search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது
    X

    இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களை தொடர்ந்து அன்றிலிருந்து சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது. #Colomboblast #SocialMedia
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வரிசையில் தெம்மட்டகொடா குடியிருப்பு பகுதியில் அன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் 8-வதாக நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இதைதொடர்ந்து, அன்று மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்தது. பின்னர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    மேலும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் 21ம் தேதி, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.

    இந்நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு இன்றுடன் நீக்கியது.  இதேபோல் தாக்குதல்களை தொடர்ந்து ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 28 அன்று நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Colomboblast  #SocialMedia 

    Next Story
    ×