search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி ஜெயராமன்"

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

    • தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.
    • பாராளுமன்றத் தேர்தல் வெகு விரைவில் வரப்போகிறது.

    திருப்பூர்:

    போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. ஏற்கனவே 2 ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினர். இப்போது போதை பொருள் விற்பனையால் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து தி.மு.க.வின் அயலக அணி இணைச்செயலாளர் ஒருவர் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து தமிழக இளைஞர்களுக்கு சப்ளை செய்துள்ளார். 3 ஆண்டு காலத்தில் பல ஆயிரம் கோடி போதை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளார்கள்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. இதனை தடுக்க முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தவறிவிட்டார். இன்று திருப்பூர் மாநகராட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. 50 சதவீத கமிஷன் கேட்பதால் எந்த ஒரு பணி செய்வதற்கும் ஒப்பந்ததாரர்கள் முன் வரவில்லை.

    தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருவதோடு மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் எடுத்து பேசி வருகிறார். ஆனால் அதற்கு தி.மு.க. உரிய பதில் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்து வருகிறார். பாராளுமன்றத் தேர்தல் வெகு விரைவில் வரப்போகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களை எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவர் அவர் பேசினார்.

    • தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.
    • விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-பாலக்காடு சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மேலும் விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     பொள்ளாச்சி நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    ஒரு போலீஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    அந்தளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பொறுத்த வரை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்று கொள்பவர்களுடனே நாங்கள் கூட்டணி அமைப்போம். அப்படி வருபவர்களை சேர்த்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன.
    • புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோல்டன் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் திமுக., ஆட்சியில் எங்கேயாவது ஒரு வீடாவது கட்டிக் கொடுத்திருக்கிறார்களா? அதுமட்டுமல்ல , அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். அதையும் நிறுத்திவிட்டார்கள்.

    திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,அரசு வட்டியில்லா கடன் 200 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆட்சி யில் தொழில் முடங்கி கிடக்கிறது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி தி.மு.க., ஆட்சி. எப்போது ஸ்டாலின் வந்தாலும் அந்த ஆட்சியினுடைய அலங்கோலத்தை மக்கள் அனுபவிக்கிறோம்.

    ஏழை எளிய மக்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 450 டாக்டர்களையும் உருவாக்கியது அ.தி.மு.க.,தான். இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது.
    • மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், அவைத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு இணையாக திருப்பூர் மாநகராட்சிக்கும், திருப்பூர் மாநகராட்சியை விட அதிகமாக பொள்ளாச்சி நகராட்சிக்கு வரி விதிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது. மின் கட்டண உயர்வால் திருப்பூர் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து வரக்கூடிய நிலையில் அதனை மீட்டெடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தி.மு.க., ஆட்சி வரும் போதெல்லாம் தொழில்துறையினர் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது. மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு வந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் மட்டும்தான் அதுபோன்று இன்னொரு மாநாட்டை நடத்த முடியும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு . எம்ஜிஆர்., அறிமுகப்படுத்தி கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டத்தில் எம்ஜிஆரின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில் தி.மு.க. வேறொரு பெயரினை வைத்து மறைத்து வருகிறது. இதே நிலை தொடருமானால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டிலிங்கம், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், பி.கே. முத்து, திலகர் நகர் சுப்பு, மற்றும் ஜெயலலிதா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    திருப்பூர்:

    திருப்பூர் சூசையாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் 4½ ஆண்டு காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அதற்கு விடை தருகிற நாள்தான் பிப்ரவரி 27ந் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போகிற நாள் தான் பிப்ரவரி 27. அதன் பிறகு தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
    • தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து நடத்தி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று இரவு திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இந்தநிலையில் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. நாளுக்குநாள் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அதிகம் பங்கேற்க செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் 2-வது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதை எழுச்சியோடு நடத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து கையெழுத்து இயக்கத்தை வரும் 1 மாதகாலம் நடத்தி அதை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் ஹரிகரசுதன், கருணாகரன், திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, மார்க்கெட் சக்திவேல், கலைமகள் கோபால்சாமி, காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன், வெள்ளகோவில் நகர செயலாளர் மணி, அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு.
    • பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    எந்த வரியும் புதிதாக போட மாட்டோம் என்று சொல்லி வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் பன்மடங்கு உயர்வு போன்றவற்றை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அறிவித்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், புதிதாக வரியை போட்டு ஏழை, எளிய மக்கள் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளனர்.

    திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு. 4-வது குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்டங்களை விரைவில் முடிக்காமல் தி.மு.க. அரசு காலதாமதம் செய்து வருகிறது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தற்போது தி.மு.க. அரசு திறந்து வைக்கிறது.

    பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூருக்கு தோஷம் வந்துவிடுகிறது. மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பனியன் நிறுவனங்களை மூடும் நிலை வரும். அதை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கருணாகரன், ஹரிகரசுதன், பி.கே.எம்.முத்து, சுப்பிரமணியம், பட்டுலிங்கம், கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் உஷா ரவிக்குமார், துணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பி.பழனிசாமி, துணை செயலாளர் ரோட்டரி தேவராஜ், இணை செயலாளர் சம்பத், அர்பன் வங்கி தலைவர் சடையப்பன், வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்சன், அ.தி.மு.க. அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீதிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால் மற்றும் காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்களை பொறுத்தவரை ஒற்றை தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒற்றை தலைமை என்பது தேர்வாகி விட்டது. இது அனைவருக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    அதேநேரத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானங்கள் எதையும் கொண்டுவரக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தனர். புதிய தீர்மானங்கள் எதையும் கொண்டு வரக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், 'எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்' என்றார்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 'எங்களை பொறுத்தவரை ஒற்றை தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் மதிப்பு கொடுக்கிறோம்' என்றார்.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறுகையில், 'அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒற்றை தலைமை என்பது தேர்வாகி விட்டது. இது அனைவருக்கும் தெரியும்' என்று கூறியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், 'அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

    ×