search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK protest"

    • அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
    • வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 8, அ.தி.மு.க. 4, பா.ம.க. 2, சுயேட்சை 1 கவுன்சிலர்கள் இருந்தனர்.

    பேரூராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏகே சுந்தரமூர்த்தி இருந்தார். இவர் உடல்நிலை குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.

    இதையடுத்து தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் இன்று பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணன், வரலட்சுமி பெற்றுள்ள 7 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாது என அறிவித்து சுயேட்சை வேட்பாளர் சங்கீதா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

    இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் வாலாஜா சோளிங்கர் ரோட்டில் அம்மூர் பஸ் நிறுத்தம் நெடுஞ்சாலையில் தி.மு.க. அரசை கண்டித்தும், தேர்தல் அதிகாரியை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து கோஷங்களை எழுப்பி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க.வினர் திடீரென ஆத்திரமடைந்து தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணனை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அம்மூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கோவை:

    சென்னையில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்தனர்.

    அவர்கள் திடீரென ஊர்வலமாக சென்று அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 10 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது.
    • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பெரியார் திடலில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையிலும் புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மு. பரஞ்சோதி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும்.
    • தற்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் மூலம் 3 வருடத்திற்கு ரூ.36,000 மட்டும்தான் கிடைக்கும்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தருமபுரியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

    கடந்த 10 வருடங்களாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சி காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    ஆனால் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி என்று ஒவ்வொன்றாக உயர்த்தப்பட்டு வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டனர்.

    ஆனால் தருமபுரி மக்கள் ஏமாறவில்லை. இங்குள்ள 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

    தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு ரூ.90 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் தற்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் மூலம் 3 வருடத்திற்கு ரூ.36,000 மட்டும்தான் கிடைக்கும்.

    ஜெயலலிதா செயல்படுத்திய ஒவ்வொரு நலத்திட்டங்களாக முடக்கி வருகின்றனர். விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    உதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புறங்களில் பெண்களை மேம்படுத்த ஆடு, மாடு, கோழிகள் வழங்கும் திட்டம், சுகாதாரத்துறையில் மினி கிளினிக் திட்டம் என பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

    இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இனிவரும் காலங்களில் தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கும் என இறுமாப்புடன் பேசி வருகிறார். அவருக்கு இந்த ஆர்ப்பாட்டம் காதுகளில் இடியாக விழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மின்கட்டண உயர்வை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் மற்றும் சீனிவாசன் பேசினர்.

    திண்டுக்கல்:

    மின்கட்டண உயர்வை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நத்தம்ரோடு மின்வாரிய அலுவலகம் அருகே கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நிைறவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டு பல கட்டணங்களை உயர்த்தி வருகிறது.

    ஏற்கனவே சொத்துவரி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மின்கட்டணம் உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்பபெறும் வரை அ.தி.மு.க போராட்டம் நடத்தும். தற்போதைய சூழலில் தமிழக மக்கள் மகிழ்ச்சி இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    தேர்தல் நேரத்தில் அளித்த ரூ.1000 உதவித்தொகை உள்பட பல திட்டங்களை இன்னும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க 200 இடங்களில் மகத்தான வெற்றிபெறும். அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கல்லறை தோட்டம் பகுதியில் அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது,

    தி.மு.க ஆட்சிக்கு வந்து 1¼ வருடத்தில் மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனை மறைக்க மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவான கட்டணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

    தமிழகத்தில் அனைத்து அதிகார மையங்களும் ஒரு குடும்பத்தை சுற்றியே நடக்கிறது. இதனால் மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க அரசு விரைவில் விரட்டியடிக்கப்படும். மின்கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் பஸ்மறியல் போராட்டத்தை அ.தி.மு.க நடத்தும்.

    சசிகலா தான் விரைவில் கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என கூறியுள்ளார். அவர் எந்த கட்சி அலுவலகத்திற்கு செல்லப்போகிறார் என தெரியவில்லை. அ.தி.மு.கவில் சசிகலா முடிந்துபோன சகாப்தம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர் என பேசினார்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • திரளான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்

    ஊட்டி:

    மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் கே.ஆர். அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெயசீலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளா் கப்பச்சி வினோத் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னா் சொத்து வரி, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக விலை உயா்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் வேதனையடைந்து வருகின்றனா். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க முயற்சித்து வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் சாா்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து இலவச மின் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டிராஜி, ஒசிஎஸ் தலைவர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுனர்அணி நகர செயலாளரும், நொண்டிமேடு கிளை செயலாருமான கார்த்திக், கிளை செயலாளர் பிரபுதுர்கா, நகரமன்ற உறுப்பினர்கள் லயோலோ குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மாநில அம்மாபேரவை இணை செயலாளர் காந்தி, தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் மருத்துவ கல்லூரி பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு.
    • பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    எந்த வரியும் புதிதாக போட மாட்டோம் என்று சொல்லி வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் பன்மடங்கு உயர்வு போன்றவற்றை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அறிவித்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், புதிதாக வரியை போட்டு ஏழை, எளிய மக்கள் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளனர்.

    திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு. 4-வது குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்டங்களை விரைவில் முடிக்காமல் தி.மு.க. அரசு காலதாமதம் செய்து வருகிறது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தற்போது தி.மு.க. அரசு திறந்து வைக்கிறது.

    பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூருக்கு தோஷம் வந்துவிடுகிறது. மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பனியன் நிறுவனங்களை மூடும் நிலை வரும். அதை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கருணாகரன், ஹரிகரசுதன், பி.கே.எம்.முத்து, சுப்பிரமணியம், பட்டுலிங்கம், கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் உஷா ரவிக்குமார், துணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பி.பழனிசாமி, துணை செயலாளர் ரோட்டரி தேவராஜ், இணை செயலாளர் சம்பத், அர்பன் வங்கி தலைவர் சடையப்பன், வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்சன், அ.தி.மு.க. அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீதிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால் மற்றும் காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் போன்ற அறிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க. தொண்டர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ கவலை இல்லை. அவருக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

    தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.

    இதன்மூலம் அ.தி.மு.க.வுக்கு யார்? தீங்கு செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை வழங்கும். தி.மு.க. ஆட்சியில் சாமானிய மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.

    இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வால் தோல்வி அடைந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்பு சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், நான் மாற்றி கூறி விட்டேன். அவர் நீட் தேர்வால் உயிரிழக்கவில்லை என்று சமாளித்து பதில் அளித்தார்.

    ×