என் மலர்
உள்ளூர் செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிப்படி பகலில் நடைசாத்த வேண்டும்
- அர்ச்சகர்கள் வலியுறுத்தல்
- கோடை விடுமுறையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வருகை தருகின்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
கோவிலுக்கு கோடை விடுமுறையால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
கொரோனா பரவலுக்கு முன்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடை சாற்றப்பட்டு இருக்கும்.
கொரோனா கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் ஆகம விதிப்படி மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோவிலில் நடை சாற்ற வேண்டும் என்று கோவில் அர்ச்சகர்கள் கோவில் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவை பெற்று கொண்ட ஆணையர் குமரேசன், இது குறித்து துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.






