search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweden"

    • பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது ஸ்வீடன்
    • "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் கூறினார்

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும்.

    நேட்டோ உறுப்பினர் நாட்டை மற்றொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உறுப்பினர் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும். இதில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

    பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் நடந்த ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், "தனக்கு எதிரான நாடு" எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது. மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, "தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது" என குற்றம் சாட்டி ஸ்வீடனை இணைக்க சம்மதிக்கவில்லை.

    கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    சில வாரங்களுக்கு முன், ஹங்கேரியும் தனது நிலையை மாற்றி கொண்டது.

    நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு சுவீடன் நாட்டிற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில், நேற்று, அதிகாரபூர்வமாக ஸ்வீடனின் இணைப்பு அறிவிக்கப்பட்டது.


    நேட்டோ அமைப்பில் இணையும் 32-வது உறுப்பினர் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்வீடனின் இணைப்பு குறித்து, "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறினார்.

    இது குறித்து பேசிய ஸ்வீடன் அதிபர் உல்ஃப் க்ரிஸ்டர்சன் (Ulf Kristersson), அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.


    • நேட்டோ உறுப்பினரை எந்த நாடு தாக்கினாலும் அனைத்து நாடுகளும் ஒன்றாக எதிர்க்கும்
    • நீண்ட காலமாக ஸ்வீடன் எந்த போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள் ஒன்றிணைந்து அமைத்த அணி நேட்டோ (North Atlantic Treaty Organization).

    நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து அந்த நாட்டிற்கு ஆதரவாக நிற்கும்.

    நேட்டோ அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும்.

    சுமார் 200 வருடங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்த பிறகு ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது.

    இந்நிலையில், ஹங்கேரி தனது நிலையை மாற்றி கொண்டது.

    ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), "இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ள நாடுகள்" எனக் கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார்.


    ஹங்கேரியின் ஒப்புதல் குறித்த தகவல் வந்த நிலையில் நேற்று ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டர்ஸன் (Ulf Kristersson) மகிழ்ச்சி தெரிவித்தார்.

    ஹங்கேரியின் இந்த முக்கிய முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், "நேட்டோ, முன்னை காட்டிலும் வலுவான மற்றும் பாதுகாப்பான அமைப்பாகவும் மாறி விட்டது" என (Jens Stoltenberg) தெரிவித்தார்.

    மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி ஸ்வீடன் இணைய சம்மதிக்கவில்லை.

    ஆனால், கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    • ஈரானை சேர்ந்த 51 வயதான மொகமதி ஒரு பவுதிக பட்டதாரி
    • மொகமதிக்கு பலமுறை சிறை தண்டனை விதிக்கப்பட்டது

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியானவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், வேதியியல் மற்றும் இலக்கிய துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரானிய பெண்கள் உரிமை பிரச்சாரகரும், மனித உரிமை போராளியுமான 51 வயதான நர்கெஸ் சஃபி மொகமதி (Narges Safie Mohammadi) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பவுதிக பட்டதாரியான மொகமதி, ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த போராட்டங்களுக்காகவும் கவுரவிக்கப்படுகிறார் என நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் பரிசு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மொகமதி பல முறை சிறைவாசம், கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட நீண்ட போராட்ட வரலாறு கொண்டவர்.

    5 முறை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 13 முறை ஈரான் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட மொகமதி, தண்டனையாக 154 முறை கசையடிகளும் வாங்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று ஒஸ்லோ நகர மண்டபத்தில் ஒரு விழாவில் மொகமதிக்கு இப்பரிசு வழங்கப்படும்.

    • தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
    • சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

    "தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

    "மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

    1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

    • 5 துறைகளிலும் சாதனை புரிந்தவர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகிறது
    • மூவரும் குவான்டம் டாட்ஸ் துறையில் வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவ மற்றும் பவுதிக துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவியலுக்கான ராயல் சுவீடிஷ் அகாடமி இது குறித்து அறிவித்திருப்பதாவது:

    நேனோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான "குவான்டம் டாட்ஸ்" துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு நுகர்வோர் மின்னணு துறையிலும் மருத்துவ துறையிலும் பல்வேறு புரட்சிகள் ஏற்பட வழி வகுத்த அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைகழகத்தை சேர்ந்த அமெரிக்கரான மவுங்கி பவெண்டி (Moungi Bawendi), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த லூயி ப்ரு (Louis Brus) மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் (Alexey Ekimov) ஆகிய மூவருக்கும் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அகாடமி அறிவித்திருக்கிறது.

    இந்த மூவரின் பெயர்களை வேதியியல் துறையில் நோபல் பரிசை பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் ஜோஹன் அக்விஸ்ட் (Johan Aqvist) உறுதிப்படுத்தினார்.

    வழக்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பரிசுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இம்முறை இன்று காலை சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மூவரின் பெயர்கள் முன்னரே கசிந்தது சர்ச்சையை உருவாக்கியது.

    • தகுதியுடையவர்களை இந்நிறுவனத்தின் 50 பேராசிரியர்களை கொண்ட குழு தேர்வு செய்யும்
    • விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

    இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

    இந்த வருட மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கட்டாலின் கரிக்கோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வைஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு வழங்கப்படுவதாக இந்த குழு அறிவித்துள்ளது.

    இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:

    மனிதர்களின் மரபணு கூறுகள், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினை கண்டறிய இந்த இருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் பெரிதும் உதவியது. அதன் மூலம் உலகையே அச்சுறுத்தி வந்த கோவிட்-19 பெருந்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை பெருமளவு தயாரிப்பது எளிதாக அமைந்தது.

    இவ்வாறு நோபல் அசெம்பிளி அறிவித்துள்ளது.

    விருது பெறும் இருவருமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிர்வேதியியல் துறையை சேர்ந்த 68 வயதான ஹங்கேரிய அமெரிக்க விஞ்ஞானியான கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

    அமெரிக்க வேதியியல் விஞ்ஞானியான 64 வயதான ட்ரூ வைஸ்மேன், மரபணு ஆராய்ச்சிக்கான பென் இன்ஸ்டிட்யூட் (Penn Institute) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    மருத்துவ துறைக்கு இவ்விருதுகள் வழங்கப்பட தொடங்கிய 1901 வருடத்திலிருந்து இதுவரை 113 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும், அவற்றில் 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • துருக்கி அதிபர், சுவீடன் பிரதமர், நேட்டோ பொது செயலாளர் சந்திப்பிற்குப்பின் எர்டோகன் ஆதரவு
    • எர்டோகன் ஆதரவு அளித்தாலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும்

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.

    இருந்தாலும் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோ படையில் இணைவதற்கான மற்ற நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகிறது. கடந்த வாரம் துருக்கி சென்ற அவர், அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் ஆதரவு அளித்தார்.

    இதற்கிடையே சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், துருக்கி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தது. குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால், துருக்கி தடையை ஏற்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் நேற்று துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இருந்தாலும், துருக்கி நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும். அதற்கான அழுத்தத்தை கொடுப்பதாக எர்டோகன் உறுதி அளித்துள்ளார்.

    துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவை துருக்கி எடுத்துள்ளது.

    துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும், ''சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும். இது பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும்'' என்றார்.

    சுவீடன் 32-வது நாடாக நேட்டோவில் இணைகிறது.

    • பால்டிக் கடல் எல்லையில் ரஷியாவின் நடவடிக்கையை தடுக்க சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது
    • சுவீடன் முழுநேர உறுப்பினராக துருக்கி தடையாக உள்ளது

    நேட்டோ அமைப்பில் முழுநேர உறுப்பினராவதற்காக நீண்ட காலமாக சுவீடன் முயற்சித்து வருகிறது. இருப்பினும், முழு நேர உறுப்பினராகும் முன்னதாகவே நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதை வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

    நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன், ராணுவ மந்திரி பால் ஜான்சனுடன் இணைந்து தெரிவித்திருக்கிறார்.

    சுவீடன் மண்ணில் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ தளவாடங்களை இறக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கவும் இந்த கூட்டு முயற்சியில் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த செய்தி ரஷியாவுக்கு விடப்பட்ட ஒரு சமிக்ஞை செய்தியாகவும், சுவீடனின் தற்பாதுகாப்புக்கும் உதவும் ஒரு நிகழ்வாகவும் இந்த செய்தி பார்க்கப்படுகிறது.

    சுவீடனில் நேட்டோவின் இருப்பு அனுமதிக்கப்படுவதால், பால்டிக் கடற்பகுதியில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை தடுக்கக்கூடிய வகையிலும் இது அமையக்கூடும் எனபதால், சுவீடனின் தற்பாதுகாப்புக்கான ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.

    சுவீடன் நாட்டின் நேட்டோ உறுப்பினருக்கான கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. நேட்டோவில் 2022-ம் வருடத்திலிருந்து சுவீடன் இணைய அழைப்பு இருந்தும் அதை உறுதி செய்ய வேண்டிய 31 உறுப்பினர் நாடுகளில், துருக்கி மற்றும் ஹங்கேரியும் சம்மதிக்கவில்லை.

    நேட்டோவின் சட்டப்பிரிவு 5-ன்படி ஒரு உறுப்பினர் நாடு மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்டதாக கருதப்படும். ஆனால், இந்த பாதுகாப்பு அம்சம் முழு உறுப்பினர்கள் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    கடந்த மே மாதம், துருக்கி நாட்டின் அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் சுவீடனின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து இதுவரை அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் சுவீடன் நிறைவேற்றி விட்டதால் விரைந்து முடிவெடுக்கும்படி துருக்கியை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கேட்டுக் கொண்டுள்ளது. இதில் துருக்கி நாட்டால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குர்திஷ் இன போராட்டக்காரர்களின் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது சுவீடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அடங்கும்.

    ஆனால், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் குடியேறியுள்ள ஒரு சில துருக்கி நாட்டு ஆர்வலர்களையும், சுவீடன் வெளியேற்ற வேண்டும் என துருக்கி நிர்பந்திக்கிறது. இதற்கு சம்மதிக்க மறுக்கும் சுவீடன், தங்கள் நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், இந்த விஷயத்தில் தலையிட முடியாதெனவும் அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவீடன் தமது நாட்டின் ராணுவத்திற்கான செலவினங்களையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த செய்தியைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தனர்.
    • உடலுறவு போட்டி தொடர்பான கோரிக்கையானது ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன. இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.

    அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    'ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    • 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்படும்
    • 70 சதவீதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிக்கும் வகையில் ஏற்பாடு

    உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விசயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது சுவீடன். அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் என பெயரிட்டுள்ள சுவீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.

    இந்தப் போட்டி வருகிற 8-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளது. பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது.

    இந்த போட்டியை நடத்த சுவீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது. 70 சதவீதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள். 30 சதவீதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள். இந்த போட்டியில் கலந்து ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    சுவீடனின் அந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    • இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.

    இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். #Sweeden #ParliamentElection
    ஸ்டாக்ஹோம்:

    சுவீடன் நாட்டில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, கிரீன் கட்சி கூட்டணியின் சிறுபான்மை ஆட்சி நடக்கிறது.

    அங்கு செப்டம்பர் 10-ந் தேதி (நேற்று) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி, சுவீடன் ஜனநாயக கட்சி, மிதவாத கட்சி இடையே முக்கிய போட்டி உள்ளது. அகதிகள் குடியேற்றப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக பிரசாரத்தில் இடம் பிடித்தது.



    சுவீடன் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் ஆபத்தானது என பிரதமர் ஸ்டீபன் லோப்வென் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மறுத்து சுவீடன் ஜனநாயக கட்சி தலைவர் ஜிம்மி ஆகெஸ்ஸான் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு பின்னர் விறுவிறுப்பு அடைந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

    பிரதமர் ஸ்டீபன் லோப்வென் மனைவி உல்லாவுடன் வந்து ஸ்டாக்ஹோமில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.

    இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆளும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி, பிற கட்சிகளை விட கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்க வைக்கிற வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.  #Sweeden #ParliamentElection 
    ×