வேலை வாய்ப்பு முகாம்

இளைஞர் திறன் திருவிழா நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலை வாய்ப்பு முகாம்
Published on

நெமிலி:

நெமிலியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் - தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க, திட்ட இயக்குனர் மு.நானிலதாசன் தலைமை தாங்கினார். இதில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

வேலைவாய்ப்பு முகாமில் நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களைச் சார்ந்த கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் ச.தீனதயாளன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, .சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், தனியார் கம்பெனிகளின் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com