search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunachaleswarar Temple"

    • இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வரும் பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதனால் வருகிற பவுர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு குறிப்பிட்ட மாதத்தில் வரும் நாளில் நடைபெறும் பூஜைகள் சிறப்புக்குரியவை. அந்த வகையில் ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜையும், மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜையும், சித்திரை திருவோணத்தில் மதிய பூஜையும், ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜையும், ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. அதேபோல் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

    நேற்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    இதையடுத்து காலை 9.15 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர்.பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • சமீப நாட்களால் கோவிலில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பூட்டி வைக்கப்படுகின்றது.
    • தினமும் ஏராளமாக பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமாக பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் சில சமயங்களில் வெளி நாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    இந்த கோவில் வளாகத்திற்குள் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மட்டுமின்றி கம்பத்து இளையனார் சன்னதி, விநாயகர் சன்னதி, பாதாள லிங்கம், கால பைரவர் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகள் உள்ளன.

    பக்தர்கள் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சாமி தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் அதே வழியாகவே பக்தர்கள் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இக்கோவிலில் பெரும்பாலும் விழா நாட்களிலும், கோவிலில் கூட்டம் அதிகம் உள்ள நாட்களிலும் பக்தர்கள் முறையாக வரிசையாக செல்ல கோவில் வளாகத்தில் நகரும் இரும்பு கூண்டுகள் மற்றும் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்படும். ஆனால் சமீப நாட்களால் கோவிலில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பூட்டி வைக்கப்படுகின்றது.

    இந்த நிலையில் நேற்று கம்பத்து இளையனார் சன்னதி அருகில் பக்தர்கள் வந்து செல்லும் பாதை, இரும்பு கேட் மூலம் மூடப்பட்டு இருந்தது.

    இதனால் ராஜகோபுரம் வழியாக வந்த பக்தர்களும், அவ்வழியாக செல்ல வந்த பக்தர்களும் எவ்வாறு உள்ளே செல்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர் உள்ளே செல்பவர்களும், வெளியே வருபவர்களும் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கூண்டு பாதை வழியாக ஒருவரை ஒருவர் இடித்த படி சென்றனர். இதேபோல் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளால் பக்தர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

    இந்த கோவிலை பொருத்தவரையில் அதிகளவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களே வருகை தருகின்றனர். அவர்கள் கோவிலை முழுமையாக சுற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணத்தில் கோவிலுக்கு வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகத்தில் காணும் இடம் எல்லாம் தடுப்புகள் அமைத்து உள்ளதால் பக்தர்கள் பெரும்பாலானோர் சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்து விட்டு கோவில் வளாகத்திற்குள் உள்ள முருகர், விநாயகர், கால பைரவர் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் அவற்றை தரிசனம் செய்யாமல் திரும்பி செல்கின்றனர். எனவே விழா நாட்களை தவிர மற்ற நாட்களில் கோவில் வளாகத்தில் தேவையற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணி அளவில் தொடங்கியது. திருவண்ணாமலையில் நேற்று 105.8 டிகிரி வெயில் பதிவாகியது. இதனால் வெயில் சுட்டெரித்தது. எனினும் பக்தர்கள் பலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இருந்து ராஜகோபுரம் அருகில் வரை சித்ரா பவுர்ணமியை போன்று இந்த பவுர்ணமிக்கும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலின் உட்பிரகாரத்திலும் பக்தர்கள் வந்து செல்லும் பாதையிலும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.34 மணி வரை உள்ளது. இதனால் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமியன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11.16 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.11 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • உற்சவ மூர்த்தி சன்னதிக்கு எதிரில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாத பக்தர்களின் வசதிக்காக உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை நேரடியாக கண்டு தரிசிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு முதல் நடை அடைக்கும் நேரம் வரை உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் அனைத்து வழிபாடுகளையும், பூஜைகளையும், அலங்காரத்தையும் நேரடியாக இணையதளத்தின் மூலம் யூடியூப் சேனல் வழியாக ஒளிபரப்பப்படுகிறது.

    இதற்காக உற்சவ மூர்த்தி சன்னதிக்கு எதிரில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இது குறித்து கோவில் இணை ஆணையர் குமரேசன் கூறியதாவது:-

    அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தி வழிபாடுகளை நேரில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://youtube.com/@arunachaleswarartemple livestrea என்ற இணைய தள முகவரி வழியாக காணலாம். மேலும் தமிழ்நாட்டின் பிரசித்த பெற்ற கோவில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காக உருவாக்கப்பட்டு உள்ள Thirukkoil என்ற செல்போன் செயலியை பயன்படுத்தியும் நேரடி ஒளிபரப்பை காணும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    உற்சவ மூர்த்தி வழிபாடு நேரடி ஒளிபரப்புக்கு பக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து கோவில் விழாக்கள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளையும் அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அர்ச்சகர்கள் வலியுறுத்தல்
    • கோடை விடுமுறையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வருகை தருகின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    கோவிலுக்கு கோடை விடுமுறையால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    கொரோனா பரவலுக்கு முன்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடை சாற்றப்பட்டு இருக்கும்.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் ஆகம விதிப்படி மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோவிலில் நடை சாற்ற வேண்டும் என்று கோவில் அர்ச்சகர்கள் கோவில் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவை பெற்று கொண்ட ஆணையர் குமரேசன், இது குறித்து துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் சிலர் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கடந்த 4-ந்தேதி நள்ளிரவு 11.58 மணி அளவில் தொடங்கி மறுநாள் 5-ந்தேதி நள்ளிரவு 11.33 மணி அளவில் நிறைவடைந்தது.

    சித்ரா பவுர்ணமியையொட்டி கடந்த 4-ந்தேதி முதல் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சித்ரா பவுர்ணமியன்று வருகை தர முடியாதவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெளி மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் ஐஸ் மோர் வழங்கப்பட்டது. பொது தரிசன வழியில் வந்தவர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

    • இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.
    • கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று மாலை கிரிவலத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    இரவு வரை பக்தர்கள் கிரிவலப் பாதையை சுற்றி வந்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியில் உள்ள சின்ன கடை தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.50 கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது. சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கூடுதலாக தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல பக்தர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் சீராக செய்யப்படவில்லை.

    இன்று பக்தர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சிறப்பு ரெயில், பஸ் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • பவுர்ணமி நேற்று இரவு 8.20 மணியளவில் தொடங்கி இன்று மாலை 5.55 மணியளவில் நிறைவடைகிறது.
    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 8.20 மணியளவில் தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணியளவில் நிறைவடைகிறது. பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பக்தர்கள் 8 மணிக்கு மேலே கிரிவலம் செல்ல தொடங்கினர். கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், இரவில் பவுர்ணமி தொடங்கியதாலும் இரவு 10 மணி வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

    அதன்பின்னரே கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. முன்னதாக கிரிவலம் செல்வதற்காக வந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கிரிவலத்தையொட்டி நேற்று இரவு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இரவில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். இதனால் இரவில் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.
    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கும்.

    அதில் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.

    அதேபோல் சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மாலை பெரிய நாயகருக்கு பல்வேறு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் சூடு தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் வெயில் வெளுத்து வாங்கியது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் சூடு தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. ஒரு சில பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

    ×