search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிதம்பரத்தில் தீர்க்க சுமங்கலி வரம்
    X

    சிதம்பரத்தில் தீர்க்க சுமங்கலி வரம்

    • இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.
    • இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

    மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கான மாதம்.

    இந்த மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியன வரும்.

    இதில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரைத் திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.

    அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் இந்தத் திருவிழா பிரம்மோற்சவமாக நடைபெறும்.

    ஆருத்ரா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.

    தமிழில் ஆதிரை, அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது.

    'ஆருத்ரா' என்ற சொல்லுக்கு 'ஈரமான', 'இளகிய', 'புத்தம் புதிய', 'பசுமையான' என்ற பல அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள்.

    இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.

    அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள்.

    அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள்.

    இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

    இந்நாளில் நாம் காணும் சிதம்பரம் நடராஜரின் அற்புதமான நடனத் திருக் காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.

    Next Story
    ×