search icon
என் மலர்tooltip icon

    அயர்லாந்து

    • கார் விபத்தினால் தன்னால் செயல்பட முடியவில்லை என கமிலா தெரிவித்தார்
    • புகைப்படத்தில் கமிலா 5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது

    ஐரோப்பாவில் உள்ள நாடு அயர்லாந்து (Ireland). இதன் தலைநகரம் டப்லின் (Dublin).

    அயர்லாந்தில் வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா (Kamila Grabska). அவருக்கு வயது 36.

    2017ல், கமிலா, ஒரு கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு கழுத்து பகுதியிலும், முதுகு தண்டிலும் ஏற்பட்ட காயங்களால் 5 வருடங்கள் செயல்பட முடியாமல் இருந்ததாகவும், அவரால் தன் குழந்தைகளுடன் கூட விளையாட முடியவில்லை என கூறி கார் விபத்தின் காரணமாகத்தான் இந்த செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து காப்பீட்டு நிறுவனத்தில், இழப்பீட்டு தொகையை கோரினார்.

    கமிலா கோரிய ரூ.7 கோடியை ($8,20,000) அவர்கள் தர மறுத்ததால், கமிலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    மேற்கு அயர்லாந்தின் "லைம்ரிக்" (Limerick) பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

    தனது சமகால ஊதிய இழப்புடன் எதிர்கால உத்தேச ஊதிய இழப்புடன் சுமார் ரூ.7 கோடி இழப்பீடு கோரியிருந்தார்.

    அந்த விசாரணையின் போது 2018ல் ஒரு நன்கொடை நிகழ்ச்சியின் போது கமிலா பங்கேற்ற புகைப்படங்கள் அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், ஒரு மணி நேரம் தனது நாயுடன் ஒரு பூங்காவில் அவர் சாதாரணமாக நேரம் கழிக்கும் வீடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது.


    அந்த புகைப்படங்களில் ஒன்றில் கமிலா 5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது.

    இதனால், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, "பெரிதாக காணப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை எளிதாக கமிலா எறிவது புகைப்படத்தில் தெரிகிறது. தன்னை முடக்கும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டதாக கமிலா கூறி காப்பீட்டை கோருவது மிகைப்படுத்தலாக தெரிகிறது. எனவே, அவரது வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என தீர்ப்பளித்தார்.

    • பள்ளிக்கு வெளியே நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம்.
    • இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே திடீரென கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி தாக்கினார்.

    இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஐந்து வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, சம்பவ இடத்தில் 100-க்கும் அதிகமானோர் கூடினர். அவர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய கோபத்தில், அவர்கள் வாகனங்களை தீயிட்டு எரித்தனர். மேலும், அருகில் உள்ள கடைகளை சூறையாடினர். சூழ்நிலை மோசமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே, கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் பயங்கரவாத செயலுக்கான ஆதாரம் இல்லை. இருந்தபோதிலும் முழு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டம் நாடு முழுவதும விரிவடைந்து விடக்கூடாது என போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாராளுமன்றத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் பள்ளியில் ஸ்மார்ட்போன் உபயோகிக்க ஏற்கெனவே தடை உள்ளது
    • குழந்தைகளின் கைகளில் இணையமா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகளா என கேட்கிறார்

    வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பள்ளி நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.

    இந்நிலையில், அங்குள்ள 8 பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் எலிமென்டரி எனப்படும் ஆரம்ப பள்ளி பருவம் முடியும் வரை மொபைல்போன் உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான வயதை அடையும் வரையில் பள்ளி, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மொபைல் போன் உபயோகிக்க முடியாது.

    "சிறு குழந்தைகளிடம் காணப்படும் பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்து இந்நகர மக்கள் தந்திருக்கும் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. குழந்தைகளின் கைகளில் இணையம் இருக்கிறதா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகள் உள்ளனரா என கணிக்க முடியாத அளவிற்கு இணையத்தில் வரும் தகவல்களால் அவர்கள் கல்வியில் கவனச்சிதறலுடன் மன அழுத்தம், மறதி, மற்றும் தூக்கமின்மை உட்பட பல சிக்கல்கள் தோன்றின" என அந்நகர மருத்துவ உளவியல் நிபுணர் ஜஸ்டினா ஃப்ளின் தெரிவித்தார்.

    இந்த ஆண்டு துவக்கத்தில் இதே கருத்தை ஐக்கிய நாடுகளின் சபையும் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இரு போட்டிகளிலும் இந்தியா வென்றது.
    • மழையால் 3வது போட்டி ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்க இருந்தது. மழையின் காரணமாக போட்டி தடைப்பட்டது. மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படவில்லை.

    இந்நிலையில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்தானது. இதையடுத்து, டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.

    • இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • இதுவரை விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.

    முதல் 2 ஆட்டத்தில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் பும்ரா வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிதேஷ் சர்மா, ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இன்னும் வாய்ப்பை பெறவில்லை.

    இந்திய அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோரும், பந்துவீச்சில் கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பால் ஸ்டிரிங் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக போராடும்.

    இரு அணிகள் இடையே இதுவரை நடந்த 7 டி20 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    • அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அத்துடன், டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்தியா 185 ரன்களை சேர்த்தது. ருத்ராஜ் கெய்க்வாட் அரை சதமடித்து 58 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

    அடுத்து ஆடிய அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ரிங்கு சிங்குக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் பும்ரா பேசியதாவது:

    வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.

    விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எதிர்பார்ப்புகளை ஓரம்வைத்து சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்.

    திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு185 ரன்கள் எடுத்தது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். சாம்சன் 40 ரன்னும், ரிங்கு சிங் 38 ரன்னும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் மட்டும் போராடினார். அவர் அரை சதமடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க் அடைர்23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்தியா சார்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    • 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதைதொடர்ந்து, இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, சாம்சன் 40 ரன்களும், ரங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களும், திலக் வர்மா ஒரு ரன்னும் எடுத்தனர்.

    வாஷிங்டன் சுந்தர் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

    இதைதொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.

    • முதலில் ஆடிய அயர்லாந்து 139 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது. பாரி மெக்கார்தி அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். கேம்பர் 39 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். திலக் வர்மா டக் அவுட்டானார். ருதுராஜ் 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
    • இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
    • இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார்.

    ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பால்பிரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    • இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
    • வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜஸ்பிரித் பும்ரா, ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நேற்று விமானம் மூலம் அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.

    இந்திய அணி கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.கே .வீரர் ருதுராஜ் கெய்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டப்ளினில் நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. 2-வது டி20 போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும், 3-வது டி20 போட்டி 23-ம் தேதியும் நடைபெறுகிறது.

    ×