என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
- 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர்
- மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த கல்வியாண்டில் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் டைட்டன், எல்ரூடி, இந்தியா யமஹா மோட்டார்ஸ், ஹூண்டாய் மொபிஸ், டாபோ எனர்ஜி லிமிடெட், ராணே மெட்ராஸ், ராயல் என்பில்ட், ஹூண்டாய் பாலிடெக், எஸ்.ஏ.சி. என்ஜின் காம்போனட்ஸ் உட்பட 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர். இம்முகாமிகளில் பணிக்கு தேர்ந்தெடு க்கப்பட்டோருக்கான பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது என்றார்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை டாபே மனித வளமேம்பாட்டு மைய தலைவர் தங்கராசு, திருச்சி பெல் நிறுவன துணை பொதுமேலாளர் சண்முகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். பின்னர் பணிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமனை ஆணைகளை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுமார் வேலைவாய்ப்பு அறிக்கை வாசித்தார். இதில் உடற்கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக எந்திரவியல் துறைத்தலைவர் சரவணன் வரவேற்றார். முடிவில் வேலைவாய்ப்பு அலுவலர் தேவராஜ் நன்றி கூறினார்.






