என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா
- இளைஞர் திறன் திருவிழா கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
- இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இம்முகாமில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத, ஆண்,பெண்,திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சிகளைத் தேர்வு செய்து பிரபல தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.
பயிற்சி காலத்தில் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சிக் கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்பூகூட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நிறைவில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித்தரப்படும்.
எனவே, கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி தெரிவித்துள்ளார்.






