search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுதானிய பொருட்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது- கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேச்சு
    X

    சிறுதானிய பொருட்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது- கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேச்சு

    • கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
    • மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும்,

    பொள்ளாச்சி,

    வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். சப்-கலெக்டர் பிரியங்கா, வேளாண் வணிகத்துறை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட தொழில்மைய பொது ேமலாளர் திருமுருகன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன், சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    சிறுதானிய பொருள்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. கோவையில் சிறுதானியங்களால் ஆன பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் போது வர்த்தக ரீதியான பயன்கள் கிடைக்கும்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்று தனித்தன்மையினை உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகள் முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    சில விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிலத்தில் ஒரே விதமான பயிரினை விளைவித்து வருகின்றனர். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், போதுமான விளைச்சலும் இருக்காது.

    மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும், அதிகமான உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×