search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth Skills Festival"

    • இளைஞர் திறன் திருவிழா கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
    • இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இம்முகாமில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத, ஆண்,பெண்,திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சிகளைத் தேர்வு செய்து பிரபல தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.

    பயிற்சி காலத்தில் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சிக் கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்பூகூட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நிறைவில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித்தரப்படும்.

    எனவே, கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    • இளைஞர் திறன் திருவிழா நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் - தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க, திட்ட இயக்குனர் மு.நானிலதாசன் தலைமை தாங்கினார். இதில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

    வேலைவாய்ப்பு முகாமில் நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களைச் சார்ந்த கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் ச.தீனதயாளன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, .சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், தனியார் கம்பெனிகளின் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.
    • இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் காடையாம்பட்டி வட்டார பொது சேவைமைய கட்டிடத்தில் (யூனியன் அலுவலகம் எதிரில்) நாளை மறுநாள்(சனிக்கிழமை) வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இம்முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத, ஆண்,பெண்,திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சிகளைத் தேர்வு செய்து பிரபல தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.

    மேற்படி, பயிற்சி காலத்தில் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், பயிற்சிக் கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்பூகூட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நிறைவில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித்தரப்படும்.

    எனவே, காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திட்ட இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

    • 15 பயிற்சி நிறுவனங்களும், 386 இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
    • 147 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

    ஊட்டி,

    ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 147 பேருக்கு பயிற்சி ஆணைகளை நீலகிரி கூடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இளைஞர்கள் திறன் திருவிழா கூடலூர் கோழிப் பாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, தமிழ்நாடு ஊரக தொழில் பயிற்சி நிறுவனம் உள்பட பல்வேறு துறைகளும், 15 பயிற்சி நிறுவனங்களும், 386 இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 147 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர் திறன் திருவிழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் பள்ளியில் நடந்தது.
    • ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் 100 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    உடன்குடி:

    தமிழ்நாடு அரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியளிக்கும் இளைஞர் திறன் திருவிழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் பள்ளியில் நடந்தது.

    அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைஅறிந்து கொள்தல், திறன் மேம்பாடு, சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள்மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை இளைஞர்களுக்கு வழங்கும் இந்த முகாமினை உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து தொடங்கிவைத்து, 100 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இளைஞர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.மகளிர் திட்டம் இணை இயக்குநர் வீரபத்ரன், திறன் மேம்பாடு உதவி இயக்குநர் ஏஞ்சல், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி இகியோர் முன்னிலை வகித்தனர்.உதவித்திட்ட அலுவலர்கள் பிரபாகர், அருண்பிரசாத், பாலசுந்தரம், வட்டார மேலாளர் முத்துசெல்வி, வட்டார ஓருங்கிணைப்பாளர்கள் பொன்மொழி, ஜெயந்தி, முத்து இசக்கி திமுக நிர்வாகிகள் கணேசன், மோகன் உட்பட ஏரளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.
    • இதில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27-ந் தேதியும், வேப்பந்தட்டை ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியும்,

    பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதியும், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர்களுக்கு 17-ந்தேதியும், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. இவற்றில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    எனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை,

    ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9444094325 மற்றும் 04328-225362 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
    • கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

    காங்கயம்:

    காங்கயம், தாராபுரம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். காங்கயம் நகர்மன்றத் தலைவர்சூ ரியபிரகாஷ் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் பல்வேறு துறைகள் மூலம் 16 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த 275 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சிக்கு தேர்வு செய்தனர்.

    இவர்களுக்கு இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. விழாவில் திட்ட இயக்குனர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் கே.கே.துரைசாமி, துணைத்தலைவர் டி.சண்முகம்,தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×