என் மலர்

  நீங்கள் தேடியது "Written Examination"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஐ.ஜி ராதிகா நேரில் ஆய்வு செய்தார்.
  • கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர்

  கடலூர்:

  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று (25- ந்தேதி) தொடங்கியது. இந்த தேர்வு நாளையும் (26 -ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதினர் . முன்னதாக காலையில் தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுதும் மையத்திற்கு போலீசார் அனுமதித்தனர். இன்று காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி தொடங்கியதை யொட்டி போலீஸ் ஐ.ஜி ராதிகா தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தேர்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

  பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-  கடலூர் மாவட்டத்தில் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வு எழுதும் 20 பேருக்கு ஒரு போலீசாரும், 5 போலீசாருக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் தேர்வு எழுதும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இத் தேர்வுக்காக 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இன்று மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் . 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.
  • ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  ஈரோடு:

  தமிழகம் முழுவதும் காவல்து றையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது.

  ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.

  இதுபோக காவல்துறையில் பணி புரியும் 447 ஆண் போலீசார், 108 பெண் போலீசார் என 607 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது.

  ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் வந்திருந்தார்.

  இன்று காலை 4228 பேருக்கு பொதுத்தேர்வு நடந்தது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் காலை 8 மணி முதலே தேர்வர்கள் வர தொடங்கினர். தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

  இதை மீறி ஒரு சிலர் செல்போன் கொண்டு வந்திருந்தனர். அதை பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டிருந்த போலீசார் வாங்கி வைத்துக்கொண்டனர். தேர்வு முடிந்ததும் செல்போன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  தேர்வு எழுதுவோர் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு நகல் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேளாளர் கல்லூரியில் பெண்கள் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு நிறைவடைந்தது.

  இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:

  ஈரோடு மாவட்டத்தில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுக்காக 16 இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஒரு ஹாலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 300 தேர்வர்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற அடிப்படையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நாளை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்நிலையில் இன்று மதியம் பொதுத்தமிழ் தேர்வு தொடங்கியது. இதில் 4,428 பேர், காவல் துறையில் பணியாற்றும் 607 போலீசாரும் பொதுத்தமிழ் தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து நாளை காலை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழுப்புரம் மாவட்டத்தில் நாளை சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 7943 பேர் எழுதுகிறார்கள்.
  • சிறப்பான முறையிலும் நடத்திட வேண்டுமென தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்

  விழுப்புரம்:

  தமிழ்நாடு சீருடை பணியாளர் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நாளையும் நாளை (25-ந் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை பொது அறிவிற்கான தேர்வும், மதியம் 3 மணி முதல் 5.30 மணிவரை தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடைபெறவுள்ளது.

  அதனை தொடர்ந்து 26-ந் தேதி துறை ரீதியான காவலர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை சிறப்பான முறையிலும் நடத்திட வேண்டுமென தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தேர்வு தமிழகத்தில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.

  விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வு பணிகளில் குறித்து கடந்த ஒரு வாரமாக சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்வு மையங்களை சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தேர்வு மையங்களான ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து போலிஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  விழுப்புரம் மாவட்டத்தில் 7943பேரும் துறை சார்ந்தவர்கள் 276 பேரும் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். நாளை தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். நுழைவு சீட்டினை கொண்டு வரவேண்டும் மேலும் பால் பாயிண்ட் பெண், தேர்வு அட்டை எடுத்து வரவேண்டும். கைப்பையோ, துண்டு சீட்டோ, செல்போனோ எலக்ரானிக் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  ×