search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people fear"

    • இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.
    • சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து மாலை வரை நீடிக்கிறது. மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து சுமார் 108 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    இதனால் வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    பெரும்பாலும் மக்கள் மதிய நேரம் வெளியே செல்லும்போது நெருப்பில் நடப்பது போல் இருப்பதால் அவர்கள் வெளியே நடமாடுவதை குறைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் நீர்சத்து உள்ள உணவு வகைகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் ஈரோட்டில் பெரும்பாலான இடங்களில் கம்மங்கூழ் மற்றும் ஜூஸ் கடைகள் அதிகளவில் உருவாகி வருகிறது.

    ஈரோட்டில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஒரு சில இடங்களில் மட்டுமே கம்மங்கூழ் கடைகள் இருந்தது. ஆனால் மக்கள் பகல் நேரங்களில் அதிகளவில் கம்மங்கூழ் மற்றும் ராகி கூழ் அருந்தி வருகிறார்கள். ஒரு சிலர் வீடுகளில் கூழ் செய்து அருந்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கூழ்கள் தேவை அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாநகரில் கூழ் கடைகள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையம் பகுதியில் 10-க்கு மேற்பட்ட கடைகள் வியாபாரிகள் அமைத்து உள்ளனர். இந்த கடைகளில் ஏராளமான மக்கள் வந்து கம்மங்கூழ் வாங்கி பருகி வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, சத்தி ரோடு, பன்னீர் செல்வம் பார்க் பகுதி, வீரப்பன்சத்திரம், ரெயில் நிலையம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் கம்மங்கூழ் கடைகள் வழக்கத்தை விட அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஈரோடு மூலப்பட்டறை அருகே வ.உ.சி. பார்க் பகுதி, சேலம் ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய இடங்களில் கம்மங்கூழ் கடைகள் அதிகரித்து உள்ளது. அந்த பகுதியில் 1 கடை மட்டுமே இருந்தது. தற்போது அங்கு பல கடைகள் உருவாகி உள்ளது. அங்கு கம்மங்கூழ், ராகி கூழ், மோர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வழக்கத்தை விட வியாபாரம் அதிகரித்து உள்ளது.

    மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் சிறிய சந்துகள் உள்பட எங்கு பார்த்தாலும் கம்மங்கூழ் கடைகள் உள்ளது. இதனால் கம்மங்கூழ் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சாத்துக்குடி, தர்பூசணி உள்பட நீர் சத்துள்ள பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் ஈரோட்டில் கரும்பு ஜூஸ் கடைகளும் அதிகளவில் உள்ளது. இந்த கடைகளில் மக்கள் அதிகளவு வந்து கரும்பு ஜூஸ்களை பருகி வருகிறார்கள்.

    • திருச்சி கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்
    • போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மிக வேகமாக வளர்ச்சி பெறும் பகுதியாக இருந்து வருவது கே.கே.நகர். இதன் ஒரு பகுதியான ஆசாத் நகரில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவியின் கழுத்தில் இருந்து மர்ம நபர் செயினை பறித்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு செயின் பறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.

    இவரது மனைவி சரோஜா (70). கணவர் மறைவுக்கு பிறகு சரோஜா, தனது மகன் பாலமுருகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    முன்னதாக தான் வசித்த திருச்சியில் உள்ள வீட்டை பாதுகாப்பதற்காக ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை நியமித்து தனது வீட்டினை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வந்து வீட்டினை பார்த்து விட்டு சென்றிருந்தார்.

    நேற்று மாலை மீண்டும் வீட்டினை பார்க்க வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பணிப்பெண் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வீட்டில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்த நகை திருடப்பட்டு இருந்ததை அறிந்து அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்ததை ஆய்வு செய்த காவல்துறையினர் இதுகுறித்து அமெரிக்காவில் இருக்கும் சரோஜாவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொடர் கொள்ளை சம்பவம் ஆசாத் நகர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரையில் வேகமாக பரவும் காய்ச்சலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • இதற்காக 172 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மதுரை

    மதுரையில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சம்

    ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த ப்பட்டன.

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் "இன்புளு" காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்களிடம் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு, கொரோனா உள்ளிட்ட தோற்றுப் பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இன்புளுவென்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. தொற்று நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ள 29 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் சுகா தாரத்துறையினர் முழு வீச்சில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 172 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் பரி சோதிக்கப்பட்டு வருகி றார்கள்.

    மேலும் காய்ச்சல் காரணமாக தினமும் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

    எனவே மதுரையில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    மாநகராட்சி பகுதியில் 29 இடங்களிலும், நகராட்சி களில் 9 இடங்களிலும், 13 பேரூராட்சி பகுதிக ளிலும், 19 கிராம பகுதிக ளிலும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்தொற்று பரவல் தொடர்பாகவும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வேகமாக பரவும் இன்புளு காய்ச்சலால் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மாமல்லபுரம் பகுதியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பீதியை தொடர்ந்து அரசு அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்தனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், தேவநேரி, மணமை, கடம்பாடி, பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம் பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் இன்று காலை மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் இருக்கிறதா? என்று அறிய ரத்த பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.

    இதை வரிசையில் நின்று கவனித்த மற்ற சாதாரண சளி, இருமல், தலைவலி மற்றும் தொடர் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும் பயத்தில் தங்களுக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வந்திருக்குமோ என்ற பயத்தில் மருத்துவர்களிடம் கட்டாய ரத்த பரிசோதணைக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்களிடையே நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் போதிய விழிப்புணர்வு விளக்கம் கொடுத்து நோயாளிகளை சமாதானப்படுத்தினர்.

    ×