search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2022-ம் ஆண்டிற்கான  2-ம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு  -நாளை நடைபெறுகிறது
    X

    2022-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு -நாளை நடைபெறுகிறது

    • 2022-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
    • குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடை பிடித்து தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் 9 இடங்களில் நாளை காலை 10 மணி முதல் 12.40 மணி வரை 2022-ம் ஆண்டிற்கான

    2-ம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் 8766 ஆண் தேர்வர்களுக்கு அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, நல்லானூர் ஜெயம் தொழில்நுட்பக் கல்லூரி, தருமபுரி ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம், விஜய் ஆண்கள் மற்றும் விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பச்சமுத்து மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் நடக்கிறது.

    2696 பெண் தேர்வர்களுக்கு தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும்

    நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் நுழைவுச் சீட்டின் அடிப்படையில் காலை 8.30 மணி முதல் அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு சீருடை பணியாளர்

    தேர்வாணைய இணைய தளத்திலிருந்து இந்தத் தேர்வுகளில் கலந்துகொள்ள அழைப்பாணை வரப்பெற்ற தேர்வர்கள் அழைப்பு கடிதத்துடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடை பிடித்து தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.

    தேர்வர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட பொது அடையாள அட்டை, பேனா மற்றும் நுழைவுச் சீட்டு தவிர செல்போன்கள்,மணிபர்ஸ் , புளூடூத், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தாங்கள் எடுத்து வரும் பொருளுக்கு தாங்கள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்தினுள் ஆஜராக வேண்டும். தாமதமாக வரும் நபர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு தருமபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×