search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்துத் தேர்வு"

    • போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.
    • ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். இவர்கள் போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. இதையடுத்து இந்த தேர்வை எழுத ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இதற்கிடையே, காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 130 மையங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 41 ஆயி ரத்து 485 பேர் எழுதினார்கள்.

    சென்னையிலும் இந்த தேர்வை எழுதுவதற்காக பல இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து சென்னையிலும் ஏராளமானோர் தேர்வை எழுதினார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த தேர்வை எழுது பவர்கள் காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு வந்தனர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகு காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் நியமனம் செய்யப்பட்டு தோ்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையத்துக்குள் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள், செல்போன், டேப்லட், லேப்டாப், கால்கு லேட்டர் போன்ற எந்த பொருட்களையும் அனுமதிக்கவில்லை. தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டது.

    • கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வரும் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது.

    தருமபுரி,

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வரும் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தேர்வானது தருமபுரி வட்டம், நகராட்சி பூங்கா அருகில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், நல்லம்பள்ளி வட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்திலும், பாலக்கோடு வட்டம், ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், பென்னாகரம் வட்டம், நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி மையத்திலும், காரிமங்கலம் வட்டம், நாகனம்பட்டி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களிலும் நடைபெறவுள்ளது.

    இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

    குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை கொண்டு அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணைய பக்கதிற்கு சென்றும் பதிவு எண்ணினையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். அனுமதிச்சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • 2022-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
    • குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடை பிடித்து தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் 9 இடங்களில் நாளை காலை 10 மணி முதல் 12.40 மணி வரை 2022-ம் ஆண்டிற்கான

    2-ம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் 8766 ஆண் தேர்வர்களுக்கு அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, நல்லானூர் ஜெயம் தொழில்நுட்பக் கல்லூரி, தருமபுரி ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம், விஜய் ஆண்கள் மற்றும் விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பச்சமுத்து மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் நடக்கிறது.

    2696 பெண் தேர்வர்களுக்கு தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும்

    நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் நுழைவுச் சீட்டின் அடிப்படையில் காலை 8.30 மணி முதல் அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு சீருடை பணியாளர்

    தேர்வாணைய இணைய தளத்திலிருந்து இந்தத் தேர்வுகளில் கலந்துகொள்ள அழைப்பாணை வரப்பெற்ற தேர்வர்கள் அழைப்பு கடிதத்துடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடை பிடித்து தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.

    தேர்வர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட பொது அடையாள அட்டை, பேனா மற்றும் நுழைவுச் சீட்டு தவிர செல்போன்கள்,மணிபர்ஸ் , புளூடூத், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தாங்கள் எடுத்து வரும் பொருளுக்கு தாங்கள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்தினுள் ஆஜராக வேண்டும். தாமதமாக வரும் நபர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு தருமபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    ×