என் மலர்
செய்திகள்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை, எனக்கு எதிராக செயல்படுகிறது - ப.சிதம்பரம்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் எனக்கு எதிராக அமலாக்கத்துறை சதி செய்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு செய்யப்பட்டது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆகஸ்டு 7-ந்தேதி வரை தடையை நீடித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார்.
தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் எனக்கு எதிராக அமலாக்கத்துறை சதி செய்கிறது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயரோ வேறு எந்த அதிகாரியின் பெயரோ இடம் பெறவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் பதில் தருவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






