சேலம் மாவட்டத்தில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா

வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா
Published on

சேலம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் காடையாம்பட்டி வட்டார பொது சேவைமைய கட்டிடத்தில் (யூனியன் அலுவலகம் எதிரில்) நாளை மறுநாள்(சனிக்கிழமை) வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

இம்முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத, ஆண்,பெண்,திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சிகளைத் தேர்வு செய்து பிரபல தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி, பயிற்சி காலத்தில் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், பயிற்சிக் கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்பூகூட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நிறைவில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித்தரப்படும்.

எனவே, காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திட்ட இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com