search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anointing"

    • பூந்தட்டு ஏந்தி கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.
    • அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது.

    நாகை துறைமுக கடற்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தியவாறு தாய் மூகாம்பிகை கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சாமியை வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வருகிற 7-ந்தேதி நாகப்பட்டினம் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    • பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    • கலை நிகழ்ச்சிகளும், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகளும் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கில் உள்ள செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    விழாவில் அக்னி சட்டி பிரவேசம், சனீஸ்வர பூஜை, வனபத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி பூஜைகளுடன் நேற்று சக்தி கலா கோவிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் உலக நன்மை வேண்டி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை யொட்டி கலை நிகழ்ச்சிகளும், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகளும் நடந்தது.

    • பரமத்திவேலூரில் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கட்டிசோறு கருப்பண்ணார்சு வாமி கோவில்உள்ளது.
    • இக்கோவிலின் 9-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கட்டிசோறு கருப்பண்ணார்சு வாமி கோவில்உள்ளது.இக்கோவிலின் 9-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்டிச் சோறு கருப்பண்ணார் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கட்டிச் சோறு கருப்பண்ணார்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பண்ணார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவ ருக்கு தை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவ ருக்கு தை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி. மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடை

    பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் ,பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் ,அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

    அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில் ,பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில் ,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் ,வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில் ,பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .

    • தியாகராஜாருக்கு திருவாதிரை திருவிழா மகா அபிஷேகம்.
    • பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி.

    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

    இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜர் சாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திருவாதிரை திருவிழாயொட்டி பாத தரிசன விழா இன்று நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தியாகராஜா சாமிக்கு திருவாதிரை திருவிழா மகா அபிசேகம் நடந்தது.

    அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர்.

    பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் பணியாளர் செய்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரமும், தீபா ராதனையும் காட்டப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்த சாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதருக்கு மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதேபோல், பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வ நாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவு ரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் விரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஈஸ்வரன், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லாலான 18 அடி உயர ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
    • இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று காலை முதலே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லாலான 18 அடி உயர ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    இத்தகைய புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்ச நேயரை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று காலை முதலே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    குறிப்பாக நாமக்கல்

    மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாலை முதலே வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசை யில் பல மணி நேரம் காத்து நின்று ஆஞ்ச நேயரை தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால், தயிர், மஞ்சள் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 2 டன் பூக்களால் மேள தாளங்கள் முழங்க சிறப்பு அபிஷேகமும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு செய்யப்பட்டது .

    இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதால் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பவுர்ணமி தினத்தன்று சிறப்பாக வேள்வியும், அபிஷேகமும் நடைபெற்றது.
    • மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேய சித்தர் ஜீவப்பீடத்தில் மாதம் தோறும் பௌர்ணமி யாகமானது தமிழ் முறைப்படி சித்தர் பீடத்தை நிர்வகித்து வரும் நாகூர் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    இந்த பௌர்ணமி தினத்தன்று மிகச் சிறப்பாக வேள்வியும், அபிஷேக ஆராதனை களும் நடைபெற்றது.நாகூர், காரைக்கால் திருத்துறைப்பூண்டியை சார்ந்த பக்தர்கள் இந்த வேள்வியில் கலந்து கொண்டார்கள் அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது

    இந்த வேள்வியினை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், டாக்டர் அனிதா, குமார், பழனிவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

    இந்த பூஜையினை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேய சித்தர் பீடத்தின் அர்ச்சகர் வெங்கட்ராமன் ஆகியோர் பூஜையை செய்தார்கள். வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் அதிகாலையில் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக,ஆரதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில்450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
    • சுப்பிரமணியர் மற்றும் சூரபத்மன் ஆகியோர் வீதியுலா வந்து, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தனிச் சன்னிதி கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹார விழா நேற்றிரவு நடந்தது.

    இதனை முன்னிட்டு சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின்னர் அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமி மற்றும் சூரபத்மன் ஆகியோர் வீதி உலா வந்து, கீழவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    புஷ்யமண்டபத்துறை பாலமுருகன் சுவாமி மற்றும் சூரபத்மன் ஆகியோர் நேற்று மாலை வீதிஉலா வந்து வடக்கு மடவிளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சனி பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர், அக் 23-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல், பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் மற்றும் வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    • கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
    • கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.

    மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இதில் கோதண்ட ராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்தனர்.

    ×