search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri lanka government"

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களை தொடர்ந்து அன்றிலிருந்து சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது. #Colomboblast #SocialMedia
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வரிசையில் தெம்மட்டகொடா குடியிருப்பு பகுதியில் அன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் 8-வதாக நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இதைதொடர்ந்து, அன்று மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்தது. பின்னர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    மேலும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் 21ம் தேதி, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.

    இந்நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு இன்றுடன் நீக்கியது.  இதேபோல் தாக்குதல்களை தொடர்ந்து ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 28 அன்று நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Colomboblast  #SocialMedia 

    ஹம்பன்தோடா துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்துள்ளார். #RanilWickramasinghe #HambantotaPort
    கொழும்பு :

    இலங்கையில் உள்ள ஹம்பன்தோடா துறைமுக பகுதியில் மிகப்பெரிய தொழில் பூங்காவை சீனா அமைக்கிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாகவும், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய 3-வது ஆசிய ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 2 நாள் மாநாட்டில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்லுறவு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகம் சீன ராணுவ தளமாக மாறிவிடும் என்று சிலர் நினைப்பது தவறானது என்றும், அங்கு இலங்கை கடற்படை முகாம்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். #RanilWickramasinghe #HambantotaPort
    இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை என்று புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசினார். #vaiko #SriLanka #rajapaksa

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. ஒருவேளை ராஜபக்சே வெற்றி பெற்றால் இலங்கை அரசின் சட்டத்தை திருத்தி அதிபர் பதவியில் இருந்து சிறிசேனாவை கழற்றி விட்டு அவர் அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழர்களின் பண் பாட்டு தலங்கள் அழிக்கப்படும் அபாயமும் உள்ளது


    இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை தமிழ் மாகாண சபை தலைவர் விக்னேஸ்வரன் கொண்டு வந்த தீர்மானம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் நலனுக்காக செயல்பட வில்லை. அவர்கள் முழுவதுமாக சிங்களர் சார்ந்த வி‌ஷயங்களில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் .

    இலங்கை அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஒரு வேளை வழக்கு தொடரப்பட்டால் இலங்கை அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிப்பு வரலாம். ஏனென்றால் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு நான்கு ஆண்டு காலம் முடிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி தான் தற்போது நாடாளு மன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக மீனவர் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டிப்பதற்கும் அந்த சட்டத்தை விளக்குவதற்கும் நானே நேரில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இருந்து தமிழக மீனவர்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.  #vaiko #SriLanka #rajapaksa

    இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    ராமசாமி படையாச்சியாரின் பிறந்த தினத்தை (செப்டம்பர் 16-ந் தேதி) ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வன்னியர் சத்திரியர்கள் கூட்டு இயக்க தலைவர் சி.ஆர்.ராஜன், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், வன்னியர் குல சத்திரிய மகா சங்க மாநில தலைவர் வி.பலராமன், வன்னியர் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டெல்டா நாராயணசாமி, செயலாளர் ராஜேந்திரன், அகில பாரத சத்திரிய மகாசபை தலைவர் ஜி.சந்தானம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக மதுரையை சேர்ந்த டாக்டர்கள் எஸ்.ஏ.பாலமுருகன், பி.கணேஷ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

    இதையடுத்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் சங்க தலைவர் என்.ஜெ.போஸ் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-


    ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு செல்ல ஏதுவாக ராமேசுவரத்தை அடுத்த மூக்கையூரிலும், பாம்பன் குந்துகாலிலும் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக பணி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தோம். டீசல் விலை உயர்வு மற்றும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீன்பிடி தொழில் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அரசு 2014-ம் ஆண்டு முதல் சிறைபிடித்த 184 படகுகளை முறையாக பராமரிக்காததால் அவை முழுமையாக சேதமடைந்து விட்டன. எனவே சேதமடைந்த படகு உரிமையாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த வாரத்தில் 16 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை அரசு சிறைபிடித்தது. இந்த மீனவர்களை மீட்பதுடன், படகுகள் சேதமடைவதற்கு முன்பாக அவற்றை மத்திய அரசு மூலம் உடனடியாக மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகனை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 
    ×