search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திருச்செந்தூர்:

    'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் கிராமப்புற மாணவர்கள் தரமான உயர்கல்வி பெற்று தன்னிறைவோடு வாழவும், வளமான இந்திய குடிமக்களாக திகழவும், திருச்செந்தூரில் கடந்த 1965-ம் ஆண்டு ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கினார்.

    ஒழுக்கம், கல்வி, மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு செயல்படும் இக்கல்லூரியானது தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் ஆராயப்பட்டு 3-ம் சுழற்சியிலும் 'ஏ' தரச்சான்றிதழை பெற்றுள்ளது.

    பாடப்பிரிவுகள்

    இக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், இளம் அறிவியல் பாடப்பிரிவுகளாக கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், இளம் வணிகவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் என 9 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    முதுநிலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், கணிதம், வேதியியல், விலங்கியல், ஆய்வியல் படிப்புகளாக (எம்.பில்.) பொருளியல், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், பிஎச்.டி. படிப்புகளாக பொருளியல், ஆங்கிலம், வேதியியல், விலங்கியல், கணிதம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

    மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

    கல்லூரியில் அனுபவமிக்க பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், விளையாட்டு போட்டிகள், சமுதாய வானொலி போன்றவற்றில் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இங்கு சிறந்த நூலக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. வளாகத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. மாணவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.

    மாணவர் சேர்க்கை

    கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04639-220625, 220632 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×