search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் கொள்ளை"

    • கடந்த 7-ந் தேதி சித்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் சித்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் சித்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நகைக்கடைகள், வங்கிகள், மக்கள் அதிகம் கூடும் பஸ், ரெயில் நிலையங்கள், ஏ.டி.எம் மையங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சித்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக நிதி நிறுவன அதிகாரிகள் சித்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் சித்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அங்கு தங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ஹரிஷ் (வயது 24), ஜமுனா (50) என தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சிவக்கொள்ளை, லெட்சதோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்தனர்.
    • விசாரணையில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யில், எஸ் எஸ் ஐ தனபால், போலீசார் அருள்குமார், ஐயப்பன், பாஸ்கர் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சம்பவதன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது சிவக்கொள்ளை, லெட்சதோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த பட்டுக்கோட்டை நைனா குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வது39), கடலூர், திட்டக்குடி, கோனூர் பகுதியை சேர்ந்த பாலு (வயது 37) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    அதில் லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயசீலியின் வீட்டில் திருடியது, சூரப்பள்ளம் செல்லும் வழியில் உள்ள சன் சீல் என்ற இரும்பு கடையில் திருடியது, துவரங்குறிச்சி தனியார் பள்ளியில் லேப்டாப் மற்றும் அலுவலகப் பொருட்களை திருடி சென்றதும், கரம்பயத்தில் 2 வீட்டில் திருட்டு சம்பவத்தை நடத்தியது உள்பட பல்வேறு தொடர் திருட்டு சம்பவங்களை இவர்கள் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

    • திருச்சி கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்
    • போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மிக வேகமாக வளர்ச்சி பெறும் பகுதியாக இருந்து வருவது கே.கே.நகர். இதன் ஒரு பகுதியான ஆசாத் நகரில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவியின் கழுத்தில் இருந்து மர்ம நபர் செயினை பறித்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு செயின் பறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.

    இவரது மனைவி சரோஜா (70). கணவர் மறைவுக்கு பிறகு சரோஜா, தனது மகன் பாலமுருகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    முன்னதாக தான் வசித்த திருச்சியில் உள்ள வீட்டை பாதுகாப்பதற்காக ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை நியமித்து தனது வீட்டினை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வந்து வீட்டினை பார்த்து விட்டு சென்றிருந்தார்.

    நேற்று மாலை மீண்டும் வீட்டினை பார்க்க வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பணிப்பெண் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வீட்டில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்த நகை திருடப்பட்டு இருந்ததை அறிந்து அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்ததை ஆய்வு செய்த காவல்துறையினர் இதுகுறித்து அமெரிக்காவில் இருக்கும் சரோஜாவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொடர் கொள்ளை சம்பவம் ஆசாத் நகர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சி கே.கே. நகர் பகுதியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர்.
    • இந்த பகுதிகளில் தொடர் கொள்ளை முயற்சி சம்பவத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருச்சி;

    திருச்சி மாநகரில் அதிக அளவில் வளர்ச்சி பெறும் பகுதியாக உள்ளது கேகே நகர். இந்த பகுதி பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர். மேலும் திருச்சி மாநகரின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இருந்து வரும் பகுதியாகவும் உள்ளது.

    இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி கே கே நகர் தங்கையா நகர் அருகில் உள்ள சண்முகா நகர் பகுதியில் வீட்டில் இருந்த தாயை கட்டி போட்டுவிட்டு மகளிடம் பாலியல் சீண்டல் செய்து, கொள்ளை சம்பவம் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே சண்முகா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் ஜானகிராமன் என்பவரது வீட்டில் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஜன்னல் கதவுவை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் அவர்கள் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்ததுள்ளது தெரியவந்தது.

    இதேபோன்று தங்கையா நகரில் வசித்து வரும் சுங்கத்துறையில் பணியாற்றி வரும் விஜயலட்சுமி என்பவரது வீட்டிலும், அதற்கு எடுத்து எதிர் வீடான கராத்தே பயிற்சியாளராக இருக்கும் சங்கர் என்பவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடத்தப்பட்டது இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர் கொள்ளை சம்பவத்தால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×