search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Science and Technology Creativity Competition"

    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப படைப்புத்திறன் போட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது.
    • இயற்பியல் துறைத்தலைவர் பாலு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப படைப்புத்திறன் போட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அகத்தர மதிப்பீட்டு குழு தலைவர் ஜிம்ரீவ்ஸ் வரவேற்று பேசினார். இயற்பியல் துறைத்தலைவர் பாலு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி (மெட்ரிக் பள்ளி) பிரபாகுமார் பரிசு, சான்றிதழ் வழங்கினார். இதில் திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளி முதலிடமும், காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், காயல்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து அனிதாகுமரன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 3-வது இடமும் பிடித்தது.

    நடுவர்களாக பேராசிரியர்கள் பாலு, வசுமதி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உமா ஆகியோர் செயல்பட்டனர். கண்காட்சியை திருச்செந்தூர் சுற்று வட்டார பள்ளி மாணவர்கள் பார்த்து பயனடைந்தனர். கல்லூரி கணினித்துறை தலைவர் வேலாயுதம் கணினியின் செயல்பாடுகள், மென்பொருட்கள் குறித்தும், வேதியியல் துறைத்தலைவர் கவிதா வேதிவினைகள், வேதிப்பொருட்கள் குறித்தும் விளக்கி கூறினர். விலங்கியல் துறை சார்பில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் குறித்து துறைத்தலைவர் சுந்தர வடிவேல் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி, பேராசிரியர்கள் வாசுகி, ஜெசிந்த் மிஸ்பா, சேகர், சிரில் அருண், திருச்செல்வன், ஜெயராமன், மோதிலால் தினேஷ், செண்பகாதேவி, லிங்கதுரை, லோக் கிருபாகர், சிவமுருகன் ஆகியோர் செய்து இருந்தனர். கண்காட்சி அமைப்பாளர் பாகீரதி நன்றி கூறினார்.

    ×