள்ளார்ந்து உற்று நோக்கும் திறனை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்து பயிற்சியையும், ஏன் எப்படி என்ற சிந்தனை அனைத்திலும் புதுமையான முயற்சிகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இடையே அடிப்படை எண் மற்றும் எழுத்து அறிவை மேம்படுத்த மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மழலைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பொறுப்பு பாலாம்பிகா மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்

    • அரசு கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்க ளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
    • போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி பெண்களுக்கான பாதுகாப்பு என்ற தலைப்பிலும், திருச்செங்கோடு வக்கீல் மோகனா பெண்களுக்கான சட்ட உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை யாற்றினார்கள்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது. போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி பெண்களுக்கான பாதுகாப்பு என்ற தலைப்பிலும், திருச்செங்கோடு வக்கீல் மோகனா பெண்களுக்கான சட்ட உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை யாற்றினார்கள்.

    ெதாடர்ந்து மாணவிகள் கணிஷ்மா, தாரணி, கிருத்திகா, சந்தியா, ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் பேராசிரியர்கள் அருணாசலம், வைரமணி, யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • விவசாயிகள் மற்றும் வியா பாரிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • தேசிய வேளாண்சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் மூலம் நடைபெறும் ஏலத்தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் மற்றும் வியா பாரிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மத்திய அரசு வேளாண்மை விற்பனை மற்றும் மேலாய்வு இயக்குனரகத்தின் சென்னை அலுவலக துணை வேளாண் விற்பனை ஆலோசகர் கோவிந்த ரெட்டி, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) நாசர் மற்றும் நாமக்கல் விற்பனை குழு செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு

    மின்னனு தேசிய வேளாண்

    சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் மூலம் நடைபெறும் ஏலத்தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    இதில், விற்பனை ஆலோ சகர் கோவிந்தரெட்டி பேசுகையில், மத்தியஅரசு விவசாயிகள் நலன் கருதி வார்டு திட்டத்தின் கீழ் வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு நிதியை அதிக அளவில் வழங்கி உள்ளது. வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு நிதியில் பெண்களுக்கு 33.3 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். எனவே இத் திட்டத்தினை விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்கா ணிப்பாளர் யோகானந்த், மேலாளர் ராஜாக்கண்ணு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    ×