search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aircel Maxis Case"

    ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மீண்டும் விசாரணை நடத்தியது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. #AircelMaxisCase
    புதுடெல்லி:

    ஏர்செல் நிறுவனத்தில், 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.

    ஆனால் ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தர முடியும். அதற்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் ஒப்புதல் தர முடியும்.

    ஆனால் சட்டத்தை மீறி, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

    2006-ம் ஆண்டு இந்த ஒப்புதல் தரப்பட்டபோது, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    இந்த நிலையில் சட்டத்தை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்பது பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கு இடையே ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இது தொடர்பாக அவரை கடந்த ஜூன் மாதம் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது என்ன நடந்தது என்பது வெளியிடப்படவில்லை.

    இருப்பினும் இது பற்றி ப.சிதம்பரம் அப்போது டுவிட்டரில் பதிவிடுகையில், “பாதிக்கு மேற்பட்ட நேரம் கேள்விகளுக்கான பதில்களை பிழையின்றி (கணினியில்) ‘டைப்’ செய்வதிலும், படித்துக்காட்டி அதில் கையெழுத்து பெறுவதிலும் கழிந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.


    இந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று மீண்டும் வரவழைத்தது. அவர் டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    ஏற்கனவே இந்த விவகாரத்தில், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப.சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிய வந்து உள்ளது.  #AircelMaxisCase
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை அக்டோபர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #PChidambaram #KarthiChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

    சட்ட விதிகளின்படி ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடு திட்டங்களுக்கு மத்திய நிதி மந்திரியின் ஒப்புதல் போதுமானதாகும். ரூ.600 கோடிக்கும் அதிகமான முதலீட்டு திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கு மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

    இதனால் அந்த குழுவின் ஒப்புதலை பெறாமல் ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் மறுத்து இருந்தனர்.

    இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 17 பேர் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் சி.பி.ஐ. சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது. இதேபோல அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்தநிலையில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

    இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். #PChidambaram #KarthiChidambaram  #AircelMaxisCase
    ஏர்செல் மேக்சிஸ் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்வதற்கு தடை விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram
    புதுடெல்லி:

    மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவன பங்குகள் சட்டவிரோதமாக மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இதன்மூலம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.



    இதில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என ஏற்கெனவே ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

    இதற்கிடையே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கார்த்தி சிதம்பரத்துடன், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.  எனவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இதையடுத்து ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. #AircelMaxisCase #PChidambaram
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.



    இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.

    இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப,சிதம்பரம், சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே என் மீதும், மதிப்புமிக்க அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை சேர்த்து சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. #AircelMaxisCase #Chidambaram #CBI
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. 
     
    இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. விடுபட்ட சில தகவல்கள், ஆதாரங்களை இணைத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று புதிய குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள் பெயரும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AircelMaxisCase #Chidambaram #CBI
    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் எனக்கு எதிராக அமலாக்கத்துறை சதி செய்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தது.

    பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு செய்யப்பட்டது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன.

    இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆகஸ்டு 7-ந்தேதி வரை தடையை நீடித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார்.

    தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் எனக்கு எதிராக அமலாக்கத்துறை சதி செய்கிறது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயரோ வேறு எந்த அதிகாரியின் பெயரோ இடம் பெறவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் பதில் தருவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். 

    இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கடந்த ஜூன் 5-ந் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா கோர்ட், ஜூலை 10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 

    இந்நிலையில், இன்று நடந்த மனு மீதான விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #KartiChidambaram #AircelMaxiscase
    புதுடெல்லி:

    ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

    இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் நேற்று சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ஏர்செல் மேக்சிஸ் நிதி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்திடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். #AircelMaxis #PChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்திடம் கடந்த 5-ம் தேதி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்திடம் இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

    காலை சுமார் 11 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ப.சிதம்பரம் 6 மணிநேர விசாரணைக்கு பின்னர் மாலை 5 மணியளவில் வெளியே வந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முதன்முறையாக தனக்கு சம்மன் அனுப்பியபோது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய ப.சிதம்பரம், இவ்வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்திருந்தார். இவ்வழக்கு தொடர்பாக அவரை கைது செய்ய ஜூலை 10-ம் தேதி வரை தடை விதித்து சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AircelMaxis #PChidambaram #ED
    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 2-வது முறையாக அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் ஆஜரானார். #Chidambaram #AircelMaxiscase
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் உருவான நிலையில், கைது செய்வதில் இருந்து தடை விதிக்ககோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 10-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, ஜூன் 5-ம் தேதி ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலகட்டங்களாக நடைபெற்ற அந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் வரை நடைபெற்றது.



    இதையடுத்து இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று நடைபெறும் விசாரணையின்போது சிதம்பரம் அளிக்கும் வாக்குமூலத்தை பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, சற்றே மாறுபட்ட கோணத்தில் ப.சிதம்பரத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது. #Chidambaram #AircelMaxiscase
    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய 6 1/2 மணி நேர விசாரணை நிறைவடைந்துள்ளது. #PChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

    இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது. 

    அத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது. அதன்படி, இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை பிற்பகல் வரை நீண்டது.

    பின்னர், உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. சுமார் 6 1/2 மணி நேரத்திற்கு பிறகு விசாரணை முடிந்து அவர் வெளியே வந்தார். 
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு ஜூலை 10-ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pchidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது.

    அத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது.

    இந்நிலையில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு அமலாக்கத்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-ம்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #pchidambaram  #AircelMaxisCase
    ×