என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
Byமாலை மலர்5 Jun 2018 5:30 AM GMT (Updated: 5 Jun 2018 5:30 AM GMT)
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு ஜூலை 10-ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pchidambaram #AircelMaxisCase
புதுடெல்லி:
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது.
அத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு அமலாக்கத்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-ம்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #pchidambaram #AircelMaxisCase
ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது.
அத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு அமலாக்கத்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-ம்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #pchidambaram #AircelMaxisCase
Next Story
×