search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adventure"

    • அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.
    • வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் பள்ளி வாசல் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார். பணத்தை கைப்பையில் வைத்து வங்கியிலிருந்து வெளியில் வந்தார். அங்கு நிறுத்தியிருந்த அப்துல் ரஷித் (வயது 61). இவர் திருவெண்ணைய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 8 பவுன் தங்க நகையை இன்று காலை 11.30 மணியளவில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் பெற்றார்.இவரது வங்கி கணக்குப் புத்தகத்தை வங்கியிலேயே வைத்து விட்டு வந்தது அப்போது தான் அவருக்கு நினைவுக்கு வந்தது. மீண்டும் வங்கிக்குள் சென்று வங்கி புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டில் வந்து ஸ்கூட்டியை திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதனைக் கண்டு அப்துல் ரஷித் அதிர்ச்சியடைந்தார்.   உடனடியாக திருவெண்ணைய்நல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி சம்பவ நடந்த இந்தியன் வங்கிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டப்பகலில் வங்கி வாசலில் பணம் கொள்ளை போன சம்பவம் திருவெண்ணைநல்லூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    • மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி களில் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    வாகன சோதனை

    மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகர பகுதி முழுவதும் கடந்த சில வாரங்களாக போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் கடுமையான வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த சோதனையின் போது விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்குபவர்கள் என பல்வேறு தரப்பி னருக்கும் போலீசார் அதிக அளவு அபராதம் விதித்து வருகின்றனர்.

    லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை

    அதேபோல் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் ஆர்.டி.ஓ.வுக்கு அவர்களது லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர் தனது ஹெல்மெட்டில் காமிராவை பொருத்திக் கொண்டு சென்றுள்ளார்.

    வீடியோ வைரல்

    தொடர்ந்து குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற அந்த வாலிபர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்கு வரத்து போலீசாருக்கு சைகை காட்டி விட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வந்தது.

    அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளை யத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 6 பேர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதும், மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை போலீ சார் பிடித்து மேலப்பாளை யம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலீஸ் கமிஷ னர்கள் சீனிவாசன், சரவண குமார் ஆகியோரும் விரைந்து வந்தனர். அப்போது போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் காமிரா பொருத்தி சாகசத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் மற்றும் 5 வாலிபர்கள் சிக்கி உள்ளனர். இதில் 5 பேருக்கு லைசென்ஸ் உள்ளது. அவர்களது மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

    மாநகரப் பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்று விபத்தை ஏற்படுத்தி அந்த நபர் இறந்து விட்டால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது கொலைக்கு நிகரான குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.

    விபத்தில் சிக்கிய நபர் காயம் அடைந்து இருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 308-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். தொடர்ந்து மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடுவது கூடாது என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது தவிர இன்ஸ்டா கிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதில் புகார் கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிப்போம். இது தவிர புதிய வாகனங்கள் வாங்கி அதில் கூடுதல் வேகத்திற்காக சில பாகங்களை பொருத்திக் கொடுக்கும் கடைகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிற 5-வது முகவை சங்கமம் புத்தக திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதில் 114 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இங்கு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அரங்கு மற்றும் பல்வேறு துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட சாதனை விளக்க அரங்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ- மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வந்தனர்.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் முத்தான திட்டங்கள் குறித்த 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்ப ட்டது. இதனை பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் தொடர்ந்து 12 நாட்கள் இடம் பெற்றது.

    அரங்கில் நாள்தோறும் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு 12 நாட்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெற இந்த கண்காட்சி அரங்குகள் பயனுள்ளதாக அமைந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழக அரசின் சாதனைகள் குறித்த கையேடு மற்றும் மடிப்பு கையேட்டினை வெளியிட்டு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியில் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட மற்றும் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி பக்கிரிசாமி- புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிஷா. இவர் மகிழஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் துணையுடன் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

    இதுகுறித்து மாணவி கூறியதாவது:-

    வறுமையான குடும்பத்தில் பிறந்து, இடிந்துள்ள வீட்டில் வசிக்கும் நான் பள்ளி ஆசிரியர் உதவியுடனும், எனது 67 வயது பாட்டி பத்மாவதி துணையுடன் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் என்னால் முறையாக பயிற்சி எடுக்கவும், அதற்கான சாதனங்களை வாங்குவதற்கும் முடியவில்லை. எனவே, கருணை மனம் கொண்டவர்களும், தமிழக அரசும் எனக்கு உறுதுணையாக ஆதரவளித்தால் மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம்.
    • இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

    கும்பகோணம்:

    அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள பல்தொழில்நுட்ப கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா அன்னை கல்வி குழும தலைவர் அன்வர்கபீர் தலைமையில் நடைபெற்றது.

    தாளாளர் அப்துல்கபூர் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் பாலமுருகன் கலந்து கொண்டு 881-க்கும் பட்டயங்களை வழங்கி பேசியதாவது:-

    உலகம் முழுவதும் இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப படிப்புகளை அரசு செய்து தருகின்றது.

    பட்டயங்கள் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும். இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் சபாநாயகம், தேர்வு அலுவலர் சாமிநாதன், துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி கௌதம் மற்றும் பேராசிரியர்கள். மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே வசந்தநகர் பகுதியில் ஆற்றோரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ நாக மகா தீர்த்த சுவாமிகள் கோவில் உள்ளது.
    • மர்ம நபர்கள் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளே பூஜைக்கு வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே வசந்தநகர் பகுதியில் ஆற்றோரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ நாக மகா தீர்த்த சுவாமிகள் கோவில் உள்ளது. நேற்று இங்கு வழக்கம் போல் பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை 6 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவிலின் உள்ளே கருவறை முன்பு இருந்த கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நள்ளிரவு கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளே பூஜைக்கு வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    மர்ம நபர்கள் பெரிய கம்பியை எடுத்து கருவறை கேட்டை உடைத்துள்ளனர். அதன்பிறகு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கோவில் பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர்.
    • வலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    மன்னார்குடி:

    மாநில அளவில் பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர். முகிலன் என்பவர் இரும்பு மனிதன் என்ற சிறப்பு பட்டம் வென்றார்.

    சாதனை படைத்தவர்கள் திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் -பிட்னஸ் சங்கத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான டாக்டர் மன்னார்குடி அசோக்கு மார், செயலாளர் ரத்தி னபாலன், பொருளாளர் விஜய்ஜேசி, மண்டலத் தலைவர் என்.எஸ்.அசோக்குமார், என். எஸ். பாலசுப்ரமணியம், எஸ்.ராமதாஸ், உலக வலுதூக்கும் வீரர் சி.விமல்ராஜா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் சங்கத்தின் தலைவர் டாக்டர் மன்னார்குடி அசோக் குமார் வீரர்களை பாராட்டி பரிசளித்தார்.

    ×