search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aalayam"

    • கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.
    • ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    கால சர்ப்ப தோஷம் மற்ற தோஷங்களைப் போலவே ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம்

    ஜெனன காலத்தின் மற்றைய கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தீய பலன்களை விளைவிக்கும்.

    ஆதலால், கால சர்ப்ப தோஷம் உள்பட அனைத்து தோஷங்களையும், அவற்றின் தன்மை, அளவு, ஏற்படும் காலம்

    இவற்றைத் தக்க ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து கொள்ளாமல் கலங்க வேண்டிய அவசியமில்லை.

    பாதிப்பின் கடுமையைத் தக்க பரிகாரத்தினால் குறைக்க முடியும்.

    ஆயினும் அந்தப் பரிகாரத்தை, சாந்தியை அதிகப் பொருட் செலவில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

    சாதாரணமாக, சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம்,

    ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும்.

    ஆனால் கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.

    இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில்,

    சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த

    புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார சேஷ்த்திரங்களில் ஒன்றாகும்.

    சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால்

    பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும்

    கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.

    "ஆனந்த ப்ரதம்ம ரூபம் திரேதாயோம் பலபத்ரச்ச கலியுகே கசதி பவிஷ்யதி" - ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம்.

    ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.

    ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் கால சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும்

    ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால்

    அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும். (ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்ப என்ற பெயர் உண்டு).

    இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, கால சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    • கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம்.
    • பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.

    கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம்.

    அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை

    நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.

    கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

    சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம்.

    தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

    • வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
    • கேது ஞானம், மோட்சம் தருபவர்.

    ராகுவின் உடல் பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது.

    கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும்.

    கேது ஞானம், மோட்சம் தருபவர்.

    ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு,

    வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.

    கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி,

    பல வண்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும்.

    வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.

    • ராகு கால பௌர்ணமி பூஜை பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
    • ராகு கால ஏகாதசி பூஜை பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

    கிரக சர்ப்ப சாந்தி

    பாம்பினை அடிப்பதால் வரும் தோசம் மற்றும் முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க செம்பு அல்லது

    வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.

    பிறகு அதை வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் வைத்து ஓடுகின்ற தண்ணீரில் போட வேண்டும்.

    அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    1. ராகு கால பௌர்ணமி பூஜை பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.

    2. ராகு கால கிருத்திகை பூஜை புகழ் தரும்.

    3. ராகு கால சஷ்டி பூஜை புத்திரப்பேறு கிடைக்கும்.

    4. ராகு கால ஏகாதசி பூஜை பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

    5. ராகு கால சதுர்த்தி பூஜை துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.

    எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து

    தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    • இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.
    • அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.

    பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர்.

    இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர்.

    இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.

    கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

    இதே போன்று நாகலோகம் என்ற ஒன்று இருந்ததாகவும், அங்கு நாகங்களின் தலைவன் நாகராஜன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி.

    அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார்.

    அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.

    இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.

    இவ்வாறு நாக வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.

    • பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன.
    • அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன.

    தமிழ்நாட்டிலும் நாக வழிபாடு புகழ் பெற்றது.

    பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன.

    நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர்

    போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.

    அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன.

    நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம்,

    பாம்பணி, காலத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.

    பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது.

    நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன்,

    நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை.

    கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.

    • மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.
    • இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை நாக வழிபாடு இருந்து வருகிறது.

    நாக வழிபாடு கீழ்கண்ட நன்மைகளைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    1. மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.

    2. வாழ்வில் வளம் பெருகும்.

    3. நோய்கள் குணமாகும்.

    4. இறந்த பின்பு உறவினர்களும், அரசர்களும் பாம்பாக மறுபிறவி எடுப்பார்கள்.

    5. முன்னோர்கள் பலவித வியாதிகளை உண்டாக்குவார்கள். அதிலிருந்து விடுபட நாக வழிபாடு அவசியம்.

    இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை நாக வழிபாடு இருந்து வருகிறது.

    குறிப்பாகத் தென் இந்தியாவில் நாக வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைந்தே நடைபெறுகிறது.

    • நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர்.
    • நாக வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது.

    முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை

    பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

    இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன.

    இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.

    நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர்.

    நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர்.

    இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.

    முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும்,

    விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.

    நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது.

    அன்று முதல் இன்று வரை நாக வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நாக வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது.

    பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் நாக வழிபாடு இருந்து வருகிறது.

    • “இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் உனக்கு பாதை காட்டும் என்றது அசரீரி.
    • இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

    இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார்.

    ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது.

    இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது.

    சிவனைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையால் அந்த வணிகர் கதறி அழுதார்.

    அவரது வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்கு திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார்.

    அப்போது, "இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்கு பாதை காட்டும்.

    அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன்" என அசரீரி கேட்டது.

    அதன்படியே எறும்புகள் வழிகாட்ட, அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார்.

    பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, சிவனுக்கு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார்.

    திருச்செந்தூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம்.

    இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    பங்குனி உத்திரப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடும் தென் மாவட்ட ஆலயங்களுள், முதன்மையான தலம் இது ஆகும்.

    பங்குனி உத்திர நாளில், இங்கு திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளில், திருமணப் பிரார்த்தனை செய்பவர்கள், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி,

    அதில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிரகார வலம் வருவர்.

    இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

    அதேபோல் இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக் கொள்ள, வீட்டில் விரைவில் கெட்டிமேள சத்தம் கேட்குமாம்.

    திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்தபடி காட்சி தருவர்.

    இதைத் தரிசிக்க நம் வேதனைகள் பறந்தோடி விடும்.

    • வழிபாட்டுப் படையலுக்காக, மூன்று கற்களை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கலிடுவார்கள்.
    • அகநானூறு, பங்குனி உத்திரத்தை, “பங்குனி முழக்கம்” என்று குறிப்பிடுகிறது.

    பங்குனி உத்திரம் மிக பழமையான விழாக்களில் ஒன்றாகும்.

    பழந்தமிழ் நாட்டில் சோழர் தலைநகராக விளங்கிய உறையூரில் மிகப் பெரிய விழாவாக இது நடைபெற்றது.

    அகநானூறு, பங்குனி உத்திரத்தை, "பங்குனி முழக்கம்" என்று குறிப்பிடுகிறது.

    பங்குனி உத்திரத்தன்று காவிரியின் தென்கரை, வடகரை இரு பகுதிகளிலும், அதன் வடக்கே அமைந்த கொள்ளிட ஆற்றங்கரைகளிலும்,

    பற்பல ஊர்களின் மக்கள், இரவு நேரங்களில் ஆற்றின் மணல் வெளிகளில் இறை உருவங்களை அமைத்து,

    அலங்கரித்து, திருவரங்கப் பெருமாளையும், வயலூர் முருகப் பெருமானையும் வழிபாடு செய்வார்கள்.

    வழிபாட்டுப் படையலுக்காக, மூன்று கற்களை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கலிடுவார்கள்.

    மக்களின் குலவை ஒலியும், இசை நடனம் ஆகிய கொண்டாட்டங்களின் ஓசையும் நிறைந்து பவுர்ணமித் திருவிழா, தேசிய திருவிழாவாகவே நடைபெறும்.

    போரில் வெற்றி பெறும் சோழர்களின் புகழ் பெற்ற நகராகிய உறையூரில், கரைகளில் ததும்பி நீர் நிறைந்து செல்லும்.

    காவிரியாற்றின் கரைகளில் உள்ள வெண்மணல் நிறைந்த சோலைகளில் "பங்குனி முழக்கம்" என்ற திருவிழாவில்,

    மரத்தடி தோறும் அடுப்பு மூட்டிப் பொங்கலிட்டு வழிபட்டு விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

    என்ற கருத்தில் உறையூர் முதுகூத்தனார் என்ற புலவர் அகநானூற்றில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

    பங்குனி உத்திரத்தன்று காவிரியின் வடகரையில் உள்ள ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப் பெருமாளும், ஸ்ரீரங்கநாச்சி யாரும் இணைந்து அமர்ந்து திருக்காட்சி தருவர்.

    பங்குனி உத்திரத்தன்று இரவு முழுவதும் இணைந்து காட்சி தரும் திவ்ய தம்பதியரை "சேர்த்திப் பெருமாள்" என்று போற்றி அடியவர் வழிபாடு செய்வர்.

    உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், பெருமாளும், தாயாரும் சேர்த்தியாகச் சேவை சாதித்த காலத்தில் தான் "கதியத்ரையம்" என்ற நூலை அருளச் செய்தார்.

    திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரரப்படி உரையையும், திருப்பாவைக்கு ஈராயிரப்படி உரைகளையும் சரணாகதி கத்யத்துக்கு விரிவுரையும் எழுதிய நஞ்சியா என்ற திருமாலடியார் பங்குனி உத்திரத் திருநாளில் தான் தோன்றினார்.

    • சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
    • அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் பங்குனி உத்திரமாகும்.

    ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    பலி விழாப்பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா என்று திருஞான சம்பந்தர் பங்குனி உத்திரத்தை போற்றி பாடுகிறார்.

    சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

    முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில், பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சமாகவும் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.

    • அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.
    • ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,

    அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

    அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு

    பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.

    ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,

    மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.

    முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,

    வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,

    ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

    ×