என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elementary school"
- வகுப்பறையில் உள்ள அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றிலும் இப்போதே கீறல் விழுந்துள்ளது.
- பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு என 3 கட்டிடங்கள் கட்டப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தான் இந்தக் கட்டிடம் பயன் பாட்டுக்கு வந்தது. சுமார் 90 மாணவ-மாணவிகள் படிக்கின்ற இந்த நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடத்தில் 7-ம் வகுப்பு வகுப்பறையில் மேலே உள்ள மேற்கூரை சுவர் திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதனால் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கை வளைந்தது.
வகுப்பறையின் மேற் கூரை சுவர் இடிந்து விழுவதற்கு முன்னதாக அனைத்து மாணவ-மாணவிகளும் வகுப்பறைகளை விட்டு இறைவணக்கம் பாடுவதற்காக மைதானத்தில் ஒன்று கூடி இருந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டிடத்தை ஒப்பந்ததாரர், தரமற்ற எம் சாண்ட் மற்றும் கற்களை வைத்து கட்டி இருப்பதால் அது இடிந்து விழுந்துள்ளது தெரிய வந்தது. மேலும் வகுப்பறையில் உள்ள அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றிலும் இப்போதே கீறல் விழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களில் மேற் கூரை இடிந்து விழுந்துள்ளதால், மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவ-மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, தரமான முறையில் புதிய கட்டிடத்தை கட்டித் தரவேண்டும்' என்று கூறியுள்ளனர்.
- விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு முதல் காலை ஏழு மணி வரை லேசான தூரல் மழை பொழிந்தது.
இதன் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்பும் விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளித்ததை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 9, மேல் ஆலத்தூரில் 104.20, ஒடுகத்தூரில் 18, விரிஞ்சிபுரத்தில் 3, காட்பாடியில் 27, வேலூரில் 15.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவும் திடீரென மழை பெய்தது. இரவு முழுவதும் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டையில் 27.6, பாலாறு அணைக்கட்டு 4.8, வாலாஜாவில் 15, அம்மூரில் 20, ஆற்காட்டில் 24.8, அரக்கோணத்தில் 14, மின்னலில் 24.4, காவேரிப்பாக்கத்தில் 33, பனப்பாக்கத்தில் 34.4, சோளிங்கரில் 8.2, கலவையில் 38.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதில் திருவண்ணாமலை யில் 15 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 1.40, போளூரில் 17.40, ஜமுனா மரத்தூரில் 10, கலசபாக்கத்தில் 62, தண்டராம்பட்டில் 4, ஆரணியில் 18.80, செய்யாறில் 60, வந்தவாசியில் 17, கீழ்பெண்ணாத்தூரில் 63.40, வெம்பாக்கத்தில் 27, சேத்துப்பட்டு 7.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் லேசான மழை பெய்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டறம்பள்ளியில் 1.20, வாணியம்பாடியில் 5, ஆம்பூரில் 24.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- மாணவர்கள் பள்ளியில் ஸ்மார்ட்போன் உபயோகிக்க ஏற்கெனவே தடை உள்ளது
- குழந்தைகளின் கைகளில் இணையமா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகளா என கேட்கிறார்
வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பள்ளி நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள 8 பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் எலிமென்டரி எனப்படும் ஆரம்ப பள்ளி பருவம் முடியும் வரை மொபைல்போன் உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான வயதை அடையும் வரையில் பள்ளி, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மொபைல் போன் உபயோகிக்க முடியாது.
"சிறு குழந்தைகளிடம் காணப்படும் பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்து இந்நகர மக்கள் தந்திருக்கும் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. குழந்தைகளின் கைகளில் இணையம் இருக்கிறதா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகள் உள்ளனரா என கணிக்க முடியாத அளவிற்கு இணையத்தில் வரும் தகவல்களால் அவர்கள் கல்வியில் கவனச்சிதறலுடன் மன அழுத்தம், மறதி, மற்றும் தூக்கமின்மை உட்பட பல சிக்கல்கள் தோன்றின" என அந்நகர மருத்துவ உளவியல் நிபுணர் ஜஸ்டினா ஃப்ளின் தெரிவித்தார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இதே கருத்தை ஐக்கிய நாடுகளின் சபையும் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரசு தொடக்கப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை நடப்பதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கையில் பார்வைத் திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 முதல் 15 வயது வரை உள்ள பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம். விடுதி சார்ந்த இப்பள்ளியில் உணவு, உடை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்த பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளால் பிரெய்லி முறையில் கல்வியுடன் உடற்கல்வி மற்றம் கணினி பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. விடுதியில் பார்வையற்ற மாணவர்களை கனிவுடன் கவனிக்க விடுதி பணியா ளர்கள் உள்ளனர். இப்பள்ளியில் சேர தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு இளையான்குடி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.
முத்துப்பேட்டை:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
தேர்தல் ஆணையராக திருத்துறைப்பூண்டி வட்டார செயலாளர் ஹரிகிருஷ்ணன், துணை ஆணையராக வேதரெத்தினம் ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் வட்டார தலைவராக சரவணன், வட்டார செயலாளராக செல்வசிதம்பரம், பொருளாளராக சுரேஷ், துணை தலைவர்களாக சீனிவாசன், பழனித்துரை, வாசுகி துணை செயலாளர்களாக செந்தில்குமரன், ராஜசேகரன், உஷா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், ஆறுமுகம், பாரதி, சசிகலா, ராணி ஆகியோரும், வட்டார செயற்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், முரளி, சாமிநாதன், சீனிவாசன், இந்திரா, விஜயராணி, அன்புச்செல்வி, அறிவழகன், பன்னீர்செல்வம், சாகுல் ஹமீது, சோமசுந்தரம், மாரிமுத்து, மகாதேவன், பொதுவுடை, முருகானந்தம், பாலகிருஷ்ணன், முருகேசன், பாஸ்கரன், வீரமணி, கார்த்திகை செல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.
இதில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.
- இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளி இருக்கும் இடம் தனியாருக்கு பாத்தியப்பட்டது ஆகும். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்றவர்கள் இன்று நீதிமன்ற பணியாளர்களுடன் பள்ளிக்கு சீல் வைக்க சென்றனர்.
இதை அறிந்த அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்