search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wickremesinghe"

    • செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.
    • பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் பதவி நீட்டிப்பு உதவியாக இருக்கும் என கருகிறது.

    இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்துள்ளது. இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. இலங்கையின் அதிபராக விக்ரமசிங்கே இருந்து வருகிறார். பொருளாதார மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த வருடம் செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் அதன் அலுவலக செயல்பாட்டையும் இரண்டு வருத்திற்கு நீட்டிக்க வேண்டும். இது மிகவும் தேவையான பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் என பரிந்துரை செய்துள்ளது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் இது அரசியலமைப்புக்கு எதிரானது என உடனடியாக விமர்சனம் செய்துள்ளன.

    தேசம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதை சமாளித்து வெற்றி பெற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கொடுத்தன.

    சர்வதேச நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளோம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம், இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். நிர்வாக சீர்திருத்தங்கள் ஆட்சியை நெறிப்படுத்தியுள்ளன, மேலும் கல்வி முறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பளிதா ரங்கே பண்டாரா தெரிவித்துள்ளார்.

    அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது பொது வாக்கெடுப்பு வழிவகுக்கும் என அக்கட்சி நம்புகிறது.

    எதற்காக இரண்டு வருடம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான முழு விவரத்தையும் பண்டாரா குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை அரசு ஐஎம்எஃப், உலக வங்கி, நன்கொடையாளர்களடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவற்றை வெற்றிகரமாக செய்த முடிக்க அதிபர் பதவியை இரண்டு வருடங்கள் நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    • இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • இந்த விழாவில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பங்கேற்றார்.

    கொழும்பு:

    ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.

    சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றதுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை வி.முரளீதரன் தனித்தனியாக சந்தித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுதொடர்பாக வி.முரளீதரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும், நம்பகமான நண்பராகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    இந்த 75-வது சுதந்திர தின விழாவை இலங்கையின் எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை அதிபரை சந்தித்த மத்திய மந்திரி முரளீதரன்

    இலங்கை மந்திரிகள் நியமனத்தில் அதிபர் சிறிசேனாவுடன் கருத்துவேறுபாடு உள்ளது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒப்புக்கொண்டார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
    கொழும்பு:

    இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே கடந்த 16-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் எதிர்பாராத தாமதமாக 3 நாட்கள் கழித்து 30 பேர் கொண்ட மந்திரிகள் பட்டியலை கடந்த வியாழக்கிழமை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

    அதில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பரிந்துரைத்த சிலரது பெயர்கள் ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு படைகள் மற்றும் போலீஸ் இலாகாவை அதிபர் சிறிசேனாவே வைத்துக்கொண்டார். இது அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே அதிகார மோதல் இருப்பதை காட்டியது.



    இதுபற்றி விக்ரமசிங்கே கூறியதாவது:-

    சில ஊடகங்கள் போலியான மந்திரிகள் பட்டியலை வெளியிட்டதுடன், அதனை அதிபர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் செய்தி வெளியிட்டன. இலங்கை சுதந்திரா கட்சி உறுப்பினர் விஜித் விஜயமுனி சோய்சாவை நான் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அவர் பெயர் மந்திரிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் சில ஊடகங்கள் வெளியிட்டன.

    இதன்மூலம் மக்களை திசைதிருப்ப அவை முயற்சித்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மந்திரிகள் நியமனத்தில் அதிபருடன் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் மந்திரிசபை நியமனம் எப்படி நடந்தது என்பது பற்றி பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
    இலங்கை பாராளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். #LankaParliamentspeaker #Wickremesinghe
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.

    பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்தார்.

    இந்நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்தார். இதைதொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் அரசு கார் திரும்பப்பெறப்பட்டது.

    தற்போது, இலங்கை அரசியலில் உச்சகட்ட திருப்பமாக ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பாராளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதிவரை முடக்கி வைத்துள்ள அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற முடக்கம் நாட்டில் மிக தீவிரமான, விரும்பத்தகாத எதிரிவிளைவுகளை ஏற்படுத்தி விடும் என தனது கடிதத்தில் அவர் எச்சரித்துள்ளார்.

    சபாநாயகருடன் ஆலோசித்த பின்னரே பாராளுமன்றத்தை கூட்டவும், முட்டகவும் வேண்டும். எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மைத்ரிபாலா சிறிசேனாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கேவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் இலங்கை அரசியலில் தற்போது உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. #LankaParliamentspeaker #Wickremesinghe 
    ×