search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trekking"

    • சாஸ்திரா நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
    • சாஸ்திரா நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே சிக்கிக்கொண்டனர்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது. இங்கு மலையேற்றத்தை விரும்பும் டிரக்கர்கள் பயணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 டிரக்கர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று  சாஸ்திரா தல் நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் செல்வதற்கு வழி இல்லாததால் மீட்டுப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

    சிக்கிய 22 பேரில் 18 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மற்ற மூவர் உள்ளூர் வழிகாட்டிகள் ஆவர். இந்நிலையில் காட்டு இலாகா அதிகாரிகளுடன் நேற்று முதல் மாநில மீட்புப்படையினர் நடத்திவந்த தேடுதலில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

     

    • விருதுநகரில் இன்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    விருதுநகர்

    தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சியாக மாநில தலைவர் அண்ணா–மலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவ–ரத்தில் நடைபயணம் தொடங்கி–னார். நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபய–ணத்தை ஆரம்பித்த அவர் இன்று காலை விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் பாதயாத்திரை சென்றார்.

    அப்போது வழிநெடுகி–லும் திரண்டு நின்ற பொது–மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பா.ஜ.க. தொண்டர்கள் அவர் மீது மலர்களை தூவினர். அப் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராஜ–பாண்டியும் அண்ணாம–லையை வரவேற்றார்.

    தொடர்ந்து அவர் ராம–மூர்த்தி ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயிலுகந்தம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் தெரு, நகராட்சி சாலை, இன்னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த பொது–மக்கள் மத்தியில் பேசினார். முன்னதாக அவர் பாண்டி–யன் நகர் பகுதியில் அமைந் துள்ள முத்துராம–லிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து இன்று மாலை அண்ணாமலை சிவகாசிக்கு செல்கிறார். அங்குள்ள ஒரு தனியார் அரங்கத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலதிபர் களை சந்தித்து கலந்துரையா–டுகிறார்.

    • மதுரையில் அண்ணாமலை 4 நாட்கள் நடைபயணம் செல்ல இருக்கிறார்.
    • அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    மதுரை

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அவர் நடைபயணம் செய்து வருகிறார்.

    ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர். அதே போன்று குழந்தைகளுடன் செல்பி எடுத்தும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றும் வந்தார்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை மறுதினம் (5-ந்தேதி) முதல் 4 நாட்கள் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபயணம் செல்ல உள்ளார். இந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மதுரை பா.ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

    மதுரை ரிசர்வ் லைன் பகுதி ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை பழைய நத்தம் ரோடு, போலீஸ் குடியிருப்பு, சொக்கிகுளம், கிருஷ்ணா புரம் காலனி, மாவட்ட பா,ஜனதா கட்சி அலுவல கம், உழவர் சந்தை, பி.பி. குளம் சந்திப்பு, லேடி டோக் கல்லூரி, செல்லூர் 50 அடி ரோடு வந்தடைகிறார்.

    5-ந் தேதி மாலை 4 மணிக்கு பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலையில் இருந்து நேதாஜி ரோடு, கட்ராபாளையம், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி சிலை, நகைக்கடை பஜார், கிழக்கு மாசி வீதி, கீழவாசல், முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, கீழச்சந்தை பேட்டை, குருவிகாரன்சாலை பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

    7-ந் தேதி மாலை 4 மணிக்கு ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஏ.ஏ.ரோடு, தமிழ்நாடு வேதாகம கல்லூரி, காளவாசல், சம்மட்டிபுரம், சொக்கலிங்க நகர் வழியாக பழங்காநத்தம் வரை நடைபயணம் செல்கிறார். பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    8-ந் தேதி காலை 9 மணிக்கு திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நுழைவாயில், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தம், 16 கால் மண்டபம், மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபயணம் செல்கிறார்.

    இந்த நிலையில் அண்ணாமலை நடைபயணம் செல்லும் பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • மரண மண்டலம் என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார்.
    • எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் துணையுடன் முகாம் நோக்கி வந்தார். ஆனால் கடுமையான காற்று வீசியதால் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களால் பொதுவாக 'மரண மண்டலம்' என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார். அவரது உடல் இன்னும் மலையிலேயே உள்ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கென்னிசனின் மரணம் குறித்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மிகவும் தைரியமான கென்னிசன் சிகரத்தை அடைய வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு திரும்பவில்லை, என அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ஹிமாலயன் டைம்ஸ் செய்திக்கு வழிகாட்டி ஒருவர் அளித்த பேட்டியில், 'சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் போது கென்னிசன் அசாதாரணமாக இருப்பதை கவனித்தோம். அவருடன் இருந்த இரண்டு ஷெர்பா வழிகாட்டிகள், கடல் மட்டத்தில் இருந்து 8,400மீ உயரத்தில் உள்ள பால்கனி பகுதிக்கு இறங்க உதவினார்கள்' என்றார்.

    எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது. நேபாள சுற்றுலாத் துறையின் தகவலின்படி, இந்த சீசனில் இதுவரை 450 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

    • விக்கிரவாண்டியில் ஏரி-குளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி மாணவர்களின் மாரத்தான் ஓட்டத்தையும், மாணவிகளின் சைக்கிள் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டியில் ஏரி, குளம் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளின் மாரத்தான் மற்றும் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி மாணவர்களின் மாரத்தான் ஓட்டத்தையும், மாணவிகளின் சைக்கிள் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை , துணை தலைவர் பாலாஜி, கவுன்சிலர் சுதாபாக்கியராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூராட்சி உதவியாளர் தீனா,பள்ளி மாணவ-மாணவிகள்,பணியாளர்கள் பங்கேற்றனர். விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சேர்மன் அப்துல் சலாம் துவக்கி வைத்தார். அருகில் செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 100 மாணவர்கள், தேசிய படை அதிகாரி வடிவேல் தலைமையில் மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்த பயிற்சி குறித்து மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை 9-வது பேரணி ஹவில்தார் சஞ்சீவிகுமார் விளக்கம் அளித்தார்.

    பின்னர் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையை மாணவர்கள் கடந்து சென்று, அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் காடுகளின் அவசியம் மற்றும் அவற்றை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் மரம் நடுதல் அவசியம் குறித்தும், தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் விளக்கினார்.

    ×