search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெல்போர்ன் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை
    X

    மெல்போர்ன் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை

    மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். காலையில் லேசாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இதை பயன்படுத்தி இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அசத்தினார். முதல் ஓவரிலேயே ஷான் மார்ஷ், கவாஜா ஆகியோரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக்கும், மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அஜித் அகர்கரும் 6 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளனர். தற்போது அவர்கள் வரிசையில் சாஹல் இணைந்துள்ளார்.
    Next Story
    ×