search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aditanar College"

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திருச்செந்தூர்:

    'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் கிராமப்புற மாணவர்கள் தரமான உயர்கல்வி பெற்று தன்னிறைவோடு வாழவும், வளமான இந்திய குடிமக்களாக திகழவும், திருச்செந்தூரில் கடந்த 1965-ம் ஆண்டு ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கினார்.

    ஒழுக்கம், கல்வி, மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு செயல்படும் இக்கல்லூரியானது தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் ஆராயப்பட்டு 3-ம் சுழற்சியிலும் 'ஏ' தரச்சான்றிதழை பெற்றுள்ளது.

    பாடப்பிரிவுகள்

    இக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், இளம் அறிவியல் பாடப்பிரிவுகளாக கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், இளம் வணிகவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் என 9 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    முதுநிலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், கணிதம், வேதியியல், விலங்கியல், ஆய்வியல் படிப்புகளாக (எம்.பில்.) பொருளியல், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், பிஎச்.டி. படிப்புகளாக பொருளியல், ஆங்கிலம், வேதியியல், விலங்கியல், கணிதம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

    மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

    கல்லூரியில் அனுபவமிக்க பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், விளையாட்டு போட்டிகள், சமுதாய வானொலி போன்றவற்றில் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இங்கு சிறந்த நூலக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. வளாகத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. மாணவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.

    மாணவர் சேர்க்கை

    கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04639-220625, 220632 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கருத்தரங்கை கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
    • சையது முகமது கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகள் பற்றிய விளக்க உரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆதித்தனார் கல்லூரி வேலைவாய்ப்பு மையமும் இணைந்து வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கை கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்பு மைய பொறுப்பாளர் சேகர் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட தலைமை வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகள் பற்றிய விளக்க உரையாற்றினார். மேலும், அப்பணிகளுக்கு எவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பிப்பது என்பது பற்றியும் தெளிவாக விளக்கி கூறினார். தொடர்ந்து ேபசிய அவர், அனைத்து போட்டி ேதர்வுகளையும் ஒரே நேரத்தில் எழுதாமல் முறையான தேர்வினை தேர்ந்தெடுத்து முழு முயற்சியோடு பாடத் தொகுப்பினை நன்கு படித்து தேர்வு எழுதினால் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முடியும் என்று மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். வேதியியல் துறை தலைவர் கவிதா நன்றி கூறினார். கருத்தரங்கில் இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களும், முதுகலை 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • வக்கீல் ஆயிரம் செல்வக்குமார் கலந்து கொண்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டம் மற்றும் போக்சோ பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுகள் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். உள்தரஉறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைைலன்ட் நைட் வரவேற்றார். கருத்தரங்கில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை வக்கீல் ஆயிரம் செல்வக்குமார் கலந்து கொண்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டம் மற்றும் போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) பற்றி விளக்கம் அளித்து பேசினார். இந்த 2 சட்டங்கள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார். இன்ஸ்டிடியுசன் இன்னோவேஷன் கவுன்சில் பொறுப்பாளர் மற்றும் வணிக மேலாண்மை துறை பேராசிரியர் அ.தர்மபெருமாள் நன்றி

    கூறினார். இக்கருத்தரங்கில் நூலகர் முத்துக்கிருஷ்ணன், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், கோகிலா, மூகாம்பிகை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உறுதிமொழியினை படித்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உறுதிமொழியினை படித்தார். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பசுங்கிளிபாண்டியன், சிவமுருகன், சிவ இளங்கோ, அபுல்கலாம் ஆசாத், மருதையாபாண்டியன், கவிதா, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 48 சார்பில், வெள்ளாளன்விளை கிராமத்தில் சிறப்பு முகாம் ஒரு வாரம் நடந்தது.
    • முகாமில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 48 சார்பில், வெள்ளாளன்விளை கிராமத்தில் 'தூய்மை பணியில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்பு முகாம் ஒரு வாரம் நடந்தது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். வெள்ளாளன்விளை தூய திரித்துவ ஆலய சேகர தலைவர் தினகரன் சாலமன், சுரேகா தினகரன் சாலமன், பஞ்சாயத்து தலைவர்கள் பரமன்குறிச்சி லங்காபதி, வெள்ளாளன்விளை ராஜரத்தினம், முன்னாள் விலங்கியல் துறை தலைவர் சாமுவேல், ஆலய பரிபாலன கமிட்டி செயலாளர் சாமுவேல் ஞானபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முகாம் நாட்களில் மாணவர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகள், சமூகசேவைகள், விழிப்புணர்வு பேரணிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தினர். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. இயற்கை விவசாயி முரளி, ஆசிரியர் நாராயணன் ஆகியோர் உரையாற்றினர். இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர்கள் வான்மதி, ஸ்ரீவிக்னேஷ்வரி ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை, மருந்து மாத்திரைகள் வழங்கினர். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், ஐடியல் குரூப் அருள்ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாம் நிறைவு நாளில் கல்லூரி முதல்வர் மகேந்திரன் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வாழ்த்தி பேசினார். ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா செய்து இருந்தார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை சாரபில், 2 நாட்கள் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • நெல்லை சாரதா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை சுஜாதா கலந்துகொண்டு பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை சாரபில், 2 நாட்கள் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

    தொழில் முனைவோர் எப்படி வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுகிறார்? என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கத்தில் துறை தலைவர் சிரில் அருண் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வேலாயுதம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக குற்றாலம் பராசக்தி கல்லூரி வணிகவியல் பேராசிரியை முருகேஸ்வரி மற்றும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் வணிகவியல் சுயநிதிப்பிரிவு துறை தலைவர் ஜேசுராஜ் கலந்துகொண்டு தொழில் முனைவோராக எவ்வாறு மாற வேண்டும்? என எடுத்துரைத்தனர். இறுதியில் பேராசிரியை கரோலின் கண்மணி ஆனந்தி நன்றி கூறினார்.

    2-வது நாளாக நேற்று சமூக ஊடக சந்தைப்படுத்தலின் சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் துறை தலைவர் திருச்செல்வன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். நெல்லை சாரதா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை சுஜாதா, சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியை ஷிபா மெர்லின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி மற்றும் இதர கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியை பார்வதிதேவி, டயானா ஸ்வீட்லின், ரூபன் சேசு அடைக்கலம், சுமதி ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியை பாசமலர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் ரமேஷ், சாந்தி, பசுங்கிளி பாண்டியன், சிவக்குமார், அந்தோணி சகாய சித்ரா மற்றும் பேராசிரியர்கள் ராஜ்பினோ, கருப்பசாமி, திலபன், கவிதா, முத்துக்கிருஷ்ணன், சிங்காரவேலு, அந்தோணி பிரைட் ராஜா, பெனட், ராஜபூபதி, சகாய ஜெயசுதா, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், லைட் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 120-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்தர உறுதிப் பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனைப்படி, லைட் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ்சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) வேலாயுதம் தலைமை தாங்கி, சிறப்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். லைட் முதியோர் இல்லத்தின் நிறுவனர் பிரேம்குமார், முதியோர் இல்லம் குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இயற்பியல் துறை பேராசிரியர் பாலு கலந்து ெகாண்டார். கல்லூரி மாணவ, மாணவிகள் 25பேர் முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளை நடத்தி முதியோர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் 120-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆங்கிலத்துறை பேராசிரியர் தாவூதுராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ச.மோதிலால் தினேஷ் நன்றி கூறினார்.

    மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமவாய்ப்பு மையம் சார்பில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி 'மன அழுத்தத்திற்கான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கணினித்துறை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியை மற்றும் சமவாய்ப்பு மையத்தின் ஆலோசகர் கு.ராமஜெயலட்சுமி வரவேற்று பேசினார்.

    விலங்கியல்துறை உதவிப்பேராசிரியை ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் ெசய்தார். நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கேரட்ராஜா இம்மானுவேல், மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி? மன அழுத்தத்தின் நிலைகள், மன ரீதியான உடல் ரீதியான மன அழுத்தத்திற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். மாணவர்கள் எழுப்பிய உளவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்கள் அளித்தார். இக்கருத்தரங்கில் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இளங்கலை 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் திலீபன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியைகள் ரீட்டா யசோதா, முனீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
    • ‘தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி’ என்ற ஆய்வு நூலை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வெளியிட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் துறைத்தலைவர் கதிரேசன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் தமிழ்துறை பேராசிரியர் சுயம்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகள் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டது. 'தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி' என்ற ஆய்வு நூலை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வெளியிட்டார். அதனை புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி தமிழ் துறைத்தலைவர் அரங்க முருகையன் பெற்று கொண்டார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு மைய இணை பேராசிரியர் வேல் கார்த்திகேயன் நிறைவுரையாற்றினார்.

    கல்லூரி பல்வேறு துறைத்தலைவர்கள் ரமேஷ், சுந்தர வடிவேல், பாலு, ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், செந்தில்குமார், பேராசிரியர்கள் வசுமதி, மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், சேகர், செல்வகுமார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி மற்றும் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி, நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
    • பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பளு தூக்கும் மன்றம் மற்றும் ரத்த தான கழகம் இணைந்து நடத்திய 'பளு தூக்குதல் பயிற்சி பட்டறை' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பளு தூக்கும் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயவேல் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் பளுதூக்குதலின் நன்மைகள் மற்றும் அதனால் உடல் மற்றும் மனம் எவ்வாறு தகுதி அடைகிறது என்பதை பற்றிய விஷயங்களை மாணவர்களிடம் கலந்துரையாடினார். ரத்த தானம் செய்பவர்கள் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் மாணவர்களை வழி நடத்தினார். பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான மாண வர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் பளு தூக்கும் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் தாவீது ராஜா நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக தேசிய அளவிலான ‘சிம்போசியம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேராசிரியை இந்திராணி இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன் பாட்டையும், விழிப்புணர்வு பற்றியும் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் (சுயநிதி பிரிவு) துறை சார்பாக தேசிய அளவிலான 'சிம்போசியம்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கணினி அறிவியல் பொறுப்பு துறைத்தலைவர் ராஜபூபதி அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியை இந்திராணி கலந்து கொண்டு இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன் பாட்டையும், விழிப்புணர்வு பற்றியும் கலந்துரை யாடினார். நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை தலைவர் வேலாயுதம் நடுவராக கலந்து கொண்டு, கல்லூரிகளுக்கிடை யேயான மாணவர் திறன் சார் போட்டிகளை நடத்தினார். தொடக்க விழாவில் இயற்பியல்துறை தலைவர் பாலு, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா, வேதியியல் துறை தலைவர் கவிதா, தமிழ்துறை பேராசிரியர் சிங்காரவேலு, ஆங்கிலத்துறை பேராசிரியர் ஆண்டனி பிரைட் ராஜா, வணிகவியல்துறை பேராசி ரியர்கள் பார்வதிதேவி, சுமதி, சிரில்அருண், திருச்செல்வம், ரூபன் இயேசு அடைக்கலம், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் இணைந்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பேராசிரியை சகாய ஜெயசுதா நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப படைப்புத்திறன் போட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது.
    • இயற்பியல் துறைத்தலைவர் பாலு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப படைப்புத்திறன் போட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அகத்தர மதிப்பீட்டு குழு தலைவர் ஜிம்ரீவ்ஸ் வரவேற்று பேசினார். இயற்பியல் துறைத்தலைவர் பாலு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி (மெட்ரிக் பள்ளி) பிரபாகுமார் பரிசு, சான்றிதழ் வழங்கினார். இதில் திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளி முதலிடமும், காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், காயல்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து அனிதாகுமரன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 3-வது இடமும் பிடித்தது.

    நடுவர்களாக பேராசிரியர்கள் பாலு, வசுமதி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உமா ஆகியோர் செயல்பட்டனர். கண்காட்சியை திருச்செந்தூர் சுற்று வட்டார பள்ளி மாணவர்கள் பார்த்து பயனடைந்தனர். கல்லூரி கணினித்துறை தலைவர் வேலாயுதம் கணினியின் செயல்பாடுகள், மென்பொருட்கள் குறித்தும், வேதியியல் துறைத்தலைவர் கவிதா வேதிவினைகள், வேதிப்பொருட்கள் குறித்தும் விளக்கி கூறினர். விலங்கியல் துறை சார்பில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் குறித்து துறைத்தலைவர் சுந்தர வடிவேல் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி, பேராசிரியர்கள் வாசுகி, ஜெசிந்த் மிஸ்பா, சேகர், சிரில் அருண், திருச்செல்வன், ஜெயராமன், மோதிலால் தினேஷ், செண்பகாதேவி, லிங்கதுரை, லோக் கிருபாகர், சிவமுருகன் ஆகியோர் செய்து இருந்தனர். கண்காட்சி அமைப்பாளர் பாகீரதி நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். விலங்கியல்துறை பேராசிரியை வசுமதி, மகளிர் தினம் குறித்து பேசினார். இவ்விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் சாதனை படைத்து வாழ்வில் முன்னேறி நற்பெயரை பெற்றோருக்கு எடுத்து கொடுக்க வேண்டும். சமூகவலைதளத்தில் பல்வேறு அபாயங்கள் இருக்கிறது. இவற்றை கையாளும் போது பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும், என்றார். முன்னதாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தஜோதி வரவேற்று பேசினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், முதுகலை மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். தொடர்ந்து முதுகலை மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை மாணவிகள் செய்திருந்தனர்.

    ×