search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    மழையால் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை

    • விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

    பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு முதல் காலை ஏழு மணி வரை லேசான தூரல் மழை பொழிந்தது.

    இதன் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்பும் விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளித்ததை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 9, மேல் ஆலத்தூரில் 104.20, ஒடுகத்தூரில் 18, விரிஞ்சிபுரத்தில் 3, காட்பாடியில் 27, வேலூரில் 15.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவும் திடீரென மழை பெய்தது. இரவு முழுவதும் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    ராணிப்பேட்டையில் 27.6, பாலாறு அணைக்கட்டு 4.8, வாலாஜாவில் 15, அம்மூரில் 20, ஆற்காட்டில் 24.8, அரக்கோணத்தில் 14, மின்னலில் 24.4, காவேரிப்பாக்கத்தில் 33, பனப்பாக்கத்தில் 34.4, சோளிங்கரில் 8.2, கலவையில் 38.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.

    இதில் திருவண்ணாமலை யில் 15 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 1.40, போளூரில் 17.40, ஜமுனா மரத்தூரில் 10, கலசபாக்கத்தில் 62, தண்டராம்பட்டில் 4, ஆரணியில் 18.80, செய்யாறில் 60, வந்தவாசியில் 17, கீழ்பெண்ணாத்தூரில் 63.40, வெம்பாக்கத்தில் 27, சேத்துப்பட்டு 7.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் லேசான மழை பெய்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டறம்பள்ளியில் 1.20, வாணியம்பாடியில் 5, ஆம்பூரில் 24.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×