search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் நாளை சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 7943 பேர் எழுதுகிறார்கள்
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள எழுத்து தேர்வு மையத்தை போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் நாளை சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 7943 பேர் எழுதுகிறார்கள்

    • விழுப்புரம் மாவட்டத்தில் நாளை சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 7943 பேர் எழுதுகிறார்கள்.
    • சிறப்பான முறையிலும் நடத்திட வேண்டுமென தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்

    விழுப்புரம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நாளையும் நாளை (25-ந் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை பொது அறிவிற்கான தேர்வும், மதியம் 3 மணி முதல் 5.30 மணிவரை தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடைபெறவுள்ளது.

    அதனை தொடர்ந்து 26-ந் தேதி துறை ரீதியான காவலர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை சிறப்பான முறையிலும் நடத்திட வேண்டுமென தமிழக காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தேர்வு தமிழகத்தில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வு பணிகளில் குறித்து கடந்த ஒரு வாரமாக சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்வு மையங்களை சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தேர்வு மையங்களான ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து போலிஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் 7943பேரும் துறை சார்ந்தவர்கள் 276 பேரும் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். நாளை தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். நுழைவு சீட்டினை கொண்டு வரவேண்டும் மேலும் பால் பாயிண்ட் பெண், தேர்வு அட்டை எடுத்து வரவேண்டும். கைப்பையோ, துண்டு சீட்டோ, செல்போனோ எலக்ரானிக் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×