search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "sirisena"

  இந்திய பிரதமர் மோடி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உறுதி செய்துள்ளார்.
  புதுடெல்லி:

  இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணத்தில் முதல் நாடாக மாலத்தீவு செல்கிறார். ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு செல்லும் மோடி, அங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளார். இத்தகவலை இலங்கை அதிபர் சிறிசேனா இன்று உறுதி செய்துள்ளார். 

  டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அவரை மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர்.

  மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறிசேனா, மோடியின் இலங்கை பயணத்தை உறுதி செய்தார்.

  இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவரது வருகையை பெருமையாக கருதுவதாகவும் சிறிசேனா கூறினார். 

  ‘மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் தலை தூக்கி உள்ளது. சில நாடுகளில் உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்’ என்றும் சிறிசேனா கூறினார்.
  பயங்கரவாத தாக்குதல் குறித்து அதிபருக்கு முன்கூட்டியே தெரியும் என்று இலங்கை உளவுத்துறை தலைவர் கூறியதை சிறிசேனா மறுத்துள்ளார்.
  கொழும்பு:

  இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். அதில், 253 பேர் பலியானார்கள்.

  இந்த தாக்குதல் குறித்த சதித்திட்டத்தை இலங்கை அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் முன்கூட்டியே தெரிவித்தன. இருப்பினும், இலங்கை அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த உளவுத்துறை தகவல் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரியாது என்று அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தெரிவித்தனர்.

  இந்த தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை சிறிசேனா கட்சியும், ராஜபக்சே கட்சியும் புறக்கணித்து வருகின்றன.

  இந்த குழு முன்பு, இலங்கை உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் நேற்று முன்தினம் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

  கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி, உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில் அதிபர் சிறிசேனாவும் பங்கேற்றார். பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவல் பற்றி அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.  அந்த தகவலை கூட்டத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், அந்த தகவல் குறித்து போலீஸ் ஐ.ஜி.க்கு கடிதம் எழுதினேன். ‘முக்கியமான தகவல்‘ என்பதை குறிப்பதற்கான வாசகத்தையும் அதில் எழுதினேன்.

  இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

  ஆனால், உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் கூறியதை அதிபர் சிறிசேனா நேற்று நிராகரித்தார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் 2 மணி நேரமாக நடந்தது. ஆனால், பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவலை எந்த அதிகாரியும் தெரிவிக்கவில்லை. எனவே, தாக்குதல் குறித்து எனக்கு முன்கூட்டியே தெரியாது” என்று கூறியுள்ளார்.
  250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
  கொழும்பு:

  இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

  இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.  இச்சம்பவம் தொடர்பாக 89 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

  இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த மாதம் 22-ம் தேதி உத்தரவிட்டார்.

  இந்த அவசரநிலை உத்தரவைமேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும் அரசு அறிவிக்கையில் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டுள்ளார்.
  இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்து விட்டதாக சிறிசேனா தெரிவித்து உள்ளார். #SriLanka #sirisena
  கொழும்பு:

  இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இஸ்லாமிய மதகுரு ஜக்ரன் ஹசீம் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், ஒட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மதகுரு ஜக்ரன் ஹசீம் உயிரிழந்து விட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்து உள்ளார். 

  தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜக்ரன் ஹசீம் செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.  #SriLanka #sirisena
  இலங்கையில் நாளை காலை 10 மணிக்கு அதிபர் சிறிசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SrilankanBlasts #Sirisena
  கொழும்பு:

  இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 8.45 மணியளவில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் 2 தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

  இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

  இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார்.  அதனை தொடர்ந்து  இலங்கையில் மாலை 4 மணிக்கு அதிபர் சிறிசேன தலைமையில் சர்வ சமய கூட்டம் நடைபெறவுள்ளது. 

  இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களால் நிலவும் பதற்றத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SrilankanBlasts #Sirisena
  திருப்பதியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். #Tirupati #Sirisena
  திருமலை:

  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய நேற்று விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருப்பதி உதவி கலெக்டர் மகேஷ்குமார் மற்றும் எஸ்.பி. அன்புராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

  பிற்பகல் 2 மணிக்கு திருமலைக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் ஓய்வெடுத்தார். பின்னர் ஸ்ரீவாரி பாதத்தை சாமி தரிசனம் செய்தார்.

  இன்று அதிகாலை 3 மணிக்கு குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

  இதையடுத்து 6.30 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினர். #Tirupati #Sirisena
  இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் நடவடிக்கைக்கு அதிபர் சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #sirisena #RanilWickramasinghe
  கொழும்பு :

  இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி 2015-ம் ஆண்டு சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

  ஆனால் ராஜபக்சேவால் 2 முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தேவையான பெரும்பான்மை (113 உறுப்பினர்கள்) இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது.

  சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந் தேதி புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டதையும் சுப்ரீம் கோர்ட்டு தடுத்துவிட்டது.

  இந்நிலையில் விக்ரமசிங்கே இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க திட்டமிட்டார். இதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஒரே ஒரு உறுப்பினருடனும், சிறிசேனாவின் சுதந்திரா கட்சியை சேர்ந்த சிலருடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். இதன்மூலம் மட்டுமே 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும்.

  இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அதிபர் சிறிசேனாவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக விக்ரமசிங்கேவின் கட்சி மீண்டும் அவரை ஆதரிக்காது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.

  ராஜபக்சே 2 முறை அதிபர் பதவி வகித்துள்ளதால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது புதிய கட்சியான இலங்கை மக்கள் கட்சியும் சிறிசேனாவை ஆதரிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே இந்த ஆண்டு இலங்கை அரசியலில் மிகவும் சிக்கலான ஆண்டாகவே இருக்கும் என கருதப்படுகிறது.  இதற்கிடையே பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கோரிக்கைக்கு அதிபர் சிறிசேனா இலங்கை சுதந்திர தின விழா உரையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது மந்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மக்கள் பணத்தில் மந்திரிகளுக்கு சலுகைகள் வழங்குவதும் மட்டுமே. இது முறையற்றது. மந்திரிகள் 25 பேருக்குள் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.

  தேர்தல் நடைபெற உள்ள இந்த ஆண்டில் சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச பிற்போக்கு சக்திகள் பல்வேறு உருவங்களில் இலங்கைக்குள் வந்துள்ளன.

  இலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் தமிழர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்பதே தேசிய அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கடந்த வாரம் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக சிறிசேனா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. #sirisena #RanilWickramasinghe
  இலங்கை மந்திரிகள் நியமனத்தில் அதிபர் சிறிசேனாவுடன் கருத்துவேறுபாடு உள்ளது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒப்புக்கொண்டார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
  கொழும்பு:

  இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே கடந்த 16-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் எதிர்பாராத தாமதமாக 3 நாட்கள் கழித்து 30 பேர் கொண்ட மந்திரிகள் பட்டியலை கடந்த வியாழக்கிழமை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

  அதில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பரிந்துரைத்த சிலரது பெயர்கள் ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு படைகள் மற்றும் போலீஸ் இலாகாவை அதிபர் சிறிசேனாவே வைத்துக்கொண்டார். இது அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே அதிகார மோதல் இருப்பதை காட்டியது.  இதுபற்றி விக்ரமசிங்கே கூறியதாவது:-

  சில ஊடகங்கள் போலியான மந்திரிகள் பட்டியலை வெளியிட்டதுடன், அதனை அதிபர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் செய்தி வெளியிட்டன. இலங்கை சுதந்திரா கட்சி உறுப்பினர் விஜித் விஜயமுனி சோய்சாவை நான் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அவர் பெயர் மந்திரிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் சில ஊடகங்கள் வெளியிட்டன.

  இதன்மூலம் மக்களை திசைதிருப்ப அவை முயற்சித்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மந்திரிகள் நியமனத்தில் அதிபருடன் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் மந்திரிசபை நியமனம் எப்படி நடந்தது என்பது பற்றி பேசுவேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
  இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்றுக்கொண்டது. அதிபர் சிறிசேனா மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் போலீஸ் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். #SriLankaCabinet #Sirisena
  கொழும்பு:

  இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டதுடன், அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் முட்டுக்கட்டை போட்டது.

  இதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் அவர் கடந்த 16-ந்தேதி பிரதமராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக 30 நபர் கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றுக் கொண்டது. அதிபரின் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஒவ்வொருவருக்கும் அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  புதிய மந்திரி சபையில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் முக்கிய எம்.பி.க்களான மங்கள சமரவீராவுக்கு நிதித்துறையும், சகல ரத்னாயகவுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

  இலங்கையில் அதிகாரமிக்க துறையாக கருதப்படும் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் துறையை ரணில் பரிந்துரைத்தவர்களுக்கு வழங்காத அதிபர் சிறிசேனா, மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் அந்த துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். இதன் மூலம் அதிபர், பிரதமர் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. #SriLankaCabinet #Sirisena
  பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா கூறி உள்ளார். #Sirisena #RanilWickramasinghe
  கொழும்பு:

  இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

  இதை சமாளிக்க பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சேவும், அவரது மந்திரி சபையும் செயல்பட தடை விதித்தது. நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியில் இருந்து விலகினார்.

  இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

  எக்காரணம் கொண்டும் ரணில் விக்ரமசிங்கேயை பிரதமராக நியமிக்க முடியாது என்று ஏற்கெனவே கூறியிருந்த சிறிசேனா அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கட்சித்தலைவர்கள் முன்னிலையில் சிறிசேனா பேசியதாவது:-

  மூத்த வக்கீல்கள் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகளை ஆலோசித்த பின்னரே ஒவ்வொரு செயலையும் நான் மேற்கொண்டேன். நல்லெண்ண அடிப்படையில் நான் செயல்பட்டிருக்கிறேன். அதற்காக வரலாற்றில் நினைவு கூரப்படுவேன்.

  சுமார் 1½ கோடி மக்களின் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால் 122 எம்.பி.க்கள் அதை தடுத்து விட்டனர். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளேன்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இலங்கையில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறியதாவது:-

  அண்டைய நாடு மற்றும் உண்மையான நட்புநாடு என்ற வகையில் இலங்கையில் நிலவிய அரசியல் குழப்