search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school administration"

    • பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுவன் வீட்டுக்கு வராத நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

    இன்று காலை சிறுவன் படித்து வந்த தனியார் பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு பள்ளியில் உள்ளவர்கள் மழுப்பலாக பதிலளித்து அவரைகளை உள்ளே விட மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

    அப்போது பள்ளியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிறுவனின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கும்பலைக் கட்டுப்படுத்தி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முற்றக்கட்டமாக சிறுவன் பள்ளிக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    எனவே சிறுவனைக் கொன்று சடலத்தை மறைத்து வைத்ததாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ரப்பர் டயர்களுக்கும் பள்ளியின் சுவர்களுக்கும்  தீ வைத்து போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • மாணவர்கள் பள்ளியில் ஸ்மார்ட்போன் உபயோகிக்க ஏற்கெனவே தடை உள்ளது
    • குழந்தைகளின் கைகளில் இணையமா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகளா என கேட்கிறார்

    வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பள்ளி நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.

    இந்நிலையில், அங்குள்ள 8 பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் எலிமென்டரி எனப்படும் ஆரம்ப பள்ளி பருவம் முடியும் வரை மொபைல்போன் உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான வயதை அடையும் வரையில் பள்ளி, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மொபைல் போன் உபயோகிக்க முடியாது.

    "சிறு குழந்தைகளிடம் காணப்படும் பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்து இந்நகர மக்கள் தந்திருக்கும் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. குழந்தைகளின் கைகளில் இணையம் இருக்கிறதா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகள் உள்ளனரா என கணிக்க முடியாத அளவிற்கு இணையத்தில் வரும் தகவல்களால் அவர்கள் கல்வியில் கவனச்சிதறலுடன் மன அழுத்தம், மறதி, மற்றும் தூக்கமின்மை உட்பட பல சிக்கல்கள் தோன்றின" என அந்நகர மருத்துவ உளவியல் நிபுணர் ஜஸ்டினா ஃப்ளின் தெரிவித்தார்.

    இந்த ஆண்டு துவக்கத்தில் இதே கருத்தை ஐக்கிய நாடுகளின் சபையும் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×