search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri lanka blasts"

    இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்து விட்டதாக சிறிசேனா தெரிவித்து உள்ளார். #SriLanka #sirisena
    கொழும்பு:

    இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இஸ்லாமிய மதகுரு ஜக்ரன் ஹசீம் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், ஒட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மதகுரு ஜக்ரன் ஹசீம் உயிரிழந்து விட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்து உள்ளார். 

    தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜக்ரன் ஹசீம் செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.  #SriLanka #sirisena
    இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்களை எந்த மதமும் போதிக்கவில்லை என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #vaiko #srilankablasts

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்கள், மனித நேயம் மனம் கொண்டோரைப் பதைபதைக்கச் செய்து இருக்கின்றது.

    359 பேர்களைப் பலி வாங்கி இருக்கின்ற இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற ஐ.எஸ் அமைப்பு, நியூசிலாந்து நாட்டில் மசூதி மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது.

    யாரோ ஒரு இனவெறியன் செய்த தவறுக்காக, எந்தக் குற்றமும் செய்யாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.

    நியூசிலாந்து தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை. உலகமே கண்டித்து இருக்கின்றது. பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும், அன்பையும், அறத்தையுமே வலியுறுத்துகின்றன.


    உலக அரங்கில் மாறி வருகின்ற அரசியல் சூழ் நிலைகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமைகளை வலியுறுத்துகின்ற ஐரோப்பாவின் பல நாடுகளில், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், வெள்ளை இனவெறியை வளர்க்கும் வலதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து இருக்கின்றன. அங்கேயும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகி இருக்கின்றன.

    ஐ.எஸ். போன்ற வன்முறை இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்துகின்ற சூழல் உருவாகி இருக்கின்றது.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந் தகைகளின் வழிகாட்டுதலில், திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட தமிழகத்திலும், சாதி மத வெறிப் பேச்சுகள் பெருகி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இத்தகைய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது.

    சாதி, மத மோதல்களால் பாதிக்கப்படுவோர் அப்பாவிப் பொதுமக்கள்தான். வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம்.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.  #vaiko #srilankablasts

    சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். #SriLankablasts
    மங்களூரு:

    இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஓட்டல் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 359 பேர் மரணம் அடைந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த குண்டுவெடிப்பில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூரை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் சரபத்கட்டே பகுதியில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இந்த நிலையில் அவர்கள் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக இலங்கை செல்ல முடிவு செய்தனர். அதன்படி தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்கள் கடந்த 21-ந்தேதி இலங்கைக்கு சென்றனர். அந்த சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்களுக்கு இலங்கை கொழும்பு நகரில் உள்ள ‘தி சின்னமோன் கிராண்ட்’ (குண்டு வெடித்த ஓட்டல்) என்ற ஓட்டலில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே சுற்றுலா நிறுவனம், அவர்களுக்கு அந்த ஓட்டலுக்கு பதிலாக அருகில் உள்ள மற்றொரு ஓட்டலில் அறையை பதிவு செய்து கொடுத்தது. இதனால் அவர்கள் அந்த ஓட்டல் அறையில் இருந்தனர். அப்போது தான் ‘தி சின்னமோன் கிராண்ட்’ ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அந்த ஓட்டலில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    தனியார் சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பினர். அவர்கள் உயிர் தப்பிய தகவலை கேட்டு வேனூரில் உள்ள தம்பதியின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடவுள் அருளால் கேசவராஜூம், ஸ்ரீதேவியும் உயிர் பிழைத்து உள்ளனர்’ என்றனர். #SriLankablasts
    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #SriLankablasts
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதோடு, பார்வையாளர் மாடமும் மூடப்படும்.

    இந்த நிலையில் இலங்கையில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 310 பேர் பலியான சம்பவத்தையடுத்து இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, போலீசார் அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #SriLankablasts

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #SriLankablasts
    கன்னியாகுமரி:

    இலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இலங்கையையொட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாலும், அவர்களால் தமிழகத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற முன் எச்சரிக்கை காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நேற்று குமரி மாவட்டத்தின் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமிழகம் வருகையை யொட்டியும் கடல் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று குமரி கடல் பகுதியில் ‘சவுகாஜ்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் நீலமணி, நாகராஜன், சுடலைமணி மற்றும் அனில்குமார், சுப்பிரமணி ஆகியோர் அதிநவீன படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் பகுதி வரை குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் பாதுகாப்பு எல்லை உள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டனர்.

    அதேப்போல குமரி மாவட்டத்தின் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனம் மூலம் ரோந்துப்பணியும் நடத்தப்பட்டது.

    இந்த பகுதியில் உள்ள 72 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியில் படகு மூலமும் கண்காணிப்பு நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி, சின்ன முட்டம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம் உள்பட 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனகளும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. நாளை காலை 10 மணி வரை இந்த கண்காணிப்பு பணி நீடிக்கும்.  #SriLankablasts

    இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்திற்கு போக வேண்டாம் என்று தன் தந்தை கூறியதாக அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #harinfernando #SriLankaBlasts
    கொழும்பு:

    இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை தொலைத் தொடர்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்குதல் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், கூறியதாவது:-



    ‘சில உளவு அமைப்புகள் இந்தத் தாக்குதல் தொடர்பாக முன்னரே எச்சரிக்கை செய்து இருந்தனர். ஆனால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. உளவுத்துறையின் எச்சரிக்கை என் தந்தைக்கு நேற்று இரவே தெரிந்தது. ‘சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் இருக்கின்றன. சர்ச்சுக்குச் செல்ல வேண்டாம்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

    உளவு அமைப்புகள் எச்சரிக்கை கொடுத்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’

    இவ்வாறு அவர் கூறினார். #harinfernando #SriLankaBlasts
    இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #SriLankablast #Rameswaramtemple
    ராமேசுவரம்:

    இலங்கையில் தேவாலயங்களை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

    குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட், கப்பல் மற்றும் சிட்டா ஹெலிகாப்டரிலும் வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் கோவிலுக்குள்ளும் அவ்வப்போது மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். #SriLankablast #Rameswaramtemple
    இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய மந்திரி சுஷ்மா தெரிவித்தார். #SriLankaAttacks #IndiansKilled #SriLankablasts
    புதுடெல்லி:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.



    இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இத்தகவலை இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்திருப்பதாக சுஷ்மா டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இலங்கையில் உள்ள இந்தியர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான +94777903082, +94112422788, +94112422789 என்ற ஹெல்ப்லைன் எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #SriLankaAttacks #IndiansKilled #SriLankablasts
    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். #PMModi #Modicondemns #SriLankablasts
    புதுடெல்லி:

    இலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 140  பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கோழைத்தனமான இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ’இலங்கையில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்போன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை.



    துயரமான இந்த வேளையில் இலங்கை மக்களுடன் இந்தியா துணையாக நிற்கும். இன்றைய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #Modicondemns #SriLankablasts
    ×