உடன்குடியில் அரசு சார்பில் இளைஞர் திறன் திருவிழா

இளைஞர் திறன் திருவிழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் பள்ளியில் நடந்தது.ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் 100 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஒரு பெண்ணுக்கு வேலை உறுதி சான்றிதழ் வழங்கிய காட்சி.
உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஒரு பெண்ணுக்கு வேலை உறுதி சான்றிதழ் வழங்கிய காட்சி.
Published on

உடன்குடி:

தமிழ்நாடு அரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியளிக்கும் இளைஞர் திறன் திருவிழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் பள்ளியில் நடந்தது.

அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைஅறிந்து கொள்தல், திறன் மேம்பாடு, சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள்மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை இளைஞர்களுக்கு வழங்கும் இந்த முகாமினை உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து தொடங்கிவைத்து, 100 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இளைஞர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.மகளிர் திட்டம் இணை இயக்குநர் வீரபத்ரன், திறன் மேம்பாடு உதவி இயக்குநர் ஏஞ்சல், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி இகியோர் முன்னிலை வகித்தனர்.உதவித்திட்ட அலுவலர்கள் பிரபாகர், அருண்பிரசாத், பாலசுந்தரம், வட்டார மேலாளர் முத்துசெல்வி, வட்டார ஓருங்கிணைப்பாளர்கள் பொன்மொழி, ஜெயந்தி, முத்து இசக்கி திமுக நிர்வாகிகள் கணேசன், மோகன் உட்பட ஏரளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com