பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை

அரசு தொடக்கப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை நடப்பதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை
Published on

சிவகங்கை

சிவகங்கையில் பார்வைத் திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 முதல் 15 வயது வரை உள்ள பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம். விடுதி சார்ந்த இப்பள்ளியில் உணவு, உடை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளால் பிரெய்லி முறையில் கல்வியுடன் உடற்கல்வி மற்றம் கணினி பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. விடுதியில் பார்வையற்ற மாணவர்களை கனிவுடன் கவனிக்க விடுதி பணியா ளர்கள் உள்ளனர். இப்பள்ளியில் சேர தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு இளையான்குடி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com