search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NCC Certificate"

    • நெல்லை சந்திப்பு ம.தி.தா. மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவ- மாணவிகளுக்கான என்.சி.சி. ‘ஏ’ சான்றிதழுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
    • சுபேதார் கணேசன் மேற்பார்வையில் ம.தி.தா பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இந்த தேர்வு எழுதினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ம.தி.தா. மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. மாணவ- மாணவிகளுக்கான என்.சி.சி. 'ஏ' சான்றிதழுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. பள்ளிகள் அளவில் நடைபெற்ற இந்த தேர்வானது 9-வது சிக்னல் பட்டாலியன் சார்பில் நடத்தப்பட்டது.

    கமெண்டன்ட் அதிகாரி சின்ஹா உத்தரவின் பேரில், சுபேதார் கணேசன் மேற்பார்வையில் ம.தி.தா பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இந்த தேர்வு எழுதினர். பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் மேற்பார்வையில், பள்ளியின் என்.சி.சி. அதிகாரி செல்லத்துரை தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×