டவுனில் தொடக்க பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்

நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளி இருக்கும் இடம் தனியாருக்கு பாத்தியப்பட்டது ஆகும். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்றவர்கள் இன்று நீதிமன்ற பணியாளர்களுடன் பள்ளிக்கு சீல் வைக்க சென்றனர்.

இதை அறிந்த அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com