search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம் நடராஜர்"

    • சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
    • மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.

    1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

    2. பஞ்சபூத தலங்கள் மற்றும்பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.

    3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.

    4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

    5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.

    6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன.

    7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன.

    8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

    9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.

    10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன.

    11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார்.

    12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும்பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப்பார்க்க முடியும்.

    13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தைபாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.

    14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில்பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.

    15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை "மூத்த நாயனார்" என்கிறார்கள்.

    16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்துபாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

    17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.

    18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள்.

    19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்றபாடலைபாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது.

    20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்தபாடலைபாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு "திருக்களிற்றுப்படியார்" என்ற பெயர் ஏற்பட்டது.

    21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி,பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர்பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.

    22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல்பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது.

    23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன.

    24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.

    25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும்.

    26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாகபாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது.

    27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

    28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது.

    29. இத்தலத்துக்கு "தில்லை வனம்" என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.

    30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களைபாடினார்.

    • இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.
    • இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

    மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கான மாதம்.

    இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.

    இதில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரைத் திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.

    அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் இந்தத் திருவிழா பிரம்மோற்சவமாக நடைபெறும்.

    ஆருத்ரா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.

    தமிழில் ஆதிரை, அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது.

    'ஆருத்ரா' என்ற சொல்லுக்கு 'ஈரமான', 'இளகிய', 'புத்தம் புதிய', 'பசுமையான' என்ற பல அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள்.

    இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

    அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள்.

    அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள்.

    இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

    இந்நாளில் நாம் காணும் சிதம்பரம் நடராஜரின் அற்புதமான நடனத் திருக் காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.
    • சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு பிரசாதமாக கற்கண்டு சாதம் படைக்கப்படுகிறது.

    கற்கண்டு, நெய், முந்திரியில் செய்யப்படும் இச்சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.

    அதுபோன்று சம்பா சாதம், எண்ணை கொஸ்து மற்றொரு பிரசாதமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இவையல்லாமல் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரைக்களி நடராஜருக்கு படைத்து விநியோகிக்கப்படும்.

    சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்கசுவரில் உள்ள மந்திரசக்தியாக உள்ளது.

    இது இறைவனின் 3 நிலைகளில் ஒன்றான அருவ நிலையைக் குறிக்கும்.

    இத்தலம் பஞ்சபூதங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவதால் இறைவனை மந்திர வடிவமாக யந்திரமாக நிறுவியுள்ளனர்.

    இங்குள்ள யந்திரத்தை திருவரும் பலச்சக்கரம் என்றும் சிவசக்தி சம்மேளனச் சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.

    இதற்கு ஆண்டுக்கு ஒருமுறை புணுகு சாத்துவார்கள்.

    இதன்மீது தங்க வில்வ மாலை தொங்கவிடப்பட்டுள்ளது.

    இதன் மீது தொங்கும் திரை வெளிப்புறம் கருப்பும், உட்புறம் சிவப்பும் கொண்டதாக உள்ளது.

    மறைப்பு சக்தியே அருட்சக்தியாக மாறி உதவும் என்பதை விளக்குகிறது.

    • நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும்.
    • மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வாய்ந்தவை.

    நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சிதம்பரம் தான். இத்தல நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தவை. நடராஜருக்கு அமைந்த மற்றுமொரு சிறப்பு மிகுந்த கோவில்தான், நெய்வேலியில் உள்ள 'அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்னும் நடராஜர் கோவில். இங்கும் நடராஜருக்கு ஆண்டு தோறும் 6 மகா அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    கோவில் அமைப்பு

    கோவில் நுழைவு வாசலின் வலது புறத்தில் ஆராய்ச்சி மணி என்ற பெயரில் ஆலய மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே மனுநீதி முறைப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் குறைகளையும், நியாயமான விருப்பங்களையும் ஒரு தாளில் நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப் பெட்டியில் போட வேண்டும். பின்னர் ஆராய்ச்சி மணியை 3 முறை ஒலிக்க செய்து விட்டு கோவிலை வலம் வந்து வீட்டிற்குச் செல்கின்றனர்.

    பின்னர் அந்த கோரிக்கை கடிதங்கள், காலை நேர பூஜையில் தீட்சிதர்களால் நடராஜர் முன்பு ரகசியமாக படிக்கப்பட்டு பின்னர் எரியூட்டப்படும். அதைக்கேட்டு பக்தர்களின் குறைகளை இறைவன் நீக்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறு குறை நீங்கியவர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நன்றி கடிதத்தையும் எழுதி அந்த மனுநீதி முறைப் பெட்டியில் போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    நாம் இன்று படிக்கும் `திருவாசகம்' என்னும் நூலானது, மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, சிதம்பரம் கோவிலில் வைத்து சிவபெருமானே தன் கரங்களால் எழுதியது. அந்த நூலின் இறுதியில் `திருச்சிற்றம்பலமுடையான்' என்று இறைவன் கையெழுத்திட்டு இருப்பதே இதற்கு சான்று. அந்த பெயரை நினைவுகூரும் வகையில்தான், நெய்வேலியில் உள்ள ஆலயத்திற்கு `அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தியானசபை' என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. நடராஜர்

    இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி அம்பாள் `ஓசை கொடுத்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில்தான் உலகிலேயே மிக உயரமான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலை 10 அடி ௧ அங்குல உயரமும், 8 அடி 4 அங்குல அகலமும், 2 ஆயிரத்து 420 கிலோ எடையும் கொண்டது.

    நடராஜர் அருகே வீற்றிருக்கும் சிவகாமி அம்பாள் சிலை, 7 அடி உயரமும், சுமார் 750 கிலோ எடையும் கொண்டது. எல்லா கோவில்களிலும் நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர் இருப்பார். ஆனால், இந்தக் கோவிலில் நடராஜர் பாதத்தில் திருமூலர் இருக்கிறார். மேலும், வலப்புறம் வியாக்ரபாதரும், இடப்புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். இந்த இரு முனிவர்களின் பெருந்தவத்திற்கு இறங்கிதான் நடராஜர், தனது ஆனந்த நடனத்தை காட்டி அருளினார்.

    நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களில் பணியாற்றிய பக்தர்கள் சிலர், 1980-ம் ஆண்டு சைவத்தை வளர்க்கும் நோக்கத்துடன் பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதன் தலைவராக அப்போதைய நகர தந்தை ராமலிங்கம் பிள்ளை பொறுப்பேற்றுக்கொண்டார். இக்கழகத்தினர் சிறு அளவிலான வழிபாடுகள், திருமுறை இசை நிகழ்ச்சிகள், திருமுறை பயிற்சிகள், முற்றோதல்கள், தல யாத்திரைகள், உழவாரப்பணிகள் என்று தெய்வீக பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்த பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினர், தங்கள் ஊரிலும் சிவன் கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்தனர். பளிங்கு கோவில் ஒன்றை கட்டி, அதில் நடராஜரின் திருமேனியை நிறுவ எண்ணினர். 1986-ம் ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையில் மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகளால் இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பலரின் கடுமையான உழைப்பால் ஒரே ஆண்டில் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

    இக்கோவில் கட்டப்பட்டபின் இப்பகுதி சிவ புரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் வடிவமான திரிமூர்த்தி வடிவம், கோவிலின் முகப்பு பகுதியில் உள்ளது. நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, குடந்தை அருணஜடேஸ்வர ஸ்தபதி உலகிலேயே மிகப்பெரிய அழகிய திருச்சிற்றம்பல முடையானை வடிவமைக்க ஒப்புக்கொண்டார். 8-9-1986 அன்று குடந்தையை அடுத்த மேலக்கொற்கை என்ற ஊரில் போகர் கூறியபடி பலவகையான மூலிகைகளை கொண்டு, ஓதுவாமூர்த்திகளின் தெய்வத்தமிழ் தேவார பாடல்களுடனும், தில்லைவாழ் அந்தணர்களின் வேத கோஷத்துடனும், மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகள் மேற்பார்வையில் திருச்சிற்றம்பலமுடையாரின் ஐம்பொன் செப்புத் திருமேனி வார்க்கப்பட்டது. அதுவே, அழகிய திருச்சிற்றம்பல முடையான் ஆலயத்தில் உள்ள தற்போதைய நடராஜர் சிலையாகும்.

    நடராஜப் பெருமானுக்கு `பஞ்ச சபைகள்' என்ற ஐந்து சபைகள் உண்டு. அவை ரத்தின சபை, வெள்ளி சபை, சித்திர சபை, தாமிர சபை, பொற்சபை ஆகியனவாகும். அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலமுடையான் கோவிலில் உள்ள நடராஜர் சன்னிதி `பளிங்கு சபை' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் நந்தி பகவான் கம்பீரத்துடன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்து விட்டு உள்ளே சென்றதும், தியான மண்டபம் என்னும் பளிங்கு சபையில் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். அவர்களை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவுடன் கோவில் சுற்றுச்சுவரில் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட `விதியை வெல்வது எப்படி?' என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து தேவாரப் பாடல்களும், பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினரால் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டிருக்கின்றன.

    பளிங்கு சபையின் மேற்கு புறத்தில் செம்பொற்ஜோதி நாதர் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தின் பாணமானது நர்மதை ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இயற்கையாக விபூதி ரேகைகள் அமைந்திருப்பது பக்தர்களை பரவசப்படுத்துகிறது.

    மேலும் இக்கோவிலில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அண்ணாமலையார், அறம் வளர்த்தநாயகி, சனீஸ்வரர், சூரியன், சந்திரன், வள்ளி தெய்வானை முருகன், கால பைரவர் உள்ளிட்ட சாமிகள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே கல்லில் நவக்கிரக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தாமரை பீடத்தில், பெரிய வட்ட வடிவிலான தேரில் சூரிய பகவான் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இந்த தேரை, பாகன் ஓட்ட, 7 குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரை சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் உள்ளனர். மற்ற கிரகங்கள் எட்டு திசையை நோக்கி, தவக்கோலத்தில் உள்ளனர். இவ்வாலயத்தில் `திருத்தொண்டர் திருக்கோவில்' என்ற பெயரில் 63 நாயன்மார்களுக்கு என்று தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

    ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந்தேதி அறுபத்து மூவர் விழா சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதிஉலா செல்வர். இவர்களுடன் 63 நாயன்மார்களும் வீதிஉலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். இது தவிர பிரதோஷம், ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார வழிபாடு-சங்கு அபிஷேகம், மாசி மாத சிவராத்திரி வழிபாடு போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு ௯ மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    • “இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் உனக்கு பாதை காட்டும் என்றது அசரீரி.
    • இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

    இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார்.

    ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது.

    இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது.

    சிவனைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையால் அந்த வணிகர் கதறி அழுதார்.

    அவரது வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்கு திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார்.

    அப்போது, "இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்கு பாதை காட்டும்.

    அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன்" என அசரீரி கேட்டது.

    அதன்படியே எறும்புகள் வழிகாட்ட, அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார்.

    பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, சிவனுக்கு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார்.

    திருச்செந்தூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம்.

    இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    பங்குனி உத்திரப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடும் தென் மாவட்ட ஆலயங்களுள், முதன்மையான தலம் இது ஆகும்.

    பங்குனி உத்திர நாளில், இங்கு திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளில், திருமணப் பிரார்த்தனை செய்பவர்கள், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி,

    அதில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிரகார வலம் வருவர்.

    இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

    அதேபோல் இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக் கொள்ள, வீட்டில் விரைவில் கெட்டிமேள சத்தம் கேட்குமாம்.

    திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்தபடி காட்சி தருவர்.

    இதைத் தரிசிக்க நம் வேதனைகள் பறந்தோடி விடும்.

    • கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர்.
    • கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன். சிவ பக்தர்.

    இவர் கடந்த 21-ந் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள 21 படிக்கட்டு அருகே சென்று கொண்டிருந்த போது கோவில் தீட்சிதர்களுக்கும் கார்வண்ணனுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர். இது குறித்து கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் சிதம்பரம் பஸ் நிலையம் மற்றும் நகர் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் சிவபுரி பகுதியை சேர்ந்த பக்தர் கார் வண்ணன் சாமி தரிசனம் செய்ய சென்றபோது தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவ பக்தரை தீட்சிதர்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    • கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன் (வயது 61). சிவ பக்தர்.

    இவர் தினமும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அது போல் நேற்று சாமி தரிசனம் செய்ய நடராஜர் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது அவர் சுவாமி முன் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக உள்ள கனக சபாபதி, அவரது மகன் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

    கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கனகசபாபதி அவரது மகள் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் சிவபக்தர் கார்வண்ணன் கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த கார்வண்ணன் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து அவர் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆனிதிருமஞ்சன விழாவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏராளமாக பக்தர்கள் குவிந்தனர்.
    • சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சிதம்பரம்:

    பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் நேற்று நடந்தது. அப்போது கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணா பிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது.


    சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா இன்று (புதன்கிழமை) நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது. 3 மணி முதல் 4 மணிக்குள் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்குப்பின்னும் சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆனி திருமஞ்சன தரிசன காட்சி அருள் பாலிப்பார்கள். அதனை தொடர்ந்து சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறுகிறது. நாளை (7-ந் தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. ஆனி திருமஞ்சனத்தை யொட்டி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் சிவனடியார்கள் தேவாரமும், திருவாசகமும் பாடியபடி இருந்தனர். இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

    ×