search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "talks"

    • கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
    • மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும்,

    பொள்ளாச்சி,

    வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். சப்-கலெக்டர் பிரியங்கா, வேளாண் வணிகத்துறை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட தொழில்மைய பொது ேமலாளர் திருமுருகன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன், சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    சிறுதானிய பொருள்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. கோவையில் சிறுதானியங்களால் ஆன பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் போது வர்த்தக ரீதியான பயன்கள் கிடைக்கும்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்று தனித்தன்மையினை உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகள் முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    சில விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிலத்தில் ஒரே விதமான பயிரினை விளைவித்து வருகின்றனர். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், போதுமான விளைச்சலும் இருக்காது.

    மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும், அதிகமான உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதை விமர்சித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்” என பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். #IndPakTalks #PMModi #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது.

    மேற்கண்ட இரு சம்பவத்தை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், “இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்” என ட்வீட் செய்துள்ளார்.



    இதில், “பெரிய அலுவலங்களை ஆக்கிரமித்து இருக்கும் சிறிய மனிதர்கள்” என்ற வார்த்தை பதம் மோடியை மறைமுகமாக தாக்குவதாக உள்ளது. 
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிதித்தால் வர்த்தக பலன்களை பெற முடியாது என அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. #China #Warns
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-

    விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.

    சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.

    இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

    முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார்.  #China #Warns #Tamilnews
    ×