search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Candidate"

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், திருவள்ளூர், எல்லாபுரம், பூந்தமல்லி ஒன்றிய விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ இரா.மணிமாறன், ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, உள்பட புரட்சிபாரதம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.

    இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் வாக்குகள் சேகரித்தார். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம்குமரவேல் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வி.சோமசுந்தரம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது பேசிய வேட்பாளர் ஆறுமுகம், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் நேரிடையாக கிராமமக்களுக்கு கிடைக்க முக்கிய பங்காற்றுவேன் என்றார். அவருடன் துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மஞ்சளாரவிக்குமார், ஆனூர் பக்தவச்சலம், விஜயரங்கன், அரிதாஸ், பா.ம.க. காரணை ராதா, முன்னாள் சேர்மன் வாசு,விவசாயபிரிவு மாம் பாக்கம்லட்சுமணன், கூட்டுறவு சங்கதலைவர் ரத்தினம், சாலூர் ஜானகிராமன், தேமுதிக, த.மா.கா, புரட்சிபாரதம், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.  #LokSabhaElections2019 #ADMK

    அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK

    ராயபுரம்:

    வடசென்னை பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மற்றும் பெரம்பூர் சட்டமன்றதொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோரை ஆதரித்து கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஆகியோர் 36-வது வட்டம் முல்லை நகரில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    கொடுங்கையூர் பள்ளிக் கூட சாலை அருகில் உள்ள காந்தி சிலை, எம்.ஆர்.நகர் மீன் மார்க்கெட், பாரதி நகர், சாஸ்திரி நகர், பி.வி.காலனி, எஸ்.ஆர்.பூக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது சரத்குமார் பேசியதாவது:-

    எதிர்கட்சிகளின் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள், துணை போக வேண்டாம். மெகா கூட்டணி தமிழகத்தில் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    அம்மா விட்டுச் சென்ற பணியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #ADMK

    தாம்பரம்:

    திருப்போரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் மேலக் கோட்டையூர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த கிராமப்புற பெண்களிடம் அ.தி.மு.க. அரசால் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள மகத்தான திட்டங்களான தாலிக்கு தங்கம், கர்ப்பிணி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டி, பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி, சைக்கிள் பிறக்கும் குழந்தைகளுக்காக பரிசு பெட்டி போன்றவற்றை அ.தி.மு.க. அரசு கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

    அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டங்களை பார்த்து வியந்த பிற மாநில அரசுகள் தற்போது அ.தி.மு.க. அரசின் இந்த திட்டங்களை அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வருகின்றனர் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என்று எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அவருடன் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்று ஆதரவு திரட்டினர். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறு முகம். தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொது மக்களிடம் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார். #LokSabhaElections2019

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறு முகம். தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொது மக்களிடம் தனது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.

    பி.வி.களத்தூர், ஆனூர், காட்டூர், கருமாரப்பாக்கம் கிராமங்களில் வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் பொது மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும், இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

    அ.தி.மு.க. ஒன்றியசெயலாளர் விஜயரங்கன், ஒன்றிய பொருளாளர் அரிதாஸ், பா.ம.க மாவட்டசெயலாளர் காரணை ராதா, தேமுதிக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். #LoksabhaElections2019

    சென்னை:

    கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்,வீதி வீதியாக வாக்கு சேகரித்தார் அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

    அவர் பொதுமக்களிடம், “அரசின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் அ.தி. மு.க. அரசு கொடுத்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து உள்ள நமது வேட்பாளர் மீண்டும் வெற்றி பெற்றவுடன் பல புதிய திட்டங்களை தொகுதியின் வளர்ச்சிக்காக செயல்படுத்துவார் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்மாதிரி தொகுதியாக தென் சென்னையை உருவாக்கவும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

    அவருடன் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் கே.பி.கந்தன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், கோவிலம்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் கோவிலம் பாக்கம் சி.மணிமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LoksabhaElections2019

    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். #ADMK

    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே சாமி கும்பிட்டு விட்டு தனது பிரசார பயணத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றபடி வீதிவீதியாக சென்று அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்களை பார்த்து கும்பிட்டபடி இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஓட்டு கேட்டார்.

    வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க. ஆனந்தன், பா.ஜ.க டால்பின் ஸ்ரீதர், த.மா.கா கொட்டிவாக்கம் முருகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் டி.ஜெயசந்தின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு உள்பட அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தின் போது வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாடியில் நின்று பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே தொடங்கிய பிரசாரம் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக சென்று கலங்கரை விளக்கம் அருகே முடிவடைந்தது. பிரசாரத்தின் இடையே ஜெயவர்தன் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது :-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மயிலாப்பூர் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

    ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பொன்னான நலத்திட்டங்கள் இன்றும் நினைவு கூறத்தக்கவையாக உள்ளது. தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எண்ணற்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

    எம்.பி. மேம்பாட்டு நிதி மூலம் தென்சென்னை தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறோம். நிச்சயம் இந்த பாராளுமுன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில உரிமையை நிலைநாட்டுவோம்.

    இவ்வாறு வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #ADMK

    தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் இன்று திடீரென மாற்றப்பட்டுள்ளார். #ADMKCandidate #PeriyakulamCandidate
    தேனி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடங்கினார்.

    இந்நிலையில் பெரியகுளம் தொகுதி வேட்பாளரை அதிமுக தலைமை திடீரென மாற்றி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில், “அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18-4-2019 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்குப் பதிலாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, அல்லி நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.மயில்வேல் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

    முருகன்

    வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முருகன், ஓ.பி.எஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முருகன் மீது கட்சி பிரமுகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. #ADMKCandidate #PeriyakulamCandidate
    அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் தலைமை கழகத்தில் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் வேட்பாளர் பட்டியலை 13-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். #admk #parliamentelection

    சென்னை:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளை இந்த கூட்டணியில் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் தலைமை கழகத்தில் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதன் பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை தயார் செய்கின்றனர்.

    அதன் பிறகு 13-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே எம்.பி.யாக உள்ளவர்களில் யார்- யாருக்கு ‘சீட்’ கிடைக்கும், யாருக்கெல்லாம் ‘சீட்’ இல்லை என்பது அப்போது தெரியவரும்.

    தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்ட நிலையில் இன்று தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.

    21 சட்டசபை தொகுதிகளுக்கு இன்றும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது.

    இதன் பிறகு தி.மு.க. வேட்பாளர் பட்டியலை 11-ந்தேதி மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #admk #parliamentelection

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThiruvarurByElection #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி மூன்றும் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்தனர்.

    ஆளும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த 52 அ.தி.மு.க. நிர் வாகிகள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 2016-ம் ஆண்டு தேர்தலின்போது கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார்.

    அதுபோல திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனும் மீண்டும் திருவாரூரில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளார். இவர் திருவாரூர் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 2 தடவை எம்.எல்.ஏ.ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர் மீண்டும் களம் இறங்க அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் பேசி வருகிறார்.

    இதற்கிடையே குத்தாலம் தொகுதியில் இருந்து 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாப்பா சுப்பிரமணியனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜின் முக்கிய ஆதரவாளர் ஒருவரும் வேட்பாளராக மாற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கூட்டம் இன்று மதியம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. மற்றும் தினகரன் கட்சி வேட்பாளர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அ.தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

    நாளை நடக்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படுகிறது.

    திருவாரூரில் களம் இறங்க அ.தி.மு.க.வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் 2016-ல் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது நாளை மாலை அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளரை அறிவித்த தும் பிரசார பணிகளைத் தொடங்கவும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற் காக அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளை ஒருங் கிணைக்க தனியாக ஒரு குழுவும் உருவாக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களையும் பிரசார பணி களில் ஈடுபடுத்த திட்ட மிட்டுள்ளனர். இது பற்றிய முழு விபரமும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். #ThiruvarurByElection #ADMK
    ×