search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranil Wickramasinghe"

    • இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாயில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
    • அப்போது, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியை வழி நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    துபாய்:

    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வழியில் நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்தார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவரை சந்தித்தார்.

    அப்போது, ரணில் விக்ரமசிங்கே மம்தாவிடம், உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சிரித்தவாறே பதிலளித்த மம்தா பானர்ஜி, அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் எங்களை ஆதரித்தால், நாங்கள் நாளை ஆட்சியில் இருப்போம் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாய் விமான நிலைய ஓய்வறையில் என்னை சந்தித்தார். கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். பணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். அப்போது, கொல்கத்தாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவரை அழைத்தேன். இலங்கை வருமாறு எனக்கு அவரும் அழைப்பு விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    • ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
    • தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்ட திருத்தம் முழுமையாக அமல்படுத்தப் படவில்லை.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம், இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்கள கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் கட்சிகள், தமிழ் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறும்போது கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மக்களின் நலனுக்காக கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

    இது ஒரு உண்மையான முயற்சியாக இல்லாமல் அரசியல் வித்தை என்று நிரூபிக்கப்பட்டால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது என்றார்.

    முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

    • கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    அந்த சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்தக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஒருங்கிணைந்த இலங்கையின் வளர்ச்சிக்காகவும், இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, தங்கள் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் அதிபரின் செயலகத்தில் நடக்கிறது.

    இதுகுறித்து அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அதிபர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அதிபர் செயலகத்தில் நாளை நடைபெறும். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். இதில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட அனைத்து கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்க திட்டம் பற்றி எடுத்துரைக்கப்படும்.

    • சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை இலங்கை அதிபர் தாக்கல் செய்தார்.

    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை வரலாறு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

    இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சில நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் வகையில் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் கடனுதவி பெறுவதற்கான பேச்சு இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் பொருளாதார மீட்பு திட்டம் உறுதி செய்யப்படும்.

    பல நாடுகளிடம் இருந்து வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதை மாற்றி அமைப்பது தொடர்பாக அந்த நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் என தெரிவித்தார்.

    • இந்தியாவின் சுதந்திர தினத்தன்று கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ட்ரோனியர் ரோந்து விமானத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.

    இந்நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், முன்னாள் பிரதமர் நேரு இலங்கைக்கு செய்த உதவிகளை சுட்டிக்காட்டினார். அத்துடன் ஐ.நா.சபையில் இலங்கை இடம் பெறுவதற்கு நேரு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

    மேலும், இந்தியாவும் இலங்கையும் ஒரு நாணயத்தில் இரு பக்க‌ங்கள். இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது. விமானம் வழங்கியிருப்பதன் மூலம் இரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்தியா ராமரை மாவீரனாக பார்க்கிறது. ஆனால் இலங்கை ராமர், ராவண‌ன் இருவரையும் மாவீர‌ர்களாக பார்க்கிறது என தெரிவித்தார்.

    • இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.
    • இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என கூறினார்.

    கொழும்பு:

    இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இலங்கையில் இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தேவையான உதவிகளை வழங்கியது. என்னுடைய மக்கள் சார்பாகவும் மற்றும் எனது சொந்த அடிப்படையிலும், பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இலங்கைக்கு ஒரு வலுவான மற்றும் பரஸ்பரம் அதிக பயனுள்ள நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது.

    தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மலையக மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரசாங்க வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.

    கொரோனா பெருந்தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காலத்தில் உதவி செய்து வருவதுடன், இலங்கைக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
    • இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட பலர் பங்கேற்றனர்.

    கொழும்பு:

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.

    இதற்கிடையே, பாராளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முதல் மந்திரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து

    தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவே தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணததால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை அருகே முன்னேறி சென்றனர். அங்கு தடுப்பு வேலிகளை அமைத்து ராணுவத்தினர், போலீசார் அரணாக நின்றனர். தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். இதனால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடியுள்ளார். அவர் நேற்று இரவே தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், இலங்கை பாராளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாயாகரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார்.

    • சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு எரி பொருள் சிலிண்டர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • போதிய உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

    கொழும்பு, ஜூன். 5-

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    ஆனாலும் இன்னும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு எரி பொருள் சிலிண்டர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை வரும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு நாடுகளின் உதவிகள் நாடப்பட்டு உள்ளது. இதற்கு சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.

    இது கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். போதிய உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வருகிற செப்டம்பர், அக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும் அதன்பிறகு பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டாலும் ஏற்பட லாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    ஹம்பன்தோடா துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்துள்ளார். #RanilWickramasinghe #HambantotaPort
    கொழும்பு :

    இலங்கையில் உள்ள ஹம்பன்தோடா துறைமுக பகுதியில் மிகப்பெரிய தொழில் பூங்காவை சீனா அமைக்கிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாகவும், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய 3-வது ஆசிய ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 2 நாள் மாநாட்டில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்லுறவு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகம் சீன ராணுவ தளமாக மாறிவிடும் என்று சிலர் நினைப்பது தவறானது என்றும், அங்கு இலங்கை கடற்படை முகாம்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். #RanilWickramasinghe #HambantotaPort
    இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் நடவடிக்கைக்கு அதிபர் சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #sirisena #RanilWickramasinghe
    கொழும்பு :

    இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி 2015-ம் ஆண்டு சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

    ஆனால் ராஜபக்சேவால் 2 முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தேவையான பெரும்பான்மை (113 உறுப்பினர்கள்) இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது.

    சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந் தேதி புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டதையும் சுப்ரீம் கோர்ட்டு தடுத்துவிட்டது.

    இந்நிலையில் விக்ரமசிங்கே இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க திட்டமிட்டார். இதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஒரே ஒரு உறுப்பினருடனும், சிறிசேனாவின் சுதந்திரா கட்சியை சேர்ந்த சிலருடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். இதன்மூலம் மட்டுமே 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும்.

    இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அதிபர் சிறிசேனாவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக விக்ரமசிங்கேவின் கட்சி மீண்டும் அவரை ஆதரிக்காது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    ராஜபக்சே 2 முறை அதிபர் பதவி வகித்துள்ளதால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது புதிய கட்சியான இலங்கை மக்கள் கட்சியும் சிறிசேனாவை ஆதரிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே இந்த ஆண்டு இலங்கை அரசியலில் மிகவும் சிக்கலான ஆண்டாகவே இருக்கும் என கருதப்படுகிறது.



    இதற்கிடையே பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கோரிக்கைக்கு அதிபர் சிறிசேனா இலங்கை சுதந்திர தின விழா உரையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது மந்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மக்கள் பணத்தில் மந்திரிகளுக்கு சலுகைகள் வழங்குவதும் மட்டுமே. இது முறையற்றது. மந்திரிகள் 25 பேருக்குள் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.

    தேர்தல் நடைபெற உள்ள இந்த ஆண்டில் சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச பிற்போக்கு சக்திகள் பல்வேறு உருவங்களில் இலங்கைக்குள் வந்துள்ளன.

    இலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் தமிழர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்பதே தேசிய அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த வாரம் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக சிறிசேனா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. #sirisena #RanilWickramasinghe
    இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா பதவியில் இருந்து நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்கினார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே இலங்கை அரசியலில் குழப்பம் நிலவியது.

    அதன்பின்னர் ஏற்பட்ட குழப்பம் நீங்கி ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதே நேரம் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.

    பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபச்சே ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    “பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு பாராளுமன்றத்தில் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாததால் அவரால் புதிய சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது.

    இதனால் நாட்டில் பிளவு ஏற்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ரனில் விக்ரமசிங்கே நிறைவேற்றவில்லை. எனவே இது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது.

    எனவே தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் பேசும்போதும் இதே கருத்தை தான் அவர் வலியுறுத்தினார்.

    ரனில் விக்ரமசிங்கே அரசு அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து புதிய சட்ட வரையறு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் சிங்களர்களின் ஆதிக்கம் குறைந்து விடும் என ராஜபக்சே அரசு குற்றம் சாட்டி வருகிறது. #Rajapaksa
    ×