search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvIND"

    மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். காலையில் லேசாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இதை பயன்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அசத்தினார். முதல் ஓவரிலேயே ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக்கும், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அஜித் அகர்கரும் 6 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் சாஹல் இணைந்துள்ளார்.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆடும் லெவனில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். #AUSvIND #TeamIndia #VijayShankar
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.



    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்

    ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,

    கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.  #AUSvIND #TeamIndia #VijayShankar
    அடிலெய்டு ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தோடு ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் நடால் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  2-வது போட்டி அடிலெய்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணி மெல்போர்ன் வந்தடைந்தது. அப்போது ஓய்வு நேரத்தில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நடால் - மேத்யூ எப்டன் மோதிய 2-வது சுற்று ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். இதில் நடால் 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    நடால் போட்டியை பார்த்த போட்டோவை ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    மெல்போர்னில் நாளை நடக்கும் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபடும்.

    ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இடம்பிடித்திருந்தார். அவர் இரண்டு போட்டிகளிலும் 109 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய ஆடும் லெவன் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆடம் ஜம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேன்டர்ப் காயம் அடைந்துள்ளதால், பில்லி ஸ்டேன்லேக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2. அலெக்ஸ் கேரி (துணைக்கேப்டன்), 3. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 4. கவாஜா, 5. ஷான் மார்ஷ், 6. மேக்ஸ்வெல், 7. ரிச்சர்ட்சன், 8. பீட்டர் சிடில், 9. பில்லி ஸ்டேன்லேக், 10. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 11. ஆடம் ஜம்பா.
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெறுகிறது. #AUSvIND #ViratKohli #MSDhoni
    மெல்போர்ன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டுவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை (18-ந்தேதி) நடக்கிறது.

    கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 299 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    தமிழக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆவாரா? என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் ரன்களை வாரி கொடுத்தார். இதனால் அவர் இடத்தில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.



    பேட்டிங்கில் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல மிடில் ஆர்டர் வரிசையில் தினேஷ் கார்த்திக் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    பந்து வீச்சில் புவனேஷ் வர்குமார், முகமது‌ஷமி நல்ல நிலையில் உள்ளனர். குல்தீப் யாதவ் பந்து வீச்சு சுமாராக இருப்பதால் அவர் இடத்தில் யசுவேந்திர சாஹல் இடம் பெறலாம்.

    டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போலவே ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    பேட்டிங், மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் ஷான்மார்ஷ், ஹேண்ட்ஸ் கோம், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் ஆகியோரும், பந்து வீச்சில் ரிச்சர்ட்சன், பெகரன்டார்ப் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டெஸ்ட் தொடரை இழந்த மாதிரி ஒரு நாள் தொடரை இழந்து விடக்கூடாது என்பதற்காக அந்த அணி வெற்றிக்கு கடுமையாக போராடும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது போட்டியாகும். இதுவரை நடந்த 130 போட்டியில் இந்தியா 46-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. சோனிசிக்ஸ், சோனி டென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  #AUSvIND #ViratKohli #MSDhoni
    அடிலெய்டில் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என அணி விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி - டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சிறப்பாக விளையாடி சதம் அடித்த விராட் கோலி 112 பந்தில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்திருந்தது. 38 பந்தில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். அப்போது டோனி 34 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தார்.

    தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். டோனி 20 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்குப்பின் நிருபர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், தன்னை 6-வது இடத்தில் களம் இறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘டோனி இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அடிலெய்டு இன்னிங்ஸ் போன்று அவர் ஏற்கனவே பலமுறை விளையாடியுள்ளார். ஆகவே. டோனி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிப்பதை பார்க்க சிறப்பாக இருந்தது. நெருக்கடியை புரிந்துகொண்டு, சரியான நேரம் வரும்போது எதிரணிக்கு பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். இதுதான் எப்போதும் அவருடைய பலம். அடிலெய்டு போட்டி அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

    அவருடைய திட்டம் அவருக்குத் தெரியும். என்னுடைய திட்டம் எனக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருந்தோம். இன்னும் 10 ஓவர்கள் இருக்கிறது. அதில் எப்படி ரன்கள் அடிப்பது என்று டோனி நினைக்கவில்லை. ஆனால், தற்போது பந்து வீச்சாளர் எப்படி பந்து வீசுகிறார் என்பது குறித்துதான் யோசித்தார்.

    கடைசி ஓவரில் ஒரு பந்தை வெற்றிகரமாக தூக்கியடித்தால் போதும் என்று எனக்கும் டோனிக்கும் தெரியும். அதனால் நாங்கள் நெருக்குடிக்குள்ளாகவில்லை. எங்களை ஒரு பந்தை கூட தூக்கி அடிக்க விடக்கூடாது என்ற நெருக்கடி பந்து வீச்சாளருக்குத்தான் இருக்கும். ஒரு தவறு செய்தால், அதை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கெள்வோம். அப்படித்தான் டோனி முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.



    போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு நான் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கான திறமை மிக முக்கியமானது. போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம். ஏராளமான அனுபவங்கள் உதவும். கிரிக்கெட் போட்டியில் மிகவும் கடினமான திறமை அது. போட்டியை வெற்றிகரமாக முடிக்கும்போது, அணியின் ஒரு பகுதியாக இருப்பது சிறப்பு.

    அணி நிர்வாகம் தற்போது போட்டியை வெற்றிகரமாக முடிப்பதுதான் வேலை என்று என்னிடம் கூறியுள்ளது. என்னால் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை அணி விரும்புகிறது. அவர்கள் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் என்ன நினைக்கிறார்களோ? அதை என்னால் முடிந்த அளவிற்கு அளிக்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
    அடிலெய்டு போட்டியில் 54 பந்தில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் எம்எஸ் டோனி #MSDhoni
    இரண்டு உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் டோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஒய்வு பெற்ற டோனி ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

    கடந்த ஆண்டில் அவரது ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. இதனால் டோனி விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை அணியில் அவரது இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த ஆண்டை அவர் அமர்க்களமாக தொடங்கினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டோனி அரை சதம் அடித்தார். ஆனால் அவரது ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 96 பந்தில் 51 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் அவரது மீதான விமர்சனம் மேலும் அதிகமானது.

    இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து பதிலடி கொடுத்தார். 37 வயதான அவர் 54 பந்தில் 2 சிக்சருடன் 55 ரன்னை எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவரது 69-வது அரை சதம் ஆகும். கோலி ஆட்டம் இழந்த பிறகு பொறுப்புடன் களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். 44.1 வது ஓவரில் லயன் வீசிய பந்தில் சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். தன்னை விமர்சித்தவர்களுக்கு டோனி பேட்டால் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

    டோனியின் ஆட்டத்தை கேப்டன் விராட் கோலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் டோனியின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரது தனித்துவத்தை காட்டிவிட்டார். விளையாடும்போது டோனி என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது அவருக்கு மட்டுமே தெரியும். அவரும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடினார்கள். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தநாள் மிகவும் சிறப்பானது.

    ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை இறுதி நேரத்தில் கட்டுப்படுத்த முயன்றோம். மேக்ஸ்வெல், மார்ஷ் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தது முக்கிய திருப்பம். அவர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தால் 330 ரன் என்ற கடின இலக்கை எடுக்க வேண்டிய நிலை இருந்திருக்கும்.

    இவ்வாறு கோலி கூறினார்.
    இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு 299 ரன் இலக்கு நிர்ணயித்து உள்ளது. #AUSvIND #shaunmarsh
    அடிலெய்டு: 

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. புவனேஷ்வர் குமார் வேகத்தில் பின்ச் 6 அவுட்டானார். அலெக்ஸ் கேரி (18) ரன்கள் எடுத்தார். கவாஜா( 21) ரன்னில் வெளியேறினார். ஜடேஜா சுழலில் பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் (20) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

    ஷான் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷமி பந்து வீச்சில் ஸ்டாய்னிஸ்( 29 )அவுட்டானார். அபாரமாக செயல்பட்ட மார்ஷ் ஒருநாள் தொடரில் 7-வது சதம் எட்டினார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளிக்க ஸ்கோர் உயர்ந்தது. 6-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தபோது புவனேஷ்வர் குமார் பந்தில் மேக்ஸ்வெல் 48 சிக்கினார். ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். ரிச்சர்ட்சன் (2) சிடில் (0) சொதப்ப ஆஸ்திரேலி அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. லியான் (12) , பெஹ்ரன்டர்ப் (1) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.  #AUSvIND #shaunmarsh 
    இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. #AUSvIND
    அடிலெய்டு: 

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று  அடிலெய்டில் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தற்போது ஆஸ்திரேலியா அணி  நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. 25.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு  137 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் பிஞ்ச் 6 ரன்,அலெக்ஸ் காரி 18 ரன்,உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் 20 விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஷான் மார்ஷ் 65  ரன்களுடனும்,மார்கஸ் ஸ்டோன்ஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  #AUSvIND
    அடிலெய்டில் நாளை நடக்கும் 2-வது போட்டி வாழ்வா? சாவா? என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா சதமும், டோனி அரைசதமும் அடித்தனர்.



    தவான், அம்பதி ராயுடு டக்அவுட் ஆனார்கள். விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக்கும் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் பயிற்சியில் ஈடுபட்டார்.



    முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், 10 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பயிற்சியாளருடன் ஷமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.



    நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ளப்படும். இதனால் 2-வது இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லை 7-வது இடத்தில் களம் இறக்குவது வேஸ்ட் என ஆரோன் பிஞ்ச் மீது பார்டர் குற்றம்சாட்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் 7-வது வீரராக களம் இறங்கினார். 5 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 11 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல்லை 7-வது வீரராக களம் இறக்குவது வேஸ்ட் என்று ஆரோன் பிஞ்ச் மீது ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘மேக்ஸ்வெல் 7-வது இடத்தில் களம் இறங்குவது வேஸ்ட் என நான் உணர்கிறேன். மேக்ஸ்வெலால் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட முடியாது என்றாலும், சிறப்பான தொடக்கம் கொடுத்தால், சூழ்நிலைக்கு ஏற்ப 3-வது இடத்தில் அவரை களம் இறக்கலாம்’’ என்றார்.
    ஆஸ்திரேலிய மண்ணில் அதிக முறை சதம் அடித்து, போட்டியை வெல்ல முடியாதவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். #RohitSharma
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவித்தது. பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 பந்தில் 133 ரன்கள் விளாசினார்.

    ரோகித் சர்மா சதம் அடித்தாலும் இந்தியாவின் மற்ற வீரர்கள் சொதப்பிய காரணத்தால் 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    ரோகித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் இதற்கு முன்பு மூன்று சதங்கள் விளாசியுள்ளார். இந்த சதத்துடன் நான்கு சதங்களாகும். இந்த நான்கு போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது.

    இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் அடித்தும், அணியை வெற்றி பெற வைக்க முடியாத வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார்.

    2015-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 138 ரன்கள் குவித்திருந்தார். 2016-ல் பெர்த்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே வருடத்தில் பிரிஸ்பேன் ஆட்டத்தில் 124 ரன்களும், தற்போது சிட்னி டெஸ்டில் 133 ரன்களும் அடித்துள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 3 போட்டியிலும் சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
    ×