search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appointment order"

    • 522 பேருக்கு தனியார் துறையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மூரத்தி வழங்கினார்.
    • வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கூடல்நகரில் உள்ள ஜெயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா தலைமை தாங்கினார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் தனியார் துறையைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் வேலை பெறுவதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி 522 பேரை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வான 522 பேருக்கும் தனியார் துறையில் பணி ஆணையை வழங்கினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மண்டல தலைவர், வாசுகி சசி குமார், மாணவர் அணி அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செய லாளர் சசிகுமார்,வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
    • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தொடங்கி வைத்தார்

    சோளிங்கர்:

    சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார்.

    உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட இயக்குனர் நானிலதாசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    வேலை வாய்ப்பு முகாமில் 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 102 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்குப்பட்டு ராமன், நதியா மதன்குமார், மாரிமுத்து, சுப்பிரமணி மற்றும் வட் டார இயக்க அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • இளைஞர் திறன் திருவிழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் பள்ளியில் நடந்தது.
    • ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் 100 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    உடன்குடி:

    தமிழ்நாடு அரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியளிக்கும் இளைஞர் திறன் திருவிழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் பள்ளியில் நடந்தது.

    அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைஅறிந்து கொள்தல், திறன் மேம்பாடு, சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள்மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை இளைஞர்களுக்கு வழங்கும் இந்த முகாமினை உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து தொடங்கிவைத்து, 100 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இளைஞர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.மகளிர் திட்டம் இணை இயக்குநர் வீரபத்ரன், திறன் மேம்பாடு உதவி இயக்குநர் ஏஞ்சல், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி இகியோர் முன்னிலை வகித்தனர்.உதவித்திட்ட அலுவலர்கள் பிரபாகர், அருண்பிரசாத், பாலசுந்தரம், வட்டார மேலாளர் முத்துசெல்வி, வட்டார ஓருங்கிணைப்பாளர்கள் பொன்மொழி, ஜெயந்தி, முத்து இசக்கி திமுக நிர்வாகிகள் கணேசன், மோகன் உட்பட ஏரளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • சாகிர் உசேன்கல்லூரி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 110 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித்திட்ட அலுவலர் விஜயசங்கரி வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். இதில் 18 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 110 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்வர், உதவித்திட்ட அலுவலர், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பணிநியமன ஆணை வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மகளிர் சுயஉதவிக்குழு பணியாளர்களுடன், கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம், உதவிப்பேராசிரியர்கள் ஜெயமுருகன், சுல்தான் செய்யது இப்ராஹிம், மகேந்திரன் மற்றும் ஆரிப்ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். இளையான்குடி, வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
    • மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை மற்றும் கால்களை இழந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

    பிற்படுத்தப்பட்டோர்,

    மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பேருக்கு மாவட்ட அலகில் இயங்கி வரும் விடுதிகளில், பகுதி நேர தொகுப்பூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளராக பணியாற்றி மரணமடைந்த செல்லேசுவரி என்பவரது வாரிசுதாரரான கவிதாவுக்கு அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சங்கர நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஞானவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர்
    • மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த கல்வியாண்டில் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் டைட்டன், எல்ரூடி, இந்தியா யமஹா மோட்டார்ஸ், ஹூண்டாய் மொபிஸ், டாபோ எனர்ஜி லிமிடெட், ராணே மெட்ராஸ், ராயல் என்பில்ட், ஹூண்டாய் பாலிடெக், எஸ்.ஏ.சி. என்ஜின் காம்போனட்ஸ் உட்பட 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர். இம்முகாமிகளில் பணிக்கு தேர்ந்தெடு க்கப்பட்டோருக்கான பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது என்றார்.

    பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை டாபே மனித வளமேம்பாட்டு மைய தலைவர் தங்கராசு, திருச்சி பெல் நிறுவன துணை பொதுமேலாளர் சண்முகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். பின்னர் பணிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமனை ஆணைகளை வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுமார் வேலைவாய்ப்பு அறிக்கை வாசித்தார். இதில் உடற்கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக எந்திரவியல் துறைத்தலைவர் சரவணன் வரவேற்றார். முடிவில் வேலைவாய்ப்பு அலுவலர் தேவராஜ் நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 627 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
    • பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி பணி அமர்வு மையத்தின் சார்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், வறுமையிலும் பிள்ளைகளை படிக்கும் வைக்கும் பெற்றோர்களை நினைவுகூர்ந்து பொருளாதார ரீதியாக மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மாணவர்களின் பொருளாதாரம் உயர்ந்தால் நமது வட்டாரமும், அவர்களது குடும்பமும் உயர்ந்த நிலையை அடையும். மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்போது கல்வி மற்றும் பொருளாதார நிலையில் சமூகம் சிறப்பான, குற்றமற்ற மாபெரும் சமுதாயமாக உருவாகும் என்றார்.

    துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கல்லூரி செயலாளர்அ .பா.செல்வராசன், பல்வேறு நிறுவனங்களின் பணி நியமன ஆணைகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 627 மாணவர்களுக்கு வழங்கினார். பணி அமர்வு மையத்தின் பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப்பொறுப்பாளர்கள் வெங்கடேஷ்குமார், அக்சய் ஜோசப் டிலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 6,119 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் காவல் துறையில் பணியாற்றிய தியாகிகளின் புத்தகம் வெளியிடும் விழா இன்று காலை நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 6,119 சீருடை பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகத்திலேயே திறமை வாய்ந்த ஸ்கார்ட்லாண்டு யார்டு போலீசுக்கு இணையாக தமிழ்நாட்டு காவல் துறையின் பணி பாராட்டி பேசப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையம் அதிக அளவில் நிறுவப்பட்டது தமிழ்நாட்டில் மட்டும்தான். இத்தகைய பெருமை மிக்க காவல்துறையில் பணியாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    இன்று காவல் துறையில் சுமார் 5 சதவீதத்திற்கும் குறைவான பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அந்த இடங்களும் விரைவில் நிரப்பப்படும். தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. குற்ற சம்பவங்களும் குறைந்துள்ளன.

    மெட்ரோ நகரங்களில் சென்னையும், கோவையும் பெண்கள் வாழ பாதுகாப்பான நகரங்கள் என புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் வீரத்துடன் பணிபுரிந்து மக்கள் நலனுக்காக தன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் விதமாக வீரத்தியாகிகள் என்ற புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒவ்வொருவரும் பெரும் சாதனைகளுக்காகவே பிறந்திருக்கிறோம். அவற்றை நிகழ்த்திக் காட்டும் திறனும், வலிமையும் நம் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவற்றை உணர்ந்து செயல்படுவதே நமது கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமி‌ஷனர் விஸ்வ நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். #TNCM #Edappadipalaniswami
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #ThoothukudiFiring #EdappadiPalaniswami
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது பற்றியும் கல்வித் தகுதி குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது.

    அதன் அடிப்படையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 19 நபர்கள் அரசு வேலை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்கள் 19 பேருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் (கூடுதல் பொறுப்பு) செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி, பொதுத்துறை துணை செயலாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #ThoothukudiFiring #EdappadiPalaniswami
    ×